இறைநம்பிக்கையற்றவர்களுக்கு ரவி சகரியாசின் பதில்கள் – நிகழ்ச்சி 1

இறைநம்பிக்கையற்றவர்களுக்கு ரவி சகரியாசின் பதில்கள் – நிகழ்ச்சி 1

 

அவர் இந்தியாவில் வளர்ந்தவர் அவருடைய முன்னோர்கள் பாரம்பரிய இந்துமத உயர்குல ப்ரோகிதர்கள். ஆனால் ஒருநாள் அவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேள்விப்பட்டு கிறிஸ்தவராக மாறினார். அவர் உலகிலேயே அதிக ஞானம் கொண்ட கிறிஸ்தவ விசுவாச தர்க்காப்பாளராக இருந்து வருகிறார், 70ற்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார் அங்கு அவர் பிரசித்திபெற்ற பல்கலைகழகங்களில் உரையாற்றுகிறார், குறிப்பாக ஹார்வர்ட், பிரின்ஸ்டன்,தர்மௌத், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம். அவர் தென் ஆப்ரிக்காவில் சமாதான உடன்படிக்கையின் அங்கத்தினர்களை சந்தித்திருக்கிறார், லெனின் மிலிடரி அக்கடமியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் மாஸ்கோவில் புவிசார் மூலோபாயத்தின் மையத்தையும் சந்தித்திருக்கிறார்.

மூன்று முறை நியூயார்க்கில் ஆக்கிய நாடுகளின் வருடாந்தர ஜெபத்தில் காலைஉணவின்போது பேசும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். அதோடு அரசாங்கத்தின் தேசிய அளவிலான ஜெபங்களில் காலைஉணவின் போது உரையாற்றியிருக்கிறார் ஒட்டாவா, கேனடா லண்டன் இங்கிலாந்து, அதோடு வாஷிங்டன்னில் CIA விழும் உரையாற்றியிருக்கிறார். ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியின் இந்த விசேஷித்த  பகுதியில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நிகழ்சிக்கு உங்களை வரவேற்கிறோம். நான்தான் ஜான் அன்கேர்பெர்க். இன்றைக்கு எங்களோடு இருப்பதற்கு நன்றி. ஒருவேளை உங்களுடைய நண்பர் இன்றைய நிகழ்ச்சியை பார்க்கும்படி அழைப்பு கொடுத்திருக்கலாம் இன்றை விருந்தினரின் உரையை கேளுங்கள். உண்மையில், உங்களை வரவேற்க விரும்புகிறேன் அதோடு இன்றைக்கு நீங்கள் கேட்கப்போகிற காரியங்கள் ஏமாற்றத்தை அளித்திடாதேன்று அறிந்திருக்கிறேன். என்னுடைய விருந்தினர் சிறந்த கிறிஸ்தவ தற்க்காப்பாளரான ரவி சகரியாஸ் அவர்கள், உலகம் முழுவதும் 70ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார், பல பிரசித்திபெற்ற பல்கலைகழகங்களில் உரையாற்றியிருக்கிறார், மாணவர்கள் கேட்கும் வாழ்வின் கடுமையான கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். அதை அவர் விருப்பத்தோடு சரியான ரீதியிலும் விளக்குகிறார்.

அவர் உலகின் பல இடங்களில் உள்ள  அரசாங்க அதிகாரிகள் மத்தியிலும் உரையாற்றி வருகிறார் 3 முறை நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார், அவர்களுடைய வருடாந்த ஜெபத்தின் காலைஉணவின் போது, ஒவ்வொரு வருடமும் அதுதான் ஐ. நா வின் பொது குழு துவக்கத்தின் முதல் நாளாகும். இந்த நிகழ்ச்சியானது, நேயர்களே, இதை 206 நாடுகளில் உள்ளா எல்லா இடங்களிலும் ஒளிபரப்பபடுகிறது. இதை பல மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறோம். வரப்போகிற வாரங்களில் நான் மாணவர்களின் சில கேள்விகளை ரவியிடம் கேட்க்க இருக்கிறேன். முதலாவதாக, கிழக்கு பகுதியில் இருந்து வந்த கேள்விகளை பார்க்க இருக்கிறோம், அதற்கு பிறகு மத்திய கிழக்கு பகுதியின் கேள்வியை பார்க்கலாம், இன்னொருவாரம் ஐரோப்பாவில் இருந்து எழுந்து கேள்விகள், இறுதியாக அமெரிக்க மாணவர்களின் கேள்விகளை பார்க்கலாம். இது நிச்சயம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன்.

