இறைநம்பிக்கையற்றவர்களுக்கு ரவி சகரியாசின் பதில்கள் – நிகழ்ச்சி 2

இறைநம்பிக்கையற்றவர்களுக்கு ரவி சகரியாசின் பதில்கள் – நிகழ்ச்சி 2

 

 

இன்றைக்கு ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியில் Dr. ரவி சகரியாஸ் இறை நம்பிக்கையற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

அவர் இந்தியாவில் வளர்ந்தவர் அவருடைய முன்னோர்கள் பாரம்பரிய இந்துமத உயர்குல ப்ரோகிதர்கள். ஆனால் ஒருநாள் அவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேள்விப்பட்டு கிறிஸ்தவராக மாறினார். அவர் உலகிலேயே அதிக ஞானம் கொண்ட கிறிஸ்தவ விசுவாச தர்க்காப்பாளராக இருந்து வருகிறார், 70ற்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார் அங்கு அவர் பிரசித்திபெற்ற பல்கலைகழகங்களில் உரையாற்றுகிறார், குறிப்பாக ஹார்வர்ட், பிரின்ஸ்டன்,தர்மௌத், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம். அவர் தென் ஆப்ரிக்காவில் சமாதான உடன்படிக்கையின் அங்கத்தினர்களை சந்தித்திருக்கிறார், லெனின் மிலிடரி அக்கடமியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் மாஸ்கோவில் புவிசார் மூலோபாயத்தின் மையத்தையும் சந்தித்திருக்கிறார்.

மூன்று முறை நியூயார்க்கில் ஆக்கிய நாடுகளின் வருடாந்தர ஜெபத்தில் காலைஉணவின்போது பேசும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். அதோடு அரசாங்கத்தின் தேசிய அளவிலான ஜெபங்களில் காலைஉணவின் போது உரையாற்றியிருக்கிறார் ஒட்டாவா, கேனடா லண்டன் இங்கிலாந்து, அதோடு வாஷிங்டன்னில் CIA விழும் உரையாற்றியிருக்கிறார். ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியின் இந்த விசேஷித்த  பகுதியில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

 

—————–

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நிகழ்சிக்கு உங்களை வரவேற்கிறோம். நான் ஜான் அன்கேர்பெர்க். நீங்கள் இன்றைய நிகழ்ச்சியை பார்ப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய விருந்தினர் சிறந்த கிறிஸ்தவ சிந்தாந்த மேதையும், தர்க்காப்பாளருமான, ரவி சகரியாஸ். எனக்கு தெரிந்தவர்களில் ரவியை போல அதிகப்படியான நாடுகளுக்கு சென்று பல்கலைகழக மாணவர்களிடம் பேசியவர்கள் யாருமில்லை.

வருகிற வாரங்களில் ரவியிடம் உலகின் பலதரப்பட்ட இடங்களில் இருப்பவர்களோடு உரையாற்றும்படியாக கேட்டுக்கொண்டேன். அடுத்த வாரத்தில் துவங்க இருக்கிறோம் முதலாவதாக கிழக்கு தேசங்களில் இருக்கும் பல்கலைகழகம் மற்றும் கல்லூரி அழிந் கேள்விகளுக்கு பதில் அளித்திடுவார். அதற்கு பிறகு மத்திய கிழக்கு பகுதியில் இருக்கும் மாணவர்களின் கேள்விகளை பார்த்திடுவோம். அதன்பிறகு ஐரோப்பாவில் இருந்து வந்திடும் கேள்விகளை பார்க்க இருக்கிறோம். அதற்கு பிறகு அமெரிக்க மாணவர்களின் கேள்விகள். நாம், பார்க்கப்போகிறவைகளின் முன்சுருக்கம்.

சரி, ரவி, நீங்கள் இங்க இருப்பதுல எனக்கு ரொம்ப சந்தோசம். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் உரையாற்றும்படி உங்கள் முன்பு வைக்கப்பட்ட கேள்விக்கு மறுபடியும் வரும்படி விரும்புகிறேன். இந்த உரைகள் அனைத்தும் அதிகளவில் ஆக்கம் கொண்டிருந்ததால்தான் இப்போது புத்தகங்களாக வெளியாகியிருக்கிறது. நீங்கள் பதிலளிக்கும்படி அவர்கள் முன்வைத்த கேள்வி, “இன்றைக்கு மனிதன் கடவுளின்றி வாழ முடியுமா?” இப்போது இதை கேட்டுக்கொண்டிருக்கிற நேயர்களுக்கு சொல்லுகிறேன், உங்களுக்கும் கேள்விகள் இருக்கலாம், “நம்முடைய கலாச்சாரம் தேவனை கைவிட்டுவிட்டதா? அவரை நாம் புறக்கணித்து விட்டோமா?” நீங்க இதை ஒப்புக்கொள்வீர்கள் என் நம்புகிறேன். நம்முடைய பல்கலைகழக மாணவர்கள் சொல்லுகிறார், “கடவுள் இல்லாம என்னால வாழ முடியும்.” இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ரவி என்ன சொல்ல இருக்கிறார் என்பதை நீங்கள் கவனாமாக கேட்க்கும்படி விரும்புகிறேன். ரவி, நீங்க இங்க இருப்பதுல சந்தோஷம். இப்ப ஆரம்பித்திடலாம்.

