இறைநம்பிக்கையற்றவர்களுக்கு ரவி சகரியாசின் பதில்கள் – நிகழ்ச்சி 3

இறைநம்பிக்கையற்றவர்களுக்கு ரவி சகரியாசின் பதில்கள் – நிகழ்ச்சி 3

 

 

இன்றைக்கு ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியில் Dr. ரவி சகரியாஸ் இறை நம்பிக்கையற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

அவர் இந்தியாவில் வளர்ந்தவர் அவருடைய முன்னோர்கள் பாரம்பரிய இந்துமத உயர்குல ப்ரோகிதர்கள். ஆனால் ஒருநாள் அவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேள்விப்பட்டு கிறிஸ்தவராக மாறினார். அவர் உலகிலேயே அதிக ஞானம் கொண்ட கிறிஸ்தவ விசுவாச தர்க்காப்பாளராக இருந்து வருகிறார், 70ற்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார் அங்கு அவர் பிரசித்திபெற்ற பல்கலைகழகங்களில் உரையாற்றுகிறார், குறிப்பாக ஹார்வர்ட், பிரின்ஸ்டன்,தர்மௌத், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம். அவர் தென் ஆப்ரிக்காவில் சமாதான உடன்படிக்கையின் அங்கத்தினர்களை சந்தித்திருக்கிறார், லெனின் மிலிடரி அக்கடமியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் மாஸ்கோவில் புவிசார் மூலோபாயத்தின் மையத்தையும் சந்தித்திருக்கிறார்.

மூன்று முறை நியூயார்க்கில் ஆக்கிய நாடுகளின் வருடாந்தர ஜெபத்தில் காலைஉணவின்போது பேசும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். அதோடு அரசாங்கத்தின் தேசிய அளவிலான ஜெபங்களில் காலைஉணவின் போது உரையாற்றியிருக்கிறார் ஒட்டாவா, கேனடா லண்டன் இங்கிலாந்து, அதோடு வாஷிங்டன்னில் CIA விழும் உரையாற்றியிருக்கிறார். ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியின் இந்த விசேஷித்த  பகுதியில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

 

 

—————-

 

 

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். நான் ஜான் அன்கேர்பெர்க், இன்றைய நிகழ்ச்சியில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய விருந்தினர் சிறந்த கிறிஸ்தவ சிந்தாந்தமேதையும், தற்க்காப்பாளருமான, ரவி சகரியாஸ்.  எனக்கு தெரிந்தவர்களில் ரவியை போல அதிகப்படியான நாடுகளுக்கு சென்று பல்கலைகழக மாணவர்களிடம் பேசியவர்கள் யாருமில்லை.உலகின் பல இடங்களில் இருக்கும் அரசாங்க தலைவர்கள் இவரை வந்து தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி அழைக்கிறார்கள். ஐநா சபையின் காலைஉணவின் துவக்க ஜெபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்படி 3 முறை இவரை அழைத்திருக்கிறார்கள்.

சரி, ரவி, இன்றைக்கு இதுவரை உலகின் பல பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் உங்கள் முன் வைத்த கடினமான கேள்விகளில் இருந்து சிலவற்றை கேட்க இருக்கிறேன். இந்த வாரம் நாம் பிரத்தியேகமாக கிழக்கு பகுதிகளில் இருக்கும் மாணவர்களின் கடுமையான கேள்விகளை பார்க்க இருக்கிறோம். மேற்கு பகுதியில் இருப்பவர்களைவிட கிழக்கு பகுதியினரின் சிந்தனைகள் வித்தியாசமானதாக இருந்திடும். நீங்க கிழக்கு பகுதியில்தான் வளர்ந்தீங்க, அதனால உங்களுக்கு தெரியும், எனவே இந்த கேள்விகளை உங்களிடம் கேட்க்கிறேன். நம்முடைய முதல் கேள்வி இதுதான். ஒரு மாணவர் கேட்கிறார், “இயேசு பல தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று சொல்லுகிறார்கள் அப்படியானால் எல்லா மதமும் ஒன்று தான் என்கிற பாஹாயின் நம்பிக்கைக்கு இயேசுவின் பிரயுத்தரம் எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்கி சொல்ல முடியுமா?”

Dr.ரவி சகரியாஸ்:   அதாவது, கிழக்கிலிருந்து வருவதால, சொல்றேன், ஜான், கேள்வி கேட்டே மற்றவர்களை மடக்குகிறவர்களாக  இருந்துவிட்டோம், அதாவது, ஆ, அப்படியே பழகிவிட்டோம். நீங்க ஒரு திறந்தவெளி கூட்டத்தை டெல்லில நடத்தினா, உதாரணமா, மும்பையிலோ, இல்ல சென்னையிலோ, நடத்தினா வெளியில வர முடியாத நிலையை உணர முடியும். பல கேள்விகளை கேட்டுட்டே இருப்பாங்க. அது கேள்விகள் நிறைந்த காலாச்சாரம். மத்திய கிழக்கு பகுதிகளுக்கும் இது பொருந்தும், அதனாலதான் மதம் சார்ந்த எண்ணங்கள் அவர்களுடைய பண்பாட்டின் மையமாக குணாதிசயத்தை மையமாக கொண்டு உணர்ச்சியில் கலந்ததாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.

சரி, நா சொல்ல விரும்புகிரே முதல் காரியம் என்னன்னா, கேட்பவர்களுக்கு சொல்கிறேன், 2 காரனங்களுக்காக இந்த கார்யங்களை பற்றிய என்ன நினைக்கிறீர்கள் என்பதை புரிந்திருக்கிறேன். முதலாவது, இது ஒரு உண்மையான கேள்வி, இரண்டாவது, இது முன்னோர்கள் மற்றும் குடும்பத்தின் நம்பிக்கையோடு தொடர்புடையது. அதானால அவங்க தனித்தன்னையான கேள்விகளை எழுப்பும்போது, உதாரணமா, பாஹா ய் நம்பிக்கை பற்றியவை, இது கலவையான ஒன்று, எனக்கு தெரியும், எதற்காக அவங்க கேட்க்கிறார்கள் என்று தெரியும்.

