கிறிஸ்தவராவது எப்படி

கிறிஸ்தவராவது எப்படி

நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்? கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது.

த்திய ஜீவனை பெற்றுகொள்வது எப்படி என்று ஒருவன் இயேசுவிடம் கேட்டதற்கு, “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16)

நீங்கள் எப்படி இயேசுவை விசுவாசிக்க முடியும்?

வேதம் இந்த கேள்விக்கும் பதில் அளிக்கிறது: "இயேசுவே தேவன் என்று உங்கள் நாவினால் அறிக்கை செய்து தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழும்பப்பண்ணினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்." (ரோமர் 10:9)

விசுவாசத்தில் 2 பகுதிகள் உள்ளன முதலாவது, இயேசுவே தேவன் அல்லது ஆண்டவர் என்று ஏற்றுக்கொள்ளுதல், அவர் நாம் பரலோகம் செல்லும்படிக்கு பாதையை செவ்வைபடுத்தும்படியாக பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து சிலுவையில் மரித்தார்.

இரண்டாவது, இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தார் என்பதை நம்பவேண்டும். அவர் சிலுவையில் மரித்தார், ஆனால் மரித்தவராகவே இருந்திடவில்லை. மீண்டும் உயிரோடு எழும்தார், அநேகருக்கு தரிசனமானார், அதன்பின்பு பரலோகத்திற்கு ஏறிச்சென்றார்.

இப்போதே கிறிஸ்துவை ஏற்றுகொள்ள நீங்கள் ஜெபம் செய்திடுங்கள்

பின்வரும் ஜெபத்தை ஏறெடுத்து நித்திய ஜீவனை நீங்கள் பெற்றுகொள்ளுங்கள்:

அன்பின் தெய்வம் இயேசுவே, நான் பாவம் செய்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். என்னை நானே இரட்சித்துக்கொள்ள முடியாதென்பதை அறிவேன். என் பாவங்களை சுமந்து சிலுவையில் எனக்காக மரித்ததற்காக நன்றி. உம்முடைய மரணம் எனக்காக சம்பவித்ததென்று அறிந்திருக்கிறேன், எனது சார்பில் நீர் தியாகமாய் மரித்ததை ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய முழுமனதுடன், என்னுடைய செயல்கள்மீதும் யன் மீதும் நான் வைத்த நம்பிக்கையை இப்போது உம்மீது வைக்க முன்வருகிறேன். என் இதயத்தின் வாசலை உமக்கு திறந்துதருகிறேன் விசுவாசத்தோடு உம்மை என் சொந்த இரட்சகராக தெய்வமாக ஏற்றுக்கொள்கிறேன். என் பாவங்களை மன்னித்து எனக்கு நித்தி ஜீவனை அளிப்பதற்காக உமக்கு நன்றி. ஆமென்.”

நீங்கள் கிறிஸ்தவராகும்படியான ஜெபத்தை ஏறெடுத்தீர்களா?

வேதம் கூறுகிறது நீங்கள் நித்திய ஜீவனை அடைந்திடுவீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்: "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்." (1யோவான் 5:13)

இன்றைக்கு நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுகொண்டிருந்தால் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து எங்களுக்கு தெரியப்படுத்திடுங்கள்.