Dr.ரவி சகரியாஸ்:   இந்த கேள்வி பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் கொண்டுசெல்கிறது. உண்மையில், நீங்க ஆதியாகமம் புத்தகத்தை திறந்தவுடன், ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, எல்லா கேள்விகளும், ஏனன்னா, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க தீர்மானித்தது, தேவன் அதை எப்படி சொல்லுகிறார், சோதனைக்காரன் அதை எப்படி எடுத்து சொல்கிறார்.  தேவன் மனிதனுக்கு நினைப்பூட்டினார் நீ அதை புசிக்கும் நாளில் சாகவே சாவை. சோதனைக்காரன் வந்து சொல்கிறார், “இல்லை,இல்லை,இல்லை. இதை நீ புசிக்கும் நாளில் தேவனை போலாவாய்.” இவை இரண்டும் எதிர்மாறான கண்ணோட்டம் என்பதை பார்க்கிறோம். இங்க நடந்தது என்ன வென்று  பார்க்கும்போது, யார் தேவனிடத்தில் விளையாட முடியும்? நீங்க தேவனை ஏமாற்றமுடியுமா? அல்லது, தேவனை தேவனாகவே இருக்க அனுமதிக்க போகிறீர்களா? இப்ப, இந்த கேள்வி சிருஷ்டிப்பின் துவக்கத்திர்கே நம்மை கொண்டு செல்கிறது

இந்த விதமாக தான் நாம் வாழ விரும்புகிறோம். திடீரென்று நமக்கு எந்த பாதுகாப்பும் இல்லாதது போல தொன்றுதாக இருக்கிறது. விளக்கமளிக்க நமக்கு எந்த ஆதாரமும் இல்லாதது போலிருக்கிறது. உலகமுழுவதிலும் இதைதான் பார்க்கிறேன். இந்த உலகம் ஒரு குழப்பத்தில் இருக்கிறது. கேள்வி இதுதான், “மனிதன் தேவ துணையின்றி வாழ முடியுமா?”. நமக்கு பிடிக்குதோ இல்லையோ இதுதான் அரசாங்கத்திலும், குடும்பங்களிலும், அமைப்பிகளிலும், ஏன் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.

G.K. செஸ்டர்டன் சொல்லுகிறார் எப்போதெல்லாம் ஒரு வேலியை அகற்றுகிறீர்களோ அப்போதெல்லாம் ஒருநிமிடம் நின்று அந்த வேலி எதற்காக அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள். எனவே, இந்த நீதியை பின்பற்றுகிற போராட்டம் காலங்களை தாண்டி இருக்கிறது. நீங்களும் நானும் ஒவ்வொருநாளும் செய்யும் தீர்மானங்களில் இந்த போராட்டத்தை அனுபவிக்கிறோம்.

தேவனை அவருடைய தனித்துவத்தில் பார்ப்பீர்களானால் – நான் பார்க்கிறதுபோல வேதத்தின் மூலம், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு – அதில் பிரமாணங்கள் அனைத்தும் நம்முடைய நலன் கருதி கொடுக்கப்பட்டிருக்கிறது, நம்முடைய பிரயோஜனத்திற்காக இருக்கிறது. அதனால் தான் தாவீது கூறுகிறார், “உம்முடைய கற்பனைகளில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.”கற்பனைகளுக்கு தங்கள் முதுகை காட்டுகிறவர்களுக்கு, எளிதில் புரிந்துகொள்ள கூடிய விதத்தில் ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். ரபீக்களின் பழம்பெரும் வழக்க சொல் இருக்கிறது: தேவன் ஒளியை போல இருக்கிறார், ஆசீர்வாதமும் வெற்றியும், செழிப்பும் அதின் நிழலை போல இருகின்றனர். அந்த ஒளியை நோக்கி முன்னோக்கி சென்றால், அந்த நிழல் உங்களை பின்தொடரும்.  நீங்கள் ஒளிக்கு எதிராக திரும்பி நிழலை பின்தொடர விரும்பினால், ஒருநாளும் அதை உங்களால் பற்றிக்கொள்ள முடியாது.”

அதனாலதான் இது நெருக்கடியான நிலையாக இருக்கிறதென்று நினைக்கிறேன், இது நேர்யர்களுகும் பொருந்தும், இதை கேட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் எடுக்கும் தீர்மானங்களில், ஒவ்வொருவருடைய சுய தீர்மானங்கள், அனைத்தும் தேவனோடு இருக்கும் உறவின் அடிப்படையில் இருக்கும், இல்லாவிட்டால் அவர் இல்லை என்று கருத்தை சார்ந்திருக்கும். உங்களுடைய வாழ்வின் தன்மை, குடுபத்தில் எடுக்கும் தீர்மானம், எப்படி பணத்தை செலவு செய்வது, தொழிலில் என்ன செய்வது, மற்றவர்கள் உங்களுடைய வார்த்தைகளை நம்ப முடியுமா முடியாதா. இதெல்லாமே நீங்க தேவன் மேல வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கையை சார்ததே இருக்கிறது எனபது உண்மை. அதனாலதான், நீங்க  கலைகளஞ்சியங்களை எடுத்து பார்க்கும்போது, மேற்கத்திய நாடுகளின் பிரசித்திபெற்ற புத்தகங்களில், தேவனை பற்றிய பெரிய கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மார்டிமர் அட்லர் ஒருமுறை ஒரு கேள்வியை எதிர்கொண்டார், அவர் அரசர் லேரியை பார்த்து, அந்த காலக்கட்டத்தில் இவர்தான் பதிலளிக்கும் ஸ்தானத்தில்,இருந்திருக்கிறார், “லேரி,   இந்த ஒரு விஷயத்தில் இருந்துதான் வாழ்வில் சம்பவிக்கும் விளைவுகள் அனைத்தும் எதிரொலிக்கின்றன வேறெந்த விஷயத்தையும் நீங்கள் சிந்திக்க முடியாது.” இப்ப சரியான இடத்தில் நிற்கின்றோம். இந்த பதில் சொலப்பட வேண்டிய கேள்வியை அவர் எழுப்பியிருப்பார் என நினைக்கிறன்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நம்முடைய வாழ்க்கையிலிருந்து தேவனை விலக்கினால் நான்கு காரியங்களை எதிர்கொள்வோம் என்று கூறினீர்கள். கடவுளின்றி நம்மால் வாழ் முடியும் என்று நினைத்தால் அப்படியாகும். அந்த நான்கு காரியங்களை பார்க்கலாம். முதலாவது எதிர்கொள்ளப்படுவது எது?