இன்றைக்கு இந்த நபரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இவர் சென்னையில் பிறந்தவர். இந்தியாவில். சரி, ரவி, உலகம் குழப்பத்தில் இருக்கிறது, ஜனங்கள் விடைகளை தேடி அலைமோதுகின்றனர், அவர்களின் கேள்விகளுக்கான விடையை அறிய முடியாமல் தவித்துகொண்டிருக்கிறார்கள். நீங்களும் ஒருசமயத்தில் குழப்பம் நிறைந்த வாலிபனாக இருந்த்திருக்கீங்க. எங்களை சென்னைக்கு கூட்டீட்டு போங்க. அப்ப இயேசுவின் போதனைகளை பற்றி உங்களுக்கு முழுவதுமாக தெரியாது.அந்த சமயத்தில் எப்படி நீங்க ஒரு விசுவாசியாக மாறி இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவராக மாறினீங்க?

Dr.ரவி சகரியாஸ்:   எல்லாத்துக்கும் முதல்ல, உங்களோட இருப்பதுல ரொம்ப சந்தோஷம், ஜான். உங்களை பல வருடங்களா எனக்கு தெரியும் நம்முடைய நடப்பில் எனக்கு எப்பவுமே சந்தோஷம்தான். எஸ், நீங்க சொன்னது சரிதான், இன்றைக்கு நம்முடைய உலகில் குழப்பம் என்பது இன்றியமையாத ஒன்றா இருக்குது, இந்த கலாச்சாரத்தில்தான் இப்படி என்று குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. நா எங்க போனாலும் சரி, உண்மையில், பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் வாலிபர்களாக தான் இருக்காங்க. பல்கலைகழகமானாலும் உயர்நிலை பள்ளிகளானாலும் இவங்கதா இருப்பாங்க, ஏன்னா இதுதான் வாழ்வில் கேள்விகள் எழும்பும் வயது. ஒரு சீன பழமொழியில் சொல்லப்பட்டிருக்கிறது, “தண்ணீரை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் மீனிடம் கேட்க்காதே.” ஒரு காரியத்தில் நாம ஆழமாக இறங்கிவிட்டால், பல சமயங்களில் நம்முடைய கண்ணோட்டங்களை பற்றி யோசிக்க மாட்டோம், எந்த சூழ்நிலையில் என்ன கேள்வி கேட்க்கிறோம் என்று நமக்கு தெரியாது. இதில் சுவாரஸ்யமான ஒன்று இருக்கிறது, ஒருவேளை நீங்க வெளித்தோற்றத்தில் அதில் மூழ்கியிருக்கலாம் ஆனால் உள்ளாக உங்களை கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளை விட்டு உங்களால எங்கேயும் ஓடவே முடியாது.