ஆனா பாஹாய் நம்பிக்கை, அதாவது, அது 1800களின் பாதியில் தோன்றியது, அது 1850துக்கு பிறகு வந்தது, இந்த குறிப்பிட்ட நம்பிக்கையை இஸ்லாமியர்கள் மார்க்க மேதம் என கருதி ஜனங்களை உபதிரவதிற்குளாக்குவதாக, மாறிவிட்டதாக இருக்கிறது, அவர்களுடைய எண்ணம் நன்றாக இருக்கிறது – எல்லாரையும் ஒன்று சேர்த்த முயலுகிறார்கள். ஆனா, நீங்க போனா, அதாவது, டெல்லில பாஹாய் கோவிலுக்கு போனா, நிச்சயமா சொல்ல முடியும் அங்க பெரிய பெரிய மாளிகைகள் இருக்கும்.

அதுல ஒரு முக்கிய பிரச்சனை இருக்கு: எல்லா மதங்களும் உண்மையாக இருக்க முடியாது. நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கேன் எல்லா மதங்களின் கோட்ப்பாடுகளும் ஒன்றுதான் ஆத்மீகத்தில் வித்தியாசம் இருக்கும் என்கிறார்கள். நாத்திகர்கள் அப்படிதான் சொல்கிறார்கள். இது முற்றிலும் எதிரானது. அவை கோட்ப்பாடுகளின் வித்தியாசத்தை கொண்டிருக்கிறது ஆனா ஆத்மீகத்தில் ஒத்திருப்பதாக இருக்கிறது. இஸ்லாமும் இந்துமதமும் ஒன்று கிடையாது, கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒன்று கிடையாது. நாம அன்போடு ஒன்றை ஒன்று குற்றப்படுத்தாமல் இடையூரில்லாமல் இதிலுள்ளவைகளை பார்க்க வேண்டும், சத்தியத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். சத்தியம் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

ஏ எல்லா மதங்களும் உண்மையாயிருக்காது? ஏன்னா யதார்த்தத்தில் முரண்பட்டு என்ற ஒன்று நிச்சயமாக இருக்கிறது. 2 முரண்பாடுள்ள கூற்றுகள் – அதாவது எதிர்மறையான காரியங்கள் – இரண்டும் ஒரேசமயத்தில் சரியாக இருக்காதே. சத்தியத்தில் இருக்கும் உண்மை தனித்துவம் கொண்டது ஏன்னா உண்மையில்தான் அதிகபட்சமான புள்ளிகள் சேர்ந்திடும். இதை நீதிமன்றத்தில் பார்க்கிறோம்: இந்து நடக்கும் போது நீங்க அந்த இடத்தில் இருந்தீங்களா? அதற்கு பதில் ஆம் அல்லது இல்லை. ஒரு கால் இங்கயும் மற்றொரு கால் அங்கையும் இருந்ததுன்னு, சொல்ற வார்த்தை விளையாட்டு செல்லாது, கேள்வியாளர் உண்மையை கேட்க விரும்புகிறார்.

சாத்தியமானது தனித்துவம் கொண்டிருக்கிறது. அதனால இயேசு சொல்லும்போது, “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவரும் பிதாவை தரிசிப்பதில்லை.”இது பகிரங்கமான வார்த்தை, இது தத்ரூபமான அறிக்கை, அதாவது, இது உண்மையான வார்த்தைகள். கேள்வி என்னன்னா, இந்த வார்த்தையை அவருடைய போதனைகளும் வாழ்க்கையும் வெளிப்படுதுச்சா? அதை தான் நாம் கேட்க்க வேண்டும். எல்லா மதங்களும்  நிச்சயம் ஒன்றாக இருக்காது.

கௌதம புத்தா இந்து மதத்தில் பிறந்தவர் அவர் இந்து மத உபதேசத்தின் 2 அடிப்படை கோட்ப்பாடுகளை சொல்லியிருக்கிறார்: அவர் வேதங்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் ஜாதி அமைப்புகளையும் ஏற்றுக்கொள்ள வில்லை. அதனாலதான் சமீப காலத்தில் ஜனங்கள் அந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்கு மாறி இப்படியாக சொல்லுகிறார்கள், எங்களுக்கு ஜாதி பிரிவுகள் கிடையாது. ஆனா இந்த 2 நம்பிக்கைகளை அவதான் அறிவித்தார். இப்படியாகத்தான் அவருடைய நான்கு எளிமையான உண்மைகளும் எட்டு விதமான வலிகளும் நடைமுறையில் வந்தது. இஸ்லாமும் சீக்கிய மதமும் ஒன்றல்ல, சீக்கியமும் இந்துமதமும் ஒன்று கிடையாது. ஒவ்வொரு நம்பிக்கையை பற்றியும் சொல்லப்படுகிற கூற்றுகளும் உபதேசங்களும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது, நீங்க தனித்துவம் என்று சொல்லி இதையும் பாஹாய் நம்பிக்கையின் பின்பற்றுகிறவருமாய் ஒரேசமயத்தில் செயல்பட முடியாது. இது சத்தியத்தின் தன்மையை பொருத்து இருக்கிறது.

இப்படி தனித்துவமான காரியத்தில் சிலர் சொர்ந்துபோனவர்களாய், இருப்பதால் அவர்கள் சத்தியத்தின் சோதனையை சகித்தார்களா என்பதை ஆராந்து பார்க்க பல காரணங்கள் என்னை நெருக்கியது. அதைதான் நாம் கவனிக்க வேண்டும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  சரி, நேயர்களே, நீங்க ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும் ரவி இந்த கேள்விய பற்றி இன்னும் பல காரியங்களை  பகிர்ந்துகொண்டிருக்கிறார் அதை இந்த நிகழ்சிகளில் ஒளிபரப்பிடுவோம். ரவி சகரியாசை அணுகி, கூகிலில் கண்டறிந்து, அவருடைய இணையதளத்தை பார்த்திடுங்கள். யூடியூபிலும் தொடர்ந்து பாருங்கள், இந்த கேள்விகளுக்கு பலதரப்பட்ட நாடுகளில் இருந்து ரவி பதிலளித்த நிகழ்ச்சி தொகுப்புகளை கண்டு அறிந்திடுங்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி கேள்வி கேட்டிருக்கிறார்கள், இவரிடம் கேள்விகளை முன்வைக்கிறார்கள், அவர் பொறுமையாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லுகிறார். நா சொல்றதை கேளுங்கள், அங்க அதிகப்படியான தகவல்கள் இருக்கிறது.