Dr.ரவி சகரியாஸ்:   முதலாவது காரியம் நீதியான காரியங்களில் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாத நிலை உண்டாகும். சிந்தாந்த மேதைகள் சொல்வதுபோல, துல்லியமான தீர்மானத்தை எடுக்க முடியாதிருப்பார்கள். இது தான் சத்தியம் என்ற நிலை இருக்காது. இதுதான் யதார்த்தம் என்று நிலை இருக்காது. நேயர்களுக்காக ஒரு உதாரணத்தை சொல்ல விரும்பிகிறேன், உதாரணமாக. நா, நா இந்தியாவிலிருந்து வந்தவன் அங்க சாலை விதிமுறைகள் பெரிய பங்காக இருக்கிறது. அதாவது, ஒரு வழக்க சொல் இருக்கிறது நீங்க பாம்பேல இருந்தீங்கன்னா உங்களை கசக்கி பிழிந்திடும்  ஏமாற்றுபவர்களின் கூட்டம் சூழ்ந்திருக்கும். என்ன இருந்தாலும் சிவப்பு விளக்கு எரியும்போது அது என்ன சொல்கிறது? நில்! சரி, ஆனா சிலர் இது கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுதுன்னு தொடர்ந்து போயிட்டே இருப்பாங்க. ஆனா அது உங்களை நிற்கும் படி சொல்கிறது.

சரி, நீங்க ஒருவேளை நில் என்ற எச்சரிப்பு விளக்கை கவனிக்காமல்  பகல் கனவு கண்டுகொண்டிருக்க, அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு கார் வரும்போது நீங்க நகர்ந்துகொண்டிருக்கீங்களா இல்ல அது நகருதான்னு யோசித்துகொண்டிருப்பீர்கள். அந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்க என்ன செய்ய முடியும்? உடனே பிரேக் மேல கால் வைப்பீங்க, ஏன்னா சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது, உங்களாக நகர் முடியாது. செய், பிரேக் மேல கால வைத்த பிறகும் நீங்க போறது சரியா இல்ல அவர் நகர்ந்துகொண்டிருப்பது சரியான்னு தெரியாத நிலையில், அடுத்து என்ன செய்வீங்க? ஜன்னல் வழியாக வெளியில பார்ப்பீங்க, ஒரு மரத்தையோ அல்லது கட்டிடத்தையோ பார்ப்பீங்க, அது அசையாதவைகளாக இருக்கிறது, அதை வைத்து உங்கள் நிலையை கணித்திடுவீர்கள். இது, நிஜம் என்பதற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது. அசையாத நிலையில் இருக்கும் உண்மைகள்.

இன்னொரு உதாரணத்தையும் உங்களுக்கு சொல்லுகிறேன். லீசெஸ்டரில் கடிகாரம் செய்யும் நபர் இருந்தார், இங்கிலாந்து, இவர் ஒருமுறை… ஒவ்வொருநாளும் இவருடைய கடைக்கு முன்பு வந்த ஒருவரை கவனித்தார், இந்த கடிகார நேரத்தோடு தன்னுடைய கடிகாரத்தை சரிசெய்திடுவார். ஒருநாள் அந்த நபரை பார்த்து இவர் கேட்டிருக்கிறார், “எதற்காக தின்னும் நேரத்தை பார்த்து சரிசெய்கிறீர்கள்?” அதற்கு அவர், “இத, சொல்றதுக்கு எனக்கு கூச்சமாகத்தான் இருக்கு. பக்கத்துல இருக்கிற தொளிசாலையில் நா டைம்கீப்பரா இருக்கேன். ஒவ்வொரு நாளும் முடியும்போது சரியா நாலு மணிக்கு நா பெல் அடிக்கணும். என்னுடைய கடிகாரம் சரியா வேலை செய்யல, அதனால ஒவ்வொருநாள் காலையிலும் அதை இங்க பார்த்து சரிசெய்துகிறேன் என்றார்.” அந்த கடைக்காரர் சொன்னாராம், “இது வேடிக்கையா இருக்குது, சார், ஏன்னா என்னோட கடிகாரமும் சரியா வேலை செய்வதில்லை. நா தினமும் மாலையில் தொழிற்சாலையில் அடிக்கும் நாலு மணி பெல் சத்தத்தை கேட்டு சரியாக வைத்திடுவேன் என்றார்.

இரண்டு தவறான கடிகாரங்கள் ஒன்றை பார்த்து ஒன்றி சரிசெய்யப்படும் போது என்ன நடக்கும்? இதிலிருக்கும் தவற்றை நாம புரிந்துகொள்ள வேண்டும், ஒவ்வொருமுறையும் அவங்க தவறிலிருந்து தவறுக்கு போயிட்டிருந்திருப்பாங்க. அசையா பொருட்கள் என்று ஒன்றும் இல்லாத நிலையில், அதை வைத்து நீங்கள் சரியான நிலையில் காரியங்களை மாற்றியமைத்திட முயன்றுகொண்டிருந்தாள், கடைசியில் எல்லாம் தவறாக பெரிய குழப்பத்தில் கொண்டு நிறுத்திடும். நிஜம் என்று ஒன்றுமிருக்காது. குறிப்பிட்டு காண்பிக்க எதுவுமிருக்காது. துல்லியமான தார்மீக கட்டமைப்பு என்றிருக்கிறது.

ஆசுச்விட்ச்  சொன்ன ஒரு வாக்கியத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. ஒவ்வொரு அறையாக நடந்து சென்று எரிவாயு அறைகளுக்கு வெளியில் இருந்த ஹிட்லரின் வார்த்தைகளை பார்த்துக்கொண்டிருந்தார் அதில், “ மனசாட்சி இல்லாத இரக்கமற்ற மனப்பண்புகள் கொடூரமான ஒரு வாலிப சந்ததியினரை எழுப்ப விரும்புகிறேன் என்றிருந்தது.”  சார்ந்திருக்கும் தன்மைக்கு புறம்பாக செயல்படுவதுபோல் இருக்கிறது. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிராக ஜெய கோஷம் எழுப்புகிறவர்கள் யதார்த்தத்திற்கு எதிராயிருக்கும் பாதையான சறுக்கு பாதையில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா, ஜனங்கள் தேவனை நிராகரித்தால் இழக்க நேர்ந்திடும் இரண்டாவது காரியம் என்ன, கடவுளே இல்ல என்று சொல்கிறவர்களின் நிலை என்ன, கடவுள் இல்லை என்கிற எண்ணத்தோடு நான் வாழ்ந்திடுவேன் என்று சொல்பவர்கள், வாழ்க்கையில் அர்த்தமில்லாத நிலை இருந்திடுவார்கள்.