ஆமா, நீங்க, சொல்றது உண்மைதான். இந்தியாவில் சென்னை பட்டணத்தில் பிறந்தேன், அந்த காலத்தில் அது மெட்ராஸ் என்று இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால தான் மாற்றப்பட்டது. பாம்பேயும் மும்பைன்னு மாற்றப்பட்டது, இதை எல்லாத்தையும் நா சேகரித்து வைத்திருக்கேன்.நா  தென் மாநிலத்தில் வளர்ந்தேன். என்னுடைய அம்மா சென்னைலயே பிறந்து வளர்ந்தவங்க, என்னோட அப்பா கேரளாவின் தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர். இருவரும் சென்னையில் அறிமுகமாகி திருமணம் செய்துகொண்டாங்க. எங்க அப்பா மலையாளம் பேசுவார், அம்மா தமிழ் பேசுவாங்க, நா டெல்லியில் வளர்ந்ததால நா ஹிந்தி பேசுவே. பெரும்பாலும் தமிழும் ஹிந்தியும்தா பேசுவேன், மலையாளத்தில. எங்க அப்பா திட்டும்போது சொன்ன வார்த்தைகள் மட்டும்தான் தெரியும், அதனால் வெளியிடங்கள்ள நா பேச மாட்டேன். ஆனா எனக்கு 3 நாலு வயதிருக்கும் போது சென்னை தான் எங்க சொந்த ஊராக இருந்தது, அதற்கு பிறகு டெல்லிக்கு போய்ட்டோம்.

இதுல ஒரு விஷயம், ஜான், உலகிலேயே இந்தியாதான் அதிக மதவாதங்களை கொண்டிருக்கும் நாடு என்பதை மக்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்கள். சடங்காச்சாரங்கள் மூலம் பதிலை தேடி அலைகிறார்கள், வரலாற்று பாரம்பரியங்களை ஆராய்கிறார்கள், இவை அனைத்தும் மதங்களின் கோட்ப்பாடுகளுக்கு கீழ் வருகிறது. உண்மைய சொன்னா, இந்து பண்டிதர்கள்  இந்துமதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்ப, இந்த காரியங்களை இந்திய மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே பக்தியோடு பின்பற்றுகிறார்கள். ஆனால் அந்த கலாசாரத்தில்,  எனக்கு நல்ல குளத்தின்  பின்னணி இருக்கிறது இந்து மத ஆச்சாரி என்ற உயர்ந்த குளத்தை சேர்ந்தவன், அதை நம்பூதிரிகள் என்று சொல்லுவார்கள். என்னுடைய அப்பா கேரளாவையும், அம்மா சென்னையையும் சேர்ந்தவங்கன்னு சொல்லியிருக்கேன், ஆனா உண்மையா மதரீதியாக நா யோசித்து பார்த்ததே கிடையாது. ஏன்? என்னுடைய எண்ணம் எல்லாம் படிக்க வேண்டும் என்று கட்டாயத்தில் மூழ்கியிருந்தது. கல்வி நிலையை அடைய இந்தியாவில் போட்டிகள் அதிகம். நீங்க நல்லா படிச்சு மதிப்பெண்கள் எடுக்கலன்னா, உங்களால ஒன்னுமே செய்ய முடியாது. அதனால் எல்லா பக்கத்திலிருந்து அழுத்தம் அதிகமாயிருக்கும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  அங்க படிக்கும் நாட்கள் தான் அதிக அழுத்தமுடைய காலங்கள்.