ஆனா இன்னொரு கடினமான ஒன்றை கேட்க்கிறேன். நா போகிற ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் நிச்சயம் இந்த கேள்வி முன்பாக வந்து நிற்கும். கிழக்கு பகுதியில் இருந்து ஒரு மாணவர் கேட்க்கிறார், “கிறிஸ்தவத்திற்கு முன்பு தோன்றிய மதங்களை பற்றிய கருத்து என்ன? ஒருவேளை கிறிஸ்துவின் செய்து தனித்துவமானது என்று சொன்னால், இயேசுவின் காலத்திற்கு முன்பு அவரை நம்பாதவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று சொல்வது நியாயமற்றதாக இருக்குமே”? இதை பற்றி என்ன சொல்றீங்க?

Dr.ரவி சகரியாஸ்:   இது ஒரு அருமையான கேள்வி. யதார்த்தத்தில், இதை நாம, கால அட்டவணையின் வாதம், நேரத்தின் வாதம், எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். சத்தியத்தை புரிந்துகொள்வதற்கு இது ஒரு தடையாக இருக்கும் என்று கருதினால் – அக்காலன்களுக்கு முன்பு – ஜனங்கள் எதை நம்பினார்கள் என்பதை குறித்து யோசியுங்கள். நாம இப்ப கொண்டிருக்கிற நம்பிக்கை தவறானது என்று சொல்ல முடியுமா? நாம கால அட்டவனையை பின்பற்ற முடியாதே? இஸ்லாமியத்திற்கு என்ன சம்பவித்தது? ஏன்னா ஆறு நூட்ட்ராண்டுகளா கிறிஸ்தவம் இஸ்லாமியத்திற்கு முந்தியிருக்கிறது. கீதை வேதங்களுக்கு பெல் செலுத்தின ஆதிக்கம் என்ன ஆனது? வேதங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தது, வாதமாக இருந்தது, கீதை ஆத்திகமானது, அதற்கு பிற்ப்பாடு வேதங்களுக்கு என்ன ஆனது? புத்த மதம் நடைமுறையில் தோன்றிய பிறகு இந்துமதத்திற்கு என்ன ஆனது? அல்லது ஜெயிநிசம் வந்தபிறகு புத்தமதம் என்னாச்சு, இதெல்லாத்துக்கும் பிறகு கடைசியாக தோன்றியது சீக்கிய மதம் இப்ப எல்லாத்துக்கும் முன்னால இருந்ததை நம்பினவர்களின் கதி என்ன. இது ரொம்ப இக்கட்டான சூழ்நியையாயிருக்கு.

நாம இத சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறேன், இயேசு கிறிஸ்து என்ற எண்ணம் 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது, அதனால அதற்கு முன்னால இருந்த காரியங்கள் முற்காலத்தில் உண்மையாக இருந்திருக்கும். உண்மையில், இயேசுவிற்கு முன்னால 3000 வருஷத்துக்கு முன்பு ஆபிரகாம் விசுவாசத்தினாலே வாழ்ந்துகொண்டிருந்தான். நாம யூத கிறிஸ்தவ கண்ணோட்டத்தை பற்றி பேசியிருக்கிறோம். இயேசுவுக்கு முன்னால 1400வருடங்களுக்கு பின்னால பார்த்தா மோசே கற்பனைகளை கொடுக்கிறார், அந்த கற்பனைகள் அனைத்தும் மீட்பரை குறிக்கிறது என்பதை நன்றாக, பார்க்க முடிகிறது. அதனால, இது 2000 ஆண்டுகளுக்கு முன்னாலதா தோன்றினது என்று சொல்வது ஏதோ புதுசாக சொல்லுகிற தவறான விஷயம். வேதம் சொல்கிறது, “ பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய் திருவுளம்பற்றின தேவன், இந்த காடைசு நாட்களில் குமாரன் மூலமாய் நமக்கு திருவுளம்பற்றினார்.”

ஒரு உதாரணத்தை நா சொல்ல விரும்புகிறேன், ஜான், இந்திய நண்பர்களுக்கு இது பிடிக்கும், அது ஏனன்னா: எங்க ஊழியரில் ஒருவர் முதல் முறையாக திரைபடம் பார்க்க போனார். அவர் தியேட்டருக்கு உள்ள போய் தவறான திசையில் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நினைத்தாராம் இந்த ஒளி பிம்பங்கள் பிரகாசிக்கிறது பாக்கதா பணம் குடுத்தோம் போலிருக்குன்னு சொல்லி… சுவரில் இருந்து ஓட்டை வழியாய் வெளியே வந்தார், அவர் திரும்பி அந்த திரை இருக்கும் திசையை பார்ததும், “o, என்ன பார்க்கிறேன், எத பார்க்கிறேன்? ஒரு முகத்தை பார்க்கிறேன் என்றார்”

மதங்களின் உலக கண்ணோட்டம் பெரும்பாலும் சுவரிலிருந்து வரும் ஒளி பிம்பங்கள் போலதான் இருக்கிறது. உண்மையில் அந்த ஒழியானது இயேசு கிறிஸ்து என்னும் நபரின் முகத்தில் படுகிறதாயிருக்கிறது, அவர்  தான் சத்தியத்தின் உச்சநிலையும் நிறைவேறுதலுமாய் இருக்கிறார். உலக கண்ணோட்டத்தில் சத்தியத்தின் பற்றிய குறிப்புகள் பலதும் இருக்கலாம், அதனுடைய முழுமை இயேசு கிறிஸ்து என்ற நபரில்தான் இருக்கிறது. எனவே, இதை கேட்டுக்கொண்டிருக்கிறவர் உங்களுக்கு, சொல்லுகிறேன், யோவான் சுவிசேஷத்தை எடுத்து, வாசிக்க ஆரம்பியுங்கள். இயேசுவை பற்றி என்ன சொல்கிரென்று பாருங்கள், உங்கள் கேள்விகளுக்கான அவருடைய பதிலை பாருங்க. அவருக்குள் சத்தியத்தின் பூரணம் வெளிப்படுவதை நீங்கள் பார்க்க முடியும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  அந்த நபர்களின் நிலை என்ன, இயேசு விசுவாசியாதவர்களாய் முற்காலத்தில் வாழ்ந்த அந்த நபர்களின் நிலை என்ன, நித்தியமாக தேவனிடமிருந்து அவங்க பிரிக்கப்படுவது நியாயமா அநியாயமா?