Dr.ரவி சகரியாஸ்:   தேவன் இல்லாத ஒரு நிலை என்பது இப்போது  அதிகமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நானும், … என்னுடைய தேசத்தாராகிய இந்தியர்களும், குறிப்பாக வாலிபர்கள் பலரும், இதை நன்றாக புரிந்துகொள்வார்கள். நாங்க அர்த்தத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். அர்த்தத்தை கேட்கும் விதமாக இந்திய திரைப்படங்களில் பிரபலமான பாடல்கள் இருக்கிறது: வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நா தேவனுமல்ல, நான் சாத்தானுமல்ல, நான் ஒரு மனிதன், ஆனால் அதற்கு அர்த்தம் என்ன?

வாழ்க்கையை குறித்து இருக்கும் இந்த கேள்விகளுக்கு, ஜான், ஒத்திசைவான பதில்களை விளக்கிட முடியும். அதுதான் என்னுடைய ஆத்துமாவுக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி கொடுத்தது. சரிபடுத்தும் நல்லினக்கணம் என்பதை பற்றி கிரேக்கர்கள் கூறுவார்கள். அதையே நாம் காலாசாரத்தோடு  ஒத்திசைந்திருக்கும் நிலை என்பதாக பார்த்திடலாம். அல்லது சமுதாயத்தின் பாஷையில் சொல்வதுபோல வாழ்வின் அர்த்தத்தை விளக்கிடலாம். இவை அனைத்தும் ஒரே ஒரு காரியத்தை மையப்படுத்துகிறது. என்னுடைய வாழ்வின் அர்த்தத்தை நான் தெரிந்துகொண்டேன். எனக்கு இது மிகப்பெரிய வெற்றியாக இருந்தது, ஆஸ்திகள் அதிகரித்தது போல, இதை தானே இத்தனை நாட்கள் தேடினேன். லீ லகோக்கா சொல்வதுபோல்,  தன்னுடைய வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துக்கொண்ட தொழில் அதிபர், சொல்கிறார், “என்னுடைய வாழ்வில் அந்திய காலத்தில் இருக்கிறேன், இன்னமும் வாழ்வின் அர்த்தத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியும்,” என்றபடி, “பேரும் புகழும் பறவைகளுக்கு ஒப்பாக இருக்குறது என்றார்.” ஜாக் ஹிக்கின்ஸ், “எனக்கு தெரியும் அந்த உச்சியை அடைந்தாலும் அங்கேயும் ஒன்றுமே இருக்காது.” போரிஸ் பெக்கர், பிரசித்திபெற்ற டென்னிஸ் வீரர் சொல்கிறார், அதாவது, எத்தனையோ பதக்கங்கள் வாங்கியிருந்தாலும் அவருக்கு பெரிய போராட்டம் தற்கொலை எண்ணம் என்கிறார்.

வாழ்க்கையில் தனிமையான நிலை எப்போது உருவாகிறதென்று சொன்னால் உங்களை தப்புவிக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷயம் உங்களை கைவிடும்போது ஏற்ப்படும் அனுபவத்தின் போதுதான். என்னுடைய 17வது வயதில் இந்த கேள்வி எழுந்தது. நீதியான காரியங்கள் எல்லாமே, வெறும், சூத்திரங்களாக தான் இருந்தது, ஆனா யதார்த்தத்தில் என்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருந்தது? எதற்காக இந்த உலகத்தில் இருக்கிறேன்? நா என்ன சாதித்திருக்கிறேன்? கல்லறைக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கை எப்படிபட்டது? அர்த்தத்தை கண்டுபிடிக்க முயன்ற செயல்தான் என்னை அதை பற்றி பேசின இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வந்தது அவரோடு உறவை ஏற்ப்படுத்தியது, அதிலிருந்து மற்ற உறவுகளை நான் புரிந்துகொள்ள துவங்கினேன்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  எனக்கு பிடித்த விஷயம் ..நீங்க பிலிப்பைன்ஸ் மணிலாவில் பகிர்ந்துகொண்டவைகள். நீங்க வாழ்விற்கு அர்த்தம் இருக்கிறாதா என்ற உரையை கொடுத்துக்கொண்டிருக்கும்போது  பின்னால் இருந்த ஒரு வாலிபன் எழுந்து நின்றான் என்ன நடந்துதுன்னு சொல்லுங்க.

Dr.ரவி சகரியாஸ்:   ஆமா. நா என்னுடைய உறைய முடித்தவுடன் இந்த வாலிபன் எழுந்தான். அதாவது, ஒரே ஒரு கட்டளையை மட்டும் நான் கொடுப்பது வழக்கம், உங்க கேள்விகள் சுருக்கமாக இருக்கட்டும் அப்பறம் ஒருவர் ஒரு கேள்விதான் கேட்கனும். ஆனா இவன் உரத்த சத்தமாக சொன்னான். “வாழ்க்கையில எல்லாமே அர்த்தமில்லாமதா இருக்குது.” அதற்கு நா, “அது உண்மையில்லை, நீ தப்பா புரிந்துகொண்டாய் என்றேன்,”அதற்கு அவன், ஆமா என்றான். இப்படியே மாறி மாறி பேசினோம். நா, இல்லா, நீ சொல்றது சரியில்லன்னு சொன்ன. அதற்கு அவர், சரிதான், என்றான்.” நா, மறுபடி சொல்லு என்றேன்.” அதர்க் அவன் வாழ்க்கையில் எதற்குமே அர்த்தமில்லை என்றான்.” அதற்கு நா, நீ சொல்றதுல அர்த்தமில்லை என்றேன்.”அதற்கு அவன், “சரிதான், அதை தவறுன்னு சொல்றதுக்கு நீங்க யாருன்னு கேட்டான்” நா சொன்னே, “ஆல்ரைட், இதை பற்றி இப்பவே பேசிடலாம். அப்படியே நில்லுங்க. நீங்க இப்ப சொன்னது அர்த்துமுள்ளது என்று நீங்க நினைக்கிறீங்க என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சரியா என்றேன்.” அமைதியா நின்றுகொண்டிருந்தார். நா சொன்னே, “நீங்க இப்ப சொன்னது அர்த்தமுள்ளதா இருந்துச்சுன்னா அப்பா எதுவுமே அர்த்தமில்லாததா இருக்காது. வேறுவிதமா சொன்னா, எல்லாமே அர்த்தமற்றதாயிருந்தா, நீங்க இப்ப சொன்னதும் அர்த்தமற்றதுதான். அப்படிபாத்தா நீங்க சொன்னது ஒண்ணுமேயில்ல என்றேன். உட்கார அனுமதி இலவசம் என்றேன்.” அவர், அதாவது, என்ன முறைத்து பார்த்துகொண்டிருந்தார், ஜான், அவருடைய நெஞ்சுல ஓங்கி  மிதித்தது போல பார்த்துட்டு இருந்தார்.