Dr.ரவி சகரியாஸ்:   ஆமா. பாஸ் பண்ணா மட்டும் போதாது, முதல் இடம் வேண்டும், பட்டியல்லையே முதல் இடங்களில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். என்னால அப்படி செய்யவே முடியாது. கிரிக்கெட் என் இரத்தத்தில் ஊறி இருந்தது. நா கிரிக்கெட்டும் டென்னிசும் விளையாடுவேன், எனக்கு விளையாட்டு துறைதான் இடிக்கும். படிக்கிற பாகத்தை ரொம்பவும் வெறுப்பேன். கடைசியில இதுவே எனக்கும் அப்பாவுக்கும் பெரிய பிரச்சனையில கொண்டு பொய் விட்டுடுச்சு. நா உருப்படவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். தொடர்ந்து என்ன செய்வதென்ற குழப்பம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை. இந்தியாவை பற்றி இன்னொரு விஷயத்தையும் சொல்லலாம் அது வெட்கத்தை உண்டாக்கும் கலாசாரத்தை உடையது. நீங்க நல்ல விதமா வரலைன்னா, நீங்க சாத்திக முடியாதவர் என்ற வெட்கமான நிலைக்கு தள்ளப்படுவீங்க. இந்தியாவில் அதிகபட்சமான தற்கொலைகள் செய்திதாளில் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளுக்கு பிறகுதான் சம்பவிக்கிறது. நாடு முழுவதிலும் வாலிபர்கள் மாடிகளிலிருந்து விழுகிறார்கள், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீ வைத்துக்கொள்கிறார்கள். இப்படிதா… என்னுடைய உயிர் நண்பனும் செய்துசொண்டான். இது எல்லாமே … நான் பிறந்து வந்த கலாச்சாரத்தில் இருக்கும் பெரிய பிரச்சனைகள். என்னோடு சகோதர சகோதரிகள் எல்லாரும் நல்லா படிச்சாங்க, என்னால முடியல. அதனால என்னை குடும்பத்துல உதவாக்கரை என்றனர். அதுதான் என்னை ரொம்பவும் பாதித்தது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நானும், மும்பைக்கு போயிருக்கேன், மறுபடியும் கொல்கத்தா போகும்படி இருக்கிறேன். ஜனங்கள் தாங்கள் பின்பற்றுகிற மத கோட்ப்பாடுகளை ஜாக்கிரதையோடு செய்வதை பார்த்திருக்கிறேன். ரொம்பவும் உண்மையா செய்றாங்க, ஆனாலும் அவங்களுக்குள்ள குழப்பம் இருக்குது, இன்னும் அவங்களுக்கு பதில் கிடைக்காததால, பதில் தேடிட்டு இருக்காங்க. அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க.

Dr.ரவி சகரியாஸ்:   ஆமா. இந்தியாவின் மிக முக்கியமான மதங்கள்: இந்துமதம், இஸ்லாம், புத்தமதம், சீக்கியமதம், ஜெயின் மதம், அதில பாஹா மதத்தின் சாயலும் இருக்கும். இதெல்லாம் இருக்குது. அங்க கிறிஸ்தவத்தின் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது. ஜனங்களோட, கருத்துப்படி, கிறிஸ்தவம் எனபது உலகின் பார்வையில் பிரத்தியேகவாதமானது என்பதாகும். இல்ல, இல்லை, அப்படி இல்ல. எல்லாமே பிரதியேகவாதமுடையதுதான். அது ஒவ்வொன்றுமே பிரத்தியேகமான ஒன்றுதான், அப்படியில்லைன்னா எதுவுமே தொன்றியிருக்காதே. அனைத்தும் ஒரு நோக்கத்திற்காக கண்டறியப்பட்டுள்ளது, நிச்சயம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். விடைகளை தேடும் பணியை செய்யும்போது, ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு தான் நான் வந்து நின்றேன். எல்லாமே வேருமையாயிருந்தது , தனிமையில் இருந்தேன் பள்ளியில் தோல்வி அடைந்தேன். எல்லாம்… எனக்கு ஒரு கிறிஸ்தவ நண்பர்கூட, இருந்தது கிடையாது. எல்லாருமே, பெரும்பாலானவங்க, இந்துமார்க்கத்தினர் அவங்க குடும்ப பின்னணிக்கும் படிப்பு காரியங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தார்கள். இந்த மாதிரியான சூழலில்தான் வளர்க்கப்பட்டேன். இப்ப ஒரு வெளுமை என்னக்குள் உண்டானது, பதில்கள் கிடைக்கல, கேள்விகள் அதிகமானது. பாரம்பரியம், பாரம்பரியம், பாரம்பரியம். அதை பின்பட்ட்ற வேண்டும். இது என்னை எந்த முன்னேற்றத்திற்கும் நடத்தி செல்லாது என்பதை அறிந்துகொண்டேன், அதனால் என் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தேன்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா, அதை பற்றி சொல்லுங்க. நீங்க அந்த காரியத்தை எப்படி செய்தீங்க?