Dr.ரவி சகரியாஸ்:   அதற்கு எப்படி பதில்சொன்னாலும், அந்த பதிலின் முக்கியமான விஷயம் என்னன்னா: வேதம் சொல்லுகிறது “சர்வலோகத்தின் நியாயாதிபதி சரியாக நீதி செய்யாதிருப்பாரோ.” இதில் சுவாரஸ்யமான விஷயம் இந்த நியாயம் விசாரிக்கும் காரியம் சோதோம் கொமோராவை நியாயந்தீர்க்கும் போது சொல்லப்பட்டிருக்கிறது, உங்களையும் என்னையும்விட தேவன் நீதியுள்ளவர். சரியானது எதுவோ அதைதான் அவர் செய்கிறார். ஆனா வரலாறு மூலமாய் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும் தெரிகிறது… ஆபிரகாமுக்கு என்ன தெரியும்? பல கடவுள்கள் என்ற கலாச்சாரத்தில் வளர்ந்தார். ஆனால் அவர் “தேவன் தாமே கட்டி உருவாக்கின நகரத்தை அவருடைய கண்களால் கண்டார்.” இந்த யோசனை அவருக்கு எங்கிருந்து வந்தது?

தேவன் நம்மோடு நம்முடைய ஆழ்மனதில் பேசுகிறார். நம்முடைய தனிப்பட்ட நிலையில் தேவன் நம்மோடு பேசுகிறார்… நம் வாழ்வில் இடைபடுவார். அவர் நம்முடைய மனசாட்சியோடு பேசுகிறார் என்பது உண்மை. சிருஷ்டிப்புகள் மூலமாக பேசுகிறார். அவருடைய வார்த்தையை கொண்டு அவர் பேசுகிறார். அவருடைய அவதாரமான இயேசுகிறிஸ்து மூலம் பேசுகிறார்.

இப்படி சொல்றதால, தேவன் யாரையும் நரகத்துக்கு அனுப்பலைன்னு அர்த்தமாகாது, ஜான். இது ரொம்ப முக்கியமான உண்மை. நாமதா அதை தீர்மானிக்கிறோம்.

C.S. லூவிஸ் இந்த உலகில் இரண்டு விதமான மக்கள் இருப்பதாக சொல்லுகிறார் – சிலர் தேவனுக்கு முன்பாக முழங்காலில் நின்று சொல்கிறார்கள், “உம்முடைய சித்தத்தின்படி நடக்கட்டும்,” வேறுசிலர் தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட முன்வராததால் தேவன் அவர்களிடம் சொல்கிறார், “உன்னுடைய விருப்பத்தின்படி ஆகட்டும்.” உண்மையில், நித்தியத்திற்கு போக நாம் எதுக்கு தீர்மானங்கள் நம்முடைய பரலோக பிதாவின் சித்தத்திற்கு இனங்குவதில்தான் இருக்கிறது. நம்முடைய விருப்பங்களை அவர் விரோதிக்க மாட்டார். தேவனோடு நேரத்தை செலவிட மனதில்லாமல் இருக்கிறவர்களுக்கு பரலோகம் கூட நரகத்தை போலதான் இருக்கும். என்னுடைய விடுதலைக்கான அந்த ஈவை தேவனே எனக்கு கொடுத்திருக்கிறார். இதை கேட்டுக்கொண்டிருக்கிறவர்களை உற்ச்சாகப்படுத்துகிறேன் முழங்காலில் நின்று அவரிடம் சொல்லுங்கள், “ உம்முடைய சித்தத்தின்படி ஆகட்டும்.” அவருடைய சித்தம் உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரியமாகும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  மாணவர்களிடமிருந்து வந்திருக்கும் கடினமான கேள்விகளை தொடர்ந்து பார்க்க இருக்கிறோம், தேவனை பற்றி கிழக்கு தேசத்தினருடைய கேள்விகள், சரியா? இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, “ஒருவேளை, ரவி, நாம எல்லாரும் கடவுள். நாம எல்லாரும் கடவுளாக இருக்கிறோம். தேவன் தம்மையே நம்மூலமாக படைப்புகளின் மூலமாக உணருகிறாரா. எதுவுமே உண்மையில்ல. பலவிதமான மதங்கள் நடைமுறையில் இருக்கிறது, இதற்கு முன்னால பலரும் தங்களை கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லியிருக்கிறார்கள். கிறிஸ்தவம் என்பது வரலாற்றில் உண்டான விபத்து. புத்தரும் அதையேதான் போதித்திருக்கிறார், கண்புஷியசும் அதை சொல்கிறார், முகமதும் அதையே சொல்லியிருக்கிறார். ஒரே காரியத்தை தான் எல்லாரும் போதித்திருக்கிறார்கள். எது சரி எது தவறுன்னு நம்மால சரியா சொல்ல முடியுமா?”