இதில் நடந்த முக்கியமான காரியம் என்னவென்று தொடர்ந்து சொல்லுகிறேன், நா உரையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது, இந்த வாலிபன் பின்புறத்தில் தலையை தொங்க வைத்துகொண்டு நின்றிருந்தான்: நா கேட்டது அர்த்தமுள்ளதுன்னா அப்ப எல்லாமே அர்த்தமில்லாது கிடையாதா.” அவன்.. நா அவனிடம் சென்றேன், அவனை அணைத்துக்கொண்டேன். அவனிடம், உன்னுடைய போராட்டம் என்னன்னு எனக்கு தெரியும் என்றேன்.” மேலும், “நீ எதனால அப்படி கேட்டன்னு தெரியும்.” அதனால், எனக்கு ஒரு உதவி செய்ரயா. இன்றிரவு ஒரு சபையில் நான் பேசுகிறேன். நீங்கள் அங்க வந்தீன்னா கூட்டத்திற்கு பிறகு உன்னோடு தனித்து பேசுகிறேன் என்றேன்.” அவன் வந்தான். அப்ப, ஜான், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி  அன்று மாலை அழைப்பு கொடுத்தபோது, அங்கிருந்த நாற்காளிகளிலிருந்து எழுந்து முதலில் முன்பாக வந்தது அவன்தான், முன்பாக நடந்து வந்தான், பலிபீடத்திற்கு முன்பு முழங்கால்படியிட்டு தன வாழ்வை இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தான். இதை தான் இயேசு சொல்லியிருக்கிறார், “உங்களுக்கு ஜீவனுண்டாகவும்  அது பரிபூரணப்படவும் வந்தேன்,” இதை எளிய விதத்தில் கூறினால் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட சிருஷிடியாகிய உங்களுக்குள் சகல ஐசுவரியத்தையும் உங்கள் சுதந்திரத்தையும் அவர் வைத்துவத்திருக்கிறார்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா. தவன் நமக்கு நீதியான காரியங்களை அளிக்கிறார். அவர் நம் வாழ்விற்கு அர்த்தத்தையும் அளிக்கிறார். ஆனால் இன்னும் இரண்டு காரியங்கள் உண்டு திரும்ப வந்ததும் ரவியிடம் அதை பற்றி கேட்க்க இருக்கிறேன் தேவன் இல்லாவிட்டால் நம்பிக்கை இல்லை, தேவன் இல்லாமல் எந்த மாற்றமும் உண்டாகாது. இதை பற்றி கேட்க்க விரும்புகிறீர்களா. இணைந்திருங்கள், மீண்டும் சந்திப்போம்.

———————

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆல்ரைட் மீண்டும் வரவேற்கிறோம் நாம் Dr. ரவி சகரியாசுடன் பேசிக்கொண்டிருகிறோம் கிறிஸ்துவ விசுவாசத்தை பற்றி இவரைப்போல அதிகப்படியான பல்கலைகழக மாணவர்களிடம் பேசிய யாரையும் எனக்கு தெரியாது. 70 நாடுகளுக்கு அவர் பிரயாணித்து இருக்கிறார். ஒவ்வொருவருடமும் குறைந்தது 12 நாடுகளுக்கு போகிறார். ஒவ்வொரு ஆண்டும் 5 முறை உலகத்தை சுற்று பிரயாணிக்கிறார். இதை எப்படி செய்கிறார், என்று தெரியவில்லை. நம்முடைய காலத்தின் அறிவாற்றல் மிக்கவர்களின் அழுத்தமான சூழ்நிலைகள் மத்தியில் உரையாற்றுகிறார். சரி, ரவி, நாம இப்ப பார்த்துக்கொண்டிருப்பது, “மனிதன் தேவன் இல்லாமல் வாழ முடியுமா? தேவன் இல்லை என்பதுபோல எண்ணி வாழ தீர்மானிக்கும் மனிதர்கள், விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என்பதை சுருக்கமாக சொல்லுங்க, தொடர்ந்து பார்க்கலாம்.

Dr.ரவி சகரியாஸ்:   சரி, நம்முடைய காலத்தில் பெரிதும் கேட்கப்படும் கேள்வி என்று எனக்கு தோன்றுகிறது. மற்ற எல்லாமே இந்த கேள்விக்கு கீழ் வருகிறவைகளாக தான் இருக்கிறது. மனிதன் கடவுளின்றி வாழ முடியுமா இந்த தலைப்பில் 2 உரைகளையும் கேள்வி பதில்களையும் கொடுத்திருக்கிறேன், மூன்றாவதாக, மாணவர்கள் சார்பிலிருந்து ஒரு குழுவினர் என்னோடு சேர்ந்துகொள்வார்கள். அது சுவாரஸ்யமான மூன்றாவது பகுதியாயிருக்கும், அதற்கு பிறகு புத்தகமாக அச்சிடப்படுகிறது. “மனிதன் கடவுளின்றி வாழ முடியுமா?”