Dr.ரவி சகரியாஸ்:   அதாவது, பல விதங்கள்ல இந்த கேள்விகளை எதிர்கொள்கிறேன், ஜான், பல தடவைகள். எங்கிருந்து துவங்குவதென்று திகைத்து நிற்கிறேன். வின்ஸ்டன் சர்ச்சில் அவரோடு கூட இருந்தவர் அவை பற்றி அவதூறான காரியங்களை பேசி அவரை தர குறைவான வார்த்தைகளால் தாக்கியதற்கு பிறகு அவர் சொன்ன ஒரு காரியம் என் நினைவிற்கு வருகிறது. அந்த நபர் பேசிய பிறகு, சர்ச்சில் தனக்கு அருகில் இருந்த நபர் பக்கமாய் சாய்ந்து சொன்னாராம், “இதோ, ஆனா தேவனுடைய கிருபையின் நிமித்தம், தேவனே போகிறார்.” (சிரிப்பு)

அதாவது, நாம செயல் படுகிற விதம்தான் நாம தெயவீகமானவங்கன்றத காட்டுகிறது. அதனால நீங்க சொல்லும்போது, உதாரணமா, கான்பூஷியசும் அதையே சொல்கிறார், இல்ல, அவர் சொல்லல, உண்மையில் கண்புஷியஸ் மனிதனுக்குள் இருக்கும் உள்ளார்ந்த நற்பண்புகளைதான் நம்பினார், இயேசு நாம் எல்லாரும் பாவிகள் என்று போதித்தார். புத்தரும் இதைதான் சொல்றாருன்னு நீங்க சொல்லலாம், இல்ல அவர் சொல்லல. கௌதம புத்தர் நாதிகரா இல்லாம இருந்த சரி ஆனா அவர் நாதிகராச்சே. தேவன் இருக்கிறார் என்பதை பற்றி அவர் ஒருபோதும் பேசினது கிடையாது. நிர்வாணா என்ற சிந்தனையின் அடிப்படை விஷயம் என்னன்னா ஆசைகளை துறந்து, விருப்பமின்றி இருத்தல். இயேசுவோ நீதியின்மேல் பசிதாகமாய் இருக்கும்படி கூறியிருக்கிறார். இப்படிதான்… இப்படிதான் பூர்த்தி செய்ய வேண்டும். அதனால இங்க எல்லாமே ஒன்றுக்கு ஒன்று மாறாக இருக்கு.

இஸ்லாம், உதாரணத்திற்கு, இயேசு சிலுவையில் மரிகவே இல்லை, சிலுவையில் மரித்தது போல காணப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இது சரித்திரத்தில் மற்ற குறிப்புகளுக்கும் மார்க்கங்களுக்கு சவாலாக இருக்கிறது – யாரவேன்னாலும் பாருங்க  பாகன் வரலாறு, கிரேக்க வரலாற்றாசிரியர்கள், ரோம வரலாற்றாசிரியர்கள், யூத வரலாற்றாசிரியர்கள், கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்கள் எல்லாரும் சொல்லுகிற ஒரே விஷயம். அவர் சிலுவையில் மரித்தார், அவர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தார் என்றே அவர்கள் அறிக்கை செய்கின்றனர். அதனால் எல்லா மதமும் ஒன்றுதான் என்று சொல்ல முடியாது.

இன்னொரு உதாரணத்த பாருங்க. இந்துவா கேட்டுப்பாருங்க, “மோட்சம் பெறுவது எப்படி, விடுதலை நிவாரணம் பெறுவதெப்படி? அதற்கு இந்துக்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா… கரும கடன்களை செலுத்தும் போது என்பார்கள். எல்லா பிறப்புகளும் மறு பிறப்பாம். அதுவே வித்தியாசமான ஒன்று. அதாவது வேதம் சொல்கிறது, “ஒரேதம் மரிப்பதும் பின்பு நியாயதீர்ப்பு அடைவது மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.” ஆனா இவர்கள் கர்மங்களை செலுத்தினால் நன்றாகும் என்று இவர்கள் சொல்லுவார்கள். அதனால, புத்தமத்திற்கும் இந்துமதத்திற்கும் ஒரு வித்தியாசத்தின் நிழல் உண்டாகிறது மேலும் இதுதான் அவர்களின் உண்மையான நிலை. முஸ்லிம்ம கேட்டு பாருங்க, “எப்படி நீங்க முக்தி அடைவீங்கன்னு கேளுங்க.” அவங்க சொல்வாங்க நம்முடைய நற்கிரியைகளும் தீய கிரியைகளும் ஒன்றாக வைத்து அளவிடப்படுவதை பொருத்து இருக்கிறது. இதுவும் வித்தியாசமான கண்ணோட்டம், பார்க்கிற விதங்களில் வித்தியாசம் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து கேட்ட குமாரனை பற்றி ஒரு உவமையை சொல்கிறார். ஒரு மகன் தன தகப்பனை எதிர்க்கிறான், தனது சொத்துக்களை வாங்கிகொண்டு, சீரழித்து விடுகிறான். தூர தேசத்திற்கு புறப்பட்டான். இறுதியில் அவன் முற்றிலும் சீரழிந்துவிடுகிறான். மனந்திரும்பி மறுபடியும் அப்பாவிடம் வரும்படியாக விருப்பம் கொள்கிறான். என்ன பொருத்தவர , ஜான், ஒரு கிழக்கத்தியனா இந்த சம்பவத்தை நா வாசிக்கும்போது, எனக்கு ஒரு அதிர்ச்சி உண்டாகிறது, ஒகே – கிழக்கத்தியர் ஒருவேளை நினைக்கலாம், “அவன் திரும்ப வருகிறான், அவனோட அப்பா என்ன செய்யப்போறாரு? அவர் என்ன செய்யலான்னு காத்துகிட்டு இருக்காரோ? அவன பார்த்ததும் அவர் என்ன சொல்வார்…? இல்ல, இல்ல, இல்ல! இயேசு, அந்த தகப்பன், எழுந்து வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து. அவன் தூரத்தில் வருகிறதை கண்டு வீட்டிலிருந்து அவனை பார்க்கும்படி வெளியே ஓடி வருவதாக சொல்கிறார்.

என்னை கேட்டுக்கொண்டிருக்கிற கிழக்கத்திய ஆண் அல்லது கிழக்கத்திய பெண்ணுக்கு இது கிழக்கத்திய அப்பாக்களுக்கு எதிரானதாக  தோன்றலாம். கிழக்கத்திய தகப்பன் அவன் வந்து மறுபடியும் இழிவானதை பேசி தவறாக நடந்திடுவானோ என்று நினைத்துகொண்டிருக்கலாம். இங்கு இவர் போய் தன மகனை அணைத்துக்கொண்டு சொல்கிறார், “இதோ, என் மகன், காணாமல் போயிருந்தான், இப்போது உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டான்.” உலகில் உள்ள எல்லா மதங்களை விட இந்த செய்தி தனித்துவம் கொண்ட கிருபையையும் மன்னிப்பையும் குறித்து கூறுகிறது. பரலோக பிதா உங்களை ஏற்றுக்கொள்வார். நீங்க திரும்பி பரலோக பிதாவினிடத்தில் வரும்போது அவர் உங்களை ஏற்றுக்கொள்கிறார்.

மன்னிப்பும் கிருபையும்தான் சுவிசேஷத்தின் உண்மைகள். தரம்குறைந்த மன்னிப்பு கிடையாது, கிடையாது, “ஒகே, உன்ன மன்னிகிஎர்ன் என்றில்ல.” அதற்கு கிரையமா நீங்களும் நானும் மன்னிக்கப்பட்டு நம்மேலுள்ள நியாயதீர்ப்பையும் அகற்றிட இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி மரணத்தை தழுவ வேண்டி இருந்தது.

எல்லா மதங்களும் அடிப்படியாக வித்தியாசமானது. சில வேலைகளில் அதன் நெறிமுறை காரியங்கள் ஒன்றாக இருக்கலாம், ஆனால் பல மார்க்கங்களில் இருக்கும் நீதிநேரிகள் அனைத்தும் உங்களை இரட்சிப்பிற்கு நேராக நடத்துவது போலிருக்கும். கிறிஸ்தவ விசுவாசத்தில் அதுதான் இரட்சிப்பின் கனியாக இருக்கிறது. உங்களுடைய நற்க்கிரியைகளினால் அதை பெற முடியாது, நீங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்கள் உங்களுடைய நற் கிரியைகள் உங்கள் பரலோக பிதா உங்களுக்கு அளித்த ஈவிர்க்காக நீங்கள் செலுத்தும் நன்றிபலியாக இருக்கிறது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ரவி, பாந்திஎஸ்ட் கண்ணோட்டத்தை பிடித்துகொண்டிருப்பவர்களுக்காக இன்னும் ஒருசில உதாரணங்களை நீங்கள் நேயர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Dr.ரவி சகரியாஸ்:   சரி. ஒரு சம்பவம் , நடந்தது ஒருமுறை, கெயின்ஸ் வெள்ளில, ப்ளோரிடா பல்கலை கழகத்தில், ஜான். எல்லா உரைகளையும் முடித்து விட்டோம், இந்த நபர் முன்பாக வந்தார். இதை ரொம்ப நகைச்சுவையாக இருந்ததால இதை வீடியோவில் பதிவு செய்து வைத்துக்கொண்டோம். திடுக்குன்னு முன்னால வந்து மிக்க பிடித்து பேச ஆரம்பித்தார், “நா இருக்கிறேன் என்று எப்படி தெரிந்துகொள்வது?” அங்க, உண்மையில், பாதிபேர்  புலம்புவதும், பாதிபேர் சிரிப்பதுமாயிருந்தாங்க. ஆனா எல்லாரும் இருக்கையின் நுனியில இருந்தாங்க ஏன்னா அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்கன்னு பார்த்துட்டு இருந்தாங்க.

அவர்கிட்ட இதற்க்கான பதிலா சொல்லும்படியாக நா மாணவர்கள் நியூயார்க் பல்கலைகழகத்தில் பேராசிரியர் நாத்தானிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதிலை சொல்ல ஆரம்பித்தேன். அவர் தன்னுடைய மூக்கு கண்ணாடிய இறக்கி சொல்வார், “யார் கேட்க்கிறார் என்று எப்படி சொல்வது?” (சிரிப்பு) சத்தியத்தின் சோதனையில் ஒரு முக்கியமான சோதனை மறுக்கமுடியாது என்ற பரிட்சை. ஒரே நேரத்தில் யதார்த்தத்தை அதன் நிரூபணம் இல்லாமல் மறுதலிப்பது முடியாத காரியமாக இருக்கும்.  எப்படி யஇருக்குன்னு தெரியுமா, “ஐ கேன்னாட் ஸ்பீக் அ வோர்ட் ஆப் இங்கிலீஷ்.” இப்படி சொல்லும்போது உண்மையில் அதே ஆங்கிலத்தில் தான்  அத சொல்றாங்க.

அதேபோல இவர்களுடைய கண்ணோட்டத்தில் இருக்கிற போராட்டம் இதுவாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு நா நீங்கன்ற உறவு தெரியும். அதாவது, தியானம் எனபது உங்களை நான் என்கிற எண்ணத்திர்க்குள் உங்களை நிறுத்திவிடும். ஆனா உண்மை என்னன்னு கேட்டா, அவங்க சொல்வாங்க, நீங்க அந்த  நிலையிலிருந்து உள்ளார்ந்த ஆத்தும பகுதியை ஆழ்ந்து தியானிக்க வேண்டும் என்பார்கள். இந்த உலகத்தில் உண்மையில் நீங்களும் நானும் வித்தியாசமான நிலையில் இருக்கிறோம். அதுதான் தேவனுக்கான பசி உண்டாகிறது. இப்படிதான் பல விதங்களில் இருக்கும் சடங்காச்சார பலிகள் என்பது உள்ளே நுழைகிறது. அதனால் தான் முழங்கால் படியிடுகிறோம். அதனால்தான் கோவில்களில் பலிகள் செலுத்தப்படுகிறது. நான் நீ என்கிற உலகில் வாழ்கிறோம் என்பது  தவிர்க்கமுடியாத உண்மையாக இருக்கிறது.

சுவாரஸ்யமான விஷயம் ஏனன்னா, கிறிஸ்தவ உலகில் நீங்கள் கூட்டத்தை பார்ப்பதில்லை, ஒற்றுமையை பார்க்கிறீர்கள், ஜீவனுள்ள தேவனோடு உறவையும் ஐக்கியத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். நாம் நான் நீ என்கிற உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  கிழக்கு தேசங்களில் இருகிறவர்களுக்காக நீங்க இன்னொரு உதாரணத்தையும் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஒரு ஹோட்டலில் உங்களோடு பேசிய அந்த இளம் பெண்ணை பற்றிய சம்பவத்த சொல்லுங்க.