எனது, நான்கு குறிப்புகள் அதில் இருக்கிறது, இன்னும் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா நம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் இந்த நான்கை மட்டும் எடுத்துகொள்ளலாம்: யதார்த்தமான நிஜங்களை குறிப்பாக கவனிக்க தவரிடுவோம் என்றேன், அதாவது உங்களுடைய மனசாட்சியும் உங்களுடைய உள்ளுணர்வும் சொல்லும் காரியங்களை வைத்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இப்ப, இதுல பிரச்சனை ஏனன்னா, பலதரப்பட்ட கலாச்சாரத்தை உடைய உலகில், மதவாதத்தை குறித்து பலவித கண்ணோட்டங்கள் இருக்கிறது, அதில் நீங்க நிலைகுலைந்திடும் நிலையில் இருப்பீர்கள், ஏன்னா ஒருவருக்கு நல்லதாக இருக்கிற விஷயங்கள் இன்னொருவருக்கு சாபமாக இருக்கலாம் எல்லா விதத்திலும் இப்படி இருக்கும். எனவே எல்லாருக்கும் பொருத்தமான நிலையான யதார்த்தமான ஒரு சத்தியம் அவசியமாயிருக்கிறது.

இது பொருத்தமாக இருக்குன்னு நினைக்கிறன், “ஒரு பெரிய கத்திய எடுத்து ஒருவருடைய தலையை வெட்டி, அதை என்னுடைய சொந்த கண்ணோட்டத்தின்படி என்னுடைய கோட்ப்பாடுகளின் படி செய்தேன் என்று சொல்ல எனக்கு உரிமை கிடையாது, அதை ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்து, அதை ஒரு சாதனையாக நினைக்க முடியுமா? அது சரியான விஷயமா இல்ல தவறானதா? நம்முடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறது? இதை கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் ஒருவேளை சொல்லலாம், “ஒருவேளை, பழிவாங்கும்படி செய்திருந்தால் பரவாயில்லை என்கிறீர்களா.” வேறு சிலருடைய கருத்துப்படி அவர்கள், “இல்ல, இது கொடூரமான செயல் என்று சொல்லலாம்.” ஆனா இதை சுட்டிக்காட்டும்படி நமக்கு இருக்கும் அடித்தளம் என்னவாக இருக்கிறது?

நம்முடைய சொந்த சந்தோஷத்திற்காக ஒரு குழந்தையை வதைப்பது நியாயமாகுமா? அப்படியானால், நியாயமான விஷயங்கள் என்பதை எங்கிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்? இதில் கவனிக்க வேண்டிய விஷயம், நீதியான நிலை என்ற ஒன்றை வைத்து செயலாற்ற வேண்டியது அவசியம். அறிவியல் ரீதியா சொல்லனுன்னா  உங்க இஷ்டத்துக்கு ஒரு புவிஈர்ப்பு விசையும் என்னோட இஷ்டத்துக்கு ஒரு புவிஈர்ப்பு விசையுமா இருக்க முடியாது, உங்களுக்கு சொந்தமா வெப்ப இயக்கவியலும் என்னோட விருப்பத்திற்கு ஏற்ப வெப்ப இயக்கவியலும் இருக்குமா. இல்ல. ஒரு சில குறிப்பிட்ட விதிகளும் கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பிரபஞ்சத்திற்கே உரியதாயிருக்கிறது, அதுதான் உலகம் எனப்படுகிறது. அதனால் சார்பு தன்மையுடைய ஒன்று அவசியம்.

இரண்டாவதாக, அர்த்தத்தை பற்றிய கேள்விகள். சரி, இது இன்னும் கொஞ்சம் ஆழமான விஷயமாயிருக்கு, ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னு உங்களுக்கு சொல்லட்டுமா. சமீபத்தில் மதவாதத்திற்கு எதிரான ஒரு நாத்திக சமுதாயத்தின் நிறுவனர்  இறந்துவிட்டார். நீங்களும் நானும் பேசிக்கொண்டிருந்தபடி, சில தினங்களுக்கு முன்பு காலமானார். சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, அவங்க ஒரு நாத்திக பெண், மண்ணில் புதைத்த உடல் அழுகிவிடும் என்கிற கோட்ப்பாட்டை கொண்ட பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கருத்தை நம்மியிருன்தவர்.

அதை வைத்துதான் அவருடைய மகள் தன் தாயை பற்றி சொல்கிறார், “என் தாயிற்கு, மரணம் ஒரு முடிவாகவும் சரீரம் அழுகியும் போவதால், வாழ்க்கை விலையேரப்பெற்றதாயிருந்தது” சரி, இது ஒரு வேடிக்கையாக இருக்கிறது. அவர் சொன்னதற்கு அர்த்தம் இது கிடையாது. அவர் என்ன சொன்னான்னா, அவங்களுக்கு வாழ்க்கை விளையேரபெற்றது ஏன்னா கருவறையில் இருந்த மற்ற உயிர்களை அளித்துவிட்டு அதன் மூலம் பல மில்லியன் டாலர்களை சம்பாதித்தார்கள். அப்படின்னா, வாழ்க்கை ஒரு பொக்கிஷம் என்று நினைத்தால், பல ஆயிரங்களை கொன்று எதற்காக பணம் சம்பாதிக்க வேண்டும்? சரி, இவை வேதனை உண்டாக்கும் கேள்விகள் என்று எனக்கு தெரியும், ஆனா ஒருவர் வாழ்க்கை விலையேறப்பெற்றது என்று சொல்லும்போது இவை தேவிர்க்க முடியாத கேள்விகளாகின்றது.

சரி, வாழ்க்கை விலையேறப்பெற்றது என்று நம்புகிறேன், ஆனா எல்லாருடைய வாழ்க்கையும் விஷேஷித்ததுதான், ஏன்னா ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது, அது அரசாங்கத்தாலோ கலாச்சாரத்தாலோ ஏற்ப்படுகிற வெளிதோற்றமான மதிப்பை சார்ந்தில்லை. சாரு, விசேஷித்த மதிப்பு இருக்கிறது என்று சொல்லும்போது அதற்கு அர்த்தம் தேவனுடைய கரங்களால் சிருஷ்டிக்கப்பட்ட நாம், உண்மையில் மிகப்பெரிய மதிப்புடையவர்களாகவே இருக்கிறோம்.  வாழ்க்கையில் ஒரு அர்த்தமும் நோக்கமும் தனித்துவமான நிலையும் இருந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் மதிப்பும் உண்டாயிருக்கும்.