Dr.ரவி சகரியாஸ்:   இது மலைக்க வைக்கும் ஒரு சம்பவம், அதாவது,ஜான், நா ஒருவேளை… 15- 20 வருஷங்களுக்கு முன்னால இந்த மாதிரி ஒன்று சம்பவிக்கும் என்று நா கனவுல கூட நினச்சு பார்த்ததில்லன்னு சொல்லுவேன். நா டெல்லில இருந்தேன், அங்குள்ள ஒரு சிறந்த இடத்துல தங்கியிருந்தேன், என்னோட உடல் நலத்தை பார்த்துக்கொள்ளும்படி அங்கிருந்தேன். இந்த நபர் பொதுவான ஒரு நண்பரை தொடர்பு கொண்டார். அவங்க சொன்னங்க, “உங்கள பார்க்க விரும்புகிறேன்.” அப்பறம் அவங்க வந்து அவங்க கதைய எங்கிட்ட சொன்னாங்க. பிரபலமான ஒரு இடத்தில் அவங்க வேலை பார்ப்பதாக சொன்னாங்க, “அதாவது, நா என்னுடைய பெற்றோரின் விருப்பத்துக்கு மாறா திருமணம் செய்துகிட்டேன். நா ஒரு தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகிட்டேன். ஆனா நாங்க சந்தோஷமா இருந்தோம். எனக்கு இன்னொரு பட்டணத்துல இடம் மாற்றம் கிடைத்தது.” அந்த பட்டணத்தின் பெற சொன்னாங்க. அப்பாவும் அங்கதான் வேலை பார்த்தாங்க.

தொடர்ந்து அவங்க, “நா அங்க இருந்தப்ப எனலு இன்னொருவருடன் பழக்கம் ஏற்ப்பட்டது, ஏ கணவர் சந்தேகப்பட்டார். ஆனா நா தாழ்ந்த ஜாதியான ஒருத்தர கல்யாணம் செய்துகிட்டதால, நாங்க ஒதுக்கப்பட்டிருந்தோம். என்னோட குடும்பத்த இழந்துட்டேன், அவரோட குடும்பத்த இழந்துட்டார். இப்ப எனக்கு இன்னொருவரோடு பழக ஆரம்பிச்சுட்டேன், இவர் இப்ப சந்தேகப்படறாரு. அவர் என்ன பார்க்க வந்தார். எனிடம் அவர் கேட்டார், ‘இது உண்மையா? அது பெரிய கதையா, சொன்னாங்க. “ஆமா” அதற்கு அவர், “எப்படி எனக்கு துரோகம் செய்ய முடிந்தது? என்னோட குடும்பத்த இழந்துட்டேன், எல்லாத்தையும் இழந்துட்டேன், இப்ப நீ இப்படி பண்ணீட்ட என்றார்.” இவங்க வருத்தத்தை தெரிவித்து விவாதம் பான்னியிருக்காங்க. அதற்கு அவர் சொன்னாரா, “இதபாரு, நீ எங்கிட்ட திரும்ப வரலைன்னாலும் ஒரே ஒரு விருப்பத்த நிறைவேற்றிதா. இப்ப நா போறேன். கொஞ்ச நேரத்துல திரும்பி வருவேன். ஒரு 30 நிமிஷத்துக்கு உன்னோட மடியில தலைவச்சு படுக்க அனுமதி. உன்ன சத்தியமா தொட மாட்டேன். அந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்த குடு அதுக்கு பிறகு உன்ன தொந்தரவே பண்ண மாட்டேன் என்றிருக்கிறார்.”

இது விசித்திரமான வேண்டுகோளாக இருக்கிறதே என்று நினைத்திருக்கிறார். அவங்க போய் திரும்ப வந்திருக்காங்க. அவங்க மடியில ஒரு தலையணையை வைத்தாங்க. அவர் அவருடைய தலையை அவர்கள் மடியில் வைத்து படுத்திருக்கிறார், அவங்க முகத்தையே பார்த்துட்டு இருந்தாறாம். சில வினாடிகள் கழித்து, ரொம்ப முடியாம போயிட்டாறாம். திணற ஆரம்பித்தார், ஒரு விதமாக பிதற்ற ஆரம்பித்தார் வாந்தி யெடுத்தார் ரொம்பவும் முடியாத நிலைக்கு சென்றுவிட்டார். என்ன நடந்துச்சுன்னா அவர் வருவதற்கு முன்னால எலி மருந்து சாப்பிட்டு வந்திருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இறுதியில் மரித்து விட்டார். ஆஸ்பிடலுக்கு கூடீட்டு போனாங்க.

இன்னனும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவங்க மீளல. அதை அவர்கள் முகமே சொல்லிடுச்சு. அவங்க சொன்னங்க, “நா ஒவ்வொரு இடமாக போயிட்டு இருக்கேன், இறுதியாக ஒரு ஒரு மத குருவிடம் நான் சென்றேன் அவர் அதற்கான காரணத்தை சொன்னதாக என்னிடம் சொன்னார்கள். இந்த நபர் பூர்வ ஜென்மத்தில் ஒரு சிறு பிள்ளையை கர்ப்பளித்தாராம் அந்த பாவத்தின் பலன் தான் இப்படி ஆயிற்று. நீங்க வெட்கப்பட வேண்டியதில்லை என்றிருக்கிறார். “

நா மேஜையின் இந்த பக்கத்தில் உட்கார்ந்து படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். நா கேட்டேன், “அது வேலை செய்ததா? உங்களுக்கு நடந்தத நீங்க மறந்துடீங்களா?” அவங்க சொன்னாங்க, இல்ல, அத என்னால விட முடியல.”