இந்த முக்கியமான் 2 காரியங்கள், நாத்திகரல்லாதவர்களுக்கும் நம்பிக்கை அற்றவர்களுக்கும் நாத்திகர்களுக்கும், விடையளிக்க முடியாத பெரிய கேள்வியாக இருக்கிறது. ஓ, இவற்றிற்கு பதில் அளிக்க முயலுகிறார்கள், அதை அவர்கள் அப்படியே விட்டு விட்டு வாழ துவங்கவேண்டும். நம்முடைய காலகட்டத்தில் எப்படிப்பட்ட சகிப்புத்தன்மையின் நிலை இருக்கிறதென்று பார்க்கிறீர்கள். இதனுடைய சரியான அர்த்தம் என்ன: ஒருவருடைய கருத்துபடி மதிப்பு மிக்கது, மற்றொருவருடைய கருத்து மதிப்பற்றது. இல்ல, இல்ல. சகிப்பத்தன்மையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடைய உண்மையான உலகில் அர்த்தமுள்ள விதத்தில் மற்றவர்களுடைய கருத்துகளையும் கூற்றுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன்னா வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு.

அதனால் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்வதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்,அவர்தான் என்னுடைய இரட்சகர், எனக்காக தன்னுடைய ஜீவனை தந்தவர், அவரை அறியாமல் இருக்கிறவகளுக்கு அன்பையும் மன்னிப்பையும் அளித்திட வாஞ்சையோடு இருக்கிறவர், என்னை அவர் பரலோகத்தின் தூண்டுதலினால் என்னை பற்றிகொண்டவராக இருக்கிறார். அன்றைக்கு மருத்துவமையின் கட்டிலில், என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயன்ற நான், வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொள்ள நேரிட்டது – நா A கிளாஸ் மாணவனாக B கிளாஸ் மாணவனாக C கிளாஸ் மாணவனாக இருந்ததினால் அல்ல – நான் தேவனுடைய சாயலில் “இமேஜோ டிஈ” உண்டாக்கப்பட்ட சிருஷ்டியாக இருப்பதால் வாழ்வில் அர்த்தம் உண்டாயிற்று. என்னுடைய வாழ்வின் அர்த்தமும் என்னுடைய ஜீவனின் மதிப்பும் என் சிருஷ்டிகரிடமிருந்து எனக்கு வருகிறது. அது மாத்திரமே அவருடைய மாதிரியையும் அவருடைய நோக்கத்தையும் என்னுடைய வாழ்விற்காக அவர் திட்டம் பண்ணின விதத்திலும் என்னை நடத்தி செல்கிறது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா. இயேசு கிறிஸ்து கல்லறைக்கு அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையை நமக்கு அளிக்கிறார், இயேசு கிறிஸ்து இல்லாம கல்லறைக்கு பின்னிருக்கும் வாழ்வை பற்றிய நம்பிக்கை  இருக்க முடியாது. அதை பற்றி சொல்லுங்க.

Dr.ரவி சகரியாஸ்:   இது யதார்த்தமான உண்மை. நீங்க… நா பலவிதமான அடக்க ஆராதனைகள்ள பங்கெடுத்திருக்கேன் தாய்லாந்து, இந்தியா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, இன்னும் பல இடங்கள். ஒரு நபர் மரிக்கும் போது என்ன நடக்கிறது? அதாவது, சிலர் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு அடக்கம் செய்யவேண்டும் அதுதான் சம்பிரதாயம் என்று சொல்வார்கள். வேறு சிலர் பெட்டியை சுற்றிலும் உட்கார்ந்திருப்பார்கள் அங்கு நிசப்ததத்தை விட எதுவும் இருக்காது. சுவாரஸ்யமான ஒரு காரியம் உண்டு ஆஸ்கார் வில்டி, மிகசிறந்த படைப்பாளராக இருந்தவர் அவர், அவருடைய அடக்கத்தில் – அதாவது, பேரிசில் பாஸ்கலுடைய அடக்கம் நடந்த அதே சபையில்தான் இவருடைய அடக்க ஆராதனை நடந்தது – இருக்கட்டும், ஆராந்து பார்த்தாலும் அந்த இடத்தில் இசைக்கு இடமே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். கற்பனை செய்யுங்கள் சந்தோஷத்தை அளித்தந்த வாழ்க்கையில் அடக்க ஆராதனையில் எந்த இசையும் இல்லாமல் முடிகிறது. அவருடைய கல்லறையில் யோபின் புத்தகத்திலிருந்து ஒரு வசனம் எழுதப்பட்டிருந்து.

நாம எல்லாருமே நம்பிக்கையை நாடி தேடுகிறோம். ஆமா, ஜான், இதை கேட்க்கிறவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் இது. கல்லறைக்கு பின்னால் ஒரு அர்த்தம் இருப்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் அல்லா, ஒரு வேலை கல்லறைக்கு பின் ஒரு வாழ்க்கை இல்லாவிட்டால், நீதி என்ற சொல் என்னவாகும்? அதிகப்படியான அட்டூழியங்கள் செய்த நபர் எல்லாவற்றை செய்தபிறகு தன்னுடைய தலையில் துப்பாக்கியால் தானே சுட்டு மரித்தால், எல்லாம் முடிந்துவிடுமா? அதற்கு பிறகு எந்த நிலையிலும் நியாயம் தீர்க்கபடாதா? எனவே நம்பிக்கை என்பது வாழ்வில் அத்தியாவசியமான ஒன்று மட்டுமல்ல, கல்லறைக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கை, என்னுடைய பிரயமானவர்கள் மீண்டும் சந்திக்கும் ஒரு சிலாக்கியம், மிகசெறந்த கேள்வியான நீதியின் விலை எப்படியிருக்கும் என்பதில் அடங்கியுள்ளது.

இயேசு கிறிஸ்துவுக்குள், சுவிசேஷத்தில் இது மிகவும் அழகான ஒரு பகுதியாயிருக்கிறது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல், 3 வாழ்க்கையின் நிலைமாற்றம் மறுரூபம். தோமா, உயிர்த்த இயேசுவை கண்டிருந்தான், “கோ கைரியோஸ் மோவ், ஹோ தியோஸ் மோவ்”, என் தேவனே என் கர்த்தரே” தர்சு ஊரான் சவுல் அப்போஸ்தலனாகிய பவுலாக மாறி புதிய ஏற்ப்பாட்டின் மூன்றில் ஒருபங்கை எழுதுகிறவரானார் அவருடைய சகோதரன் யாக்கோபு. கல்லறைக்கு பிறகு இருப்பதை பற்றிய நம்பிக்கை எல்லாவற்றையும் மாற்றி அமைகிறது.

பில்லி கிரஹாம் ஒருமுறை  கொன்ராட் அடினாயூர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடினாயூர் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். Dr. கிரஹாம் இந்த சம்பவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார்.  அப்போது கொன்ராட் அடினாயூர் இவரை பார்த்து கேட்டிருக்கிறார், “Mr. கிரஹாம், உண்மையாகவே இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அதற்கு பில்லி கிரஹாம், “Mr. அடினாயூர். அப்படியில்லாதிருந்தால் பிரசங்கிக்கும்படியான நற்செய்தி என்னிடம் இருந்திருக்காது என்றார்.” அப்போது ஒரு அமைதல் உண்டானது என்றார். அதற்கு பிறகு கொன்ராட் அடினாயூர் இவரிடம், “அப்படின்னா, Mr. கிரஹாம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை தவிர, மனுக்குலத்திற்கு சரியான நம்பிக்கை வேறெதுவும் இல்லை என்றாராம்.”

இன்றைக்கு இதை கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்கு சொல்லுகிறேன், இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தார் என்பது எல்லாவற்றையும் விளக்கி சொல்வதாக இருக்கிறது. ஒன்றை சொல்லுகிறேன், அதை பற்றி இன்னும் ஒரு விஷயத்தை சொல்லுகிறேன். இயேசு ஒருவேளை சார்லடனாக இருந்திருந்தால், அவர் என்ன சொல்லியிருப்பார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் இதைதான் சொல்லியிருப்பார், “ நான் ஆவிக்குரிய நிலை உயிர்த்தெழுவேன்.” சரீரத்தை கண்டறிந்த பிறகு இது பொய் என்பதை எப்படி நிருபிப்பீர்கள்? அவர் சொல்கிறார், “இல்ல, நான் சரீர பிரகாரமாக மறுபடியும் உயிர்த்தெழுவேன்.” சரீர பிரகாரமான உயிர்த்தெழுதல் தான் இயேசு கிறிஸ்துவை பற்றிய சத்தியத்தை நிருபிக்கும் நிலையான ஆதாரமாக உறுதியான சாட்சியாக இருக்கிறது.

நான் மரிக்கும் பொது அவரோடு இருப்பேன் என்று தெரியும் அதோடு அவரை நம்பி ஏற்றுகொண்ட என்னக்கு பிரியமானவர்களும் என்னோடு இருப்பார்கள். இருக்கிற இடத்திலிருந்து அவரை நம்பிடுங்கள். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை மட்டும் அவர் அளித்திடாமல், நிகழ்காலத்தில் நம்பிக்கையளித்து, ஒரு அர்த்தத்தை உண்டாக்கி, உங்களுடைய வாழ்வில் ஒரு பிடிமானத்தை அளிக்கிரவராக இருக்கிறார். சரி, பிரச்சனை அறநெறிகளில் கிடையாது. இயேசு தீயவர்களை உண்டாக்கும்படியாக இந்த பூமிக்கு வரவில்லை, மரித்துபோயிருப்பவர்களை உயிரடைய செய்யும்படியாகவே இந்த பூமிக்கு வந்தார். தேவனுக்கு மரித்திருந்தோம், அவர் நம்மை உயரடைய செய்தார். அவருக்குள் அந்த நம்பிக்கையை நம்மால் பார்க்க முடியும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நேயர்களே, அருமையான காரியத்தை பாத்தோம். இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது, அதை வருகிற வாரத்தில் பார்த்திடலாம் என நம்புகிறேன். ஆனா அடுத்த வாரம் இன்னும் சுவாரஸ்யமான தலைப்பை நாம பார்க்க இருக்க்ரிஒம். உலகமெங்கிலும் பல ஞானமான மாணவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் சில கடினமான கேள்விகளை முன்வைக்கிறார்கள், அதற்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ரவியினுடைய தாய் நாட்டிற்கும் கிழக்கு பகுதியிலுள்ள மற்ற இடங்களுக்கும் போகும்படியாக விரும்புகிறேன். எனவே, பல்கலைகழக மாணவர்களின் கேள்விகள், ரவியிடம் பதிலளிக்கும்படி அவர்கள் தேவனை பற்றி கேட்ட கேள்விகளுடன்  வருகிறோம். அவைகளில் மிகவும் கடினமான கேள்விகளுக்கு ரவி பதிலளிக்கும் படி கேட்க இருக்கிறேன். அது மிகவும் சுவாரஸ்யமான பகுதியாக இருக்கப்போகிறதென்று நினைக்கிறேன். நீங்களும் தவறாமல் உங்கள் நண்பர்களையும் நிகழ்ச்சியை பார்க்கும்படி ஊக்குவித்திடுங்கள். அடுத்த வாரம் தவறாமல் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.

 

 

 

எங்களுடைய மற்ற டிவி நிகழ்சிகளை பார்க்க எங்களுடைய ஜான் அன்கேர்பெர்க் ஷோ ஆப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்திடுங்கள்.

“இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கான ஜெபம்” JA show.org

 

இயேசு திரைப்படம்

கிறிஸ்தவராவது எப்படி

நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்? கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது. கிளிக் செய்யவும்.

ஆடியோ பைபிள்