பாருங்க, நாம பரிகாரம் செய்ய முடியும் என்று சொல்லி எந்த விதமான காரியங்களை செய்தாலும் அதனால இந்த பூமியில நம்முடைய நிலைய நாமே உயர்த்தி கொள்ள முடியாது. நமக்கே நல்லா தெரியும் என்னுடைய நற்கிரியைகள் தவறான கிரியைகளை ஈடு செய்ய முடியாது. இதுதான் உங்களை மன்னிக்கும் இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியின் அழகு, உங்களை நோக்கி வருகிறது, உங்களுக்குள் இருக்கிற பிரச்சனையை காட்டுகிறது. பாவம் நாம் விரும்பாத ஒன்று, அது தேவனுக்கு விரோதமான முரட்டாட்டம், நோக்கத்தை இலக்கசெய்யும்.

என்னுடைய 17வது வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட போது அவர் எல்லாவற்றையும் மாற்றியமைத்தார். இப்ப அறை நூற்றாண்டை கடந்து நிற்கிறேன், ஜான், இதுவரை இல்லாத அன்பு இயேசு கிர்ச்துவோடு ஏற்ப்படுகிறது, விடைகளே கிடைக்காம அவருக்கு வெளியில் இருந்ததை விட இப்ப அதிகமாக புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு மீட்பை அளித்திருக்கிறார், இரட்சிப்பு.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நீங்க இயேசுவ அறிந்துகொண்ட மாதிரி இயேசுவை அறிந்துகொள்ள ஜனங்கள் தாகத்தோடு இருக்காங்க, கடந்த காலத்தில் அவர்கள் செய்த காரியங்களுக்காக அவர்கள் வெட்கப்படுகிறார்கள், எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை புரிந்துகொண்டார்கள், இப்ப இயேசுவை எப்படியாவது அறிந்துகொள்ள விரும்புகிறார்கள், அவரை அறிந்துகொண்டு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு இப்போது நீங்க என்ன ஆலோசனை கொடுக்க விரும்புகிறீர்கள்?

Dr.ரவி சகரியாஸ்:   எளிமையான விஷயம். நாம யாருமே, ஒருவரை, விட ஒருவர் மோசமானவங்க கிடையாது, ஆனா எல்லாருமே தேவனுடைய பார்வையில், பாவிகளாக இருக்கிறோம்/ அவர் நம்மிடத்தில் சொல்லியிருக்கிறார் ஒரவன் என்னிடத்தில் வந்தால், “அவர் அவனை புறம்பே தள்ளுவதில்லையாம்.” அவருடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறார், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்தால் அவற்றை மன்னிக்க அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.” அவருடைய சித்தத்திற்கு நாம் ஒப்புக்கொடுக்கும்போது அவர் நமக்குள் புதிய கீவனை தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

நா அவங்ககிட்ட சொல்ற காரியம், இருக்கிற இடங்களில் உங்கள் தலைகளை தாழ்த்தி, எளிதான ஜெபத்தை செய்யுங்கள், இது உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலானது. நீங்க உங்க வீட்டுக்கு போய், உங்க வீட்டுல தனிப்பட்ட இடத்தில், உங்க மேஜையில் உட்க்கார்ந்து,அல்லது உங்க கார்ல உட்கார்ந்தாலும் பரவாயில்ல. எளிமையான ஜெபத்தை சொல்லி அவரிடம் வந்திடுங்கள், “இயேசு கிறிஸ்துவே நீர் என் தேவனாக என் இரட்சகராக இருக்க வேண்டும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ள கேட்க்கிறேன்.” இந்த ஜெபத்தை உண்மையா செய்தா அவர் உங்களை மன்னிப்பார். வேதம் போதிக்கப்படும் ஜெபக்குளுக்களை கண்டறியுங்கள். வேத பாடத்தில் சேர்ந்துகொள்ளுங்கள், வேதாகமத்தை போதிக்கும் சபைக்கு சென்றிடுங்கள். யோவான் சுவிசேஷத்தை வாசியுங்கள். ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம்னு தொடங்குங்க. அர்ப்பணிப்போடு செய்யும் ஒரு ஜெபத்தில் நீங்க ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளையாக முடியும். இயேசு தத்துவமேதை காட்டி இவரைப்போல என்னிடம் வரணுன்னு சொல்லல, சிறு பிள்ளையை காட்டி சொன்னார். அவர் சொல்லியிருக்கிறார், “சிறுபிள்ளையை போல ஆகாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.” சிறு பிள்ளையை போலதான் – சிறுபிள்ளையாக அல்ல – சிறுபிள்ளையை போல நம்பி விசுவாசித்தல். அவர் உங்களை ஏற்றுகொள்வார். அதை தம்முடைய வார்த்தையில் வாக்குபண்ணி இருக்கிறார், உங்களை மன்னித்து உங்கள் மீட்பராக இருந்திடுவார்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  அருமை. நேயர்களே, இதை கவனமாக கருத்தில் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். ஒருநாள் நானும் இயேசுவை என் வாழ்வில் வரும்படி அழைத்தேன் அவர் வந்ததை நான் அறிந்துகொண்டேன். நீங்களும் உண்மையாய் கேட்ப்பீர்கள் என்றால், அவர் உங்கள் வாழ்வில் வந்ததை அறிந்துகொள்வீர்கள் உங்களை அவர் மாற்ற ஆர்ம்பித்திடுவார். உங்களுடைய சொந்த பலத்தால் உங்களுக்கு உண்டாகாத விருப்பங்களை உங்களுக்குள் ஏற்ப்படுத்துவார். அவரே மாற்றத்தை கொடுப்பார். அதனால் தான் அவர் இரட்சகர், தேவனாக இருக்கிறார்.

அடுத்த வாரம் மத்திய கிழக்கு பகுதி மாணவர்களின் மிக கடுமையான கேள்விகளை தொடர்ந்து பார்த்திடுவோம். நீங்களும் கலந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

 

 

எங்களுடைய மற்ற டிவி நிகழ்சிகளை பார்க்க எங்களுடைய ஜான் அன்கேர்பெர்க் ஷோ ஆப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்திடுங்கள்.

“இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கான ஜெபம்” JA show.org

 

இயேசு திரைப்படம்

கிறிஸ்தவராவது எப்படி

நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்? கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது. கிளிக் செய்யவும்.

ஆடியோ பைபிள்