Dr.ரவி சகரியாஸ்:   நா, அதாவது, பல வருடங்கள் என்னால செய்ய முடியல, ஜான், உண்மையா சொல்றதுக்கு என்ன. என்னுடைய அப்பா இருந்தவரை… அப்பா அம்மா உயிரோட இருந்தவரை அவங்களுக்கு இது ரொம்ப அவமானமா தோன்றினது. என்னோட அப்பா தனது கடைசி நாட்களில், எங்கிட்ட இதைப்பற்றி கேட்க்கும்படி என்னோட மனைவிடம் சொல்லி அவங்க எங்கிட்ட கேட்க்க வந்தாங்கள். அது… அது வெட்கப்பட வைக்கிற ஒரு நிலை, தெரியுமா. நீங்க.. ஒருவரும் தங்களோட வாழ்க்கையில தாழ்ந்து போனதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இதை கேட்டுக்கொண்டிருக்கிற நேயர்களுக்கு சொல்லுகிறேன் மனரீதியா பாதிக்கப்பட்டிருக்கேன் என்று சொல்வதெல்லாம் தவறு, எந்த போதை மருந்தும் காரணமல்ல, வேறு எதையும் சொல்ல முடியாது. வாழ்வின் அர்த்தத்தை அறிந்திட முடியாதது தான் காரணம். நா வாழ்க்கையை நல்லா வாழ நினைத்தேன் ஆனா என்னால அது முடியவே இல்லை.

கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய வகுப்பிற்கு போனேன் நா சைன்ஸ் லேபுக்கு போனேன், அங்க சில இரசாயனங்களை பார்த்தேன், பிளாஸ்டிக் பைகளில் எடுத்துக்கொண்டேன், அதுல என்னவெல்லாம் இருந்துதுன்னு எனக்கு தெரியாது, ஆனா விஷம் என்று குறிக்கப்பட்டிருந்த பாட்டிலை எடுத்தேன். அதை வீட்டிற்கு கொண்டு வந்தேன், ஒருநாள் அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் அதை கலக்கினேன். அப்ப வீட்டுல யாருமே இல்ல.  நா அப்ப… குளியல் அறைக்குள் போனேன்… குளியல் அறை, அங்க, அது கொப்புளித்து நுரைகள் மேலெழும்ப ஆரம்பித்தது. அதனால ஸ்பூன் வைத்து நல்லா கலக்கி அதை குடித்து விட்டேன்.

என்னுடைய கதையை சொலும்போது ஆரம்ப நாட்களில் “தவறுதாலாக” என்பேன், ஆனா டாக்டர் என்னை திருத்தி சொல்லவைத்தார். அவர் என்னிடம், “அதிஷ்டவசமாக என்றிடு என்றார்” அது ரொம்ப உப்பாக இருந்ததால, என்னுடைய சரீரம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இப்ப நா அங்க, என்னுடைய சரீரம் வியர்க்க ஆரம்பித்ததும் அங்கிருந்த தொட்டியை பிடித்துக்கொண்டிருந்தேன். அப்படியே மயங்கி விழுந்துட்டேன், உதவிக்காக சத்தம் போட்டேன். வீட்டில் இருந்த வேலைக்காரர்  என்னுடைய கூச்சகளை கேட்டார். வேறுயாருமே அங்க இல்ல. அவர் வந்தார். அவர் கதை உடைத்தாரா இல்ல அதை தள்ளினாரா என்ன செய்தாருன்னு எனக்கு தெரியாது, சரியா எனக்கு ஞாபகமில்ல. என்னை அந்த கோலத்தில் பார்த்த அவர், ஒரு டேக்சில என்ன கூட்டீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். நா மறுடியும் என்னுடைய சுய நினைவிற்கு வந்தபோது,  நீர்போக்கு உண்டானதால என்னுடைய கரத்தில் ட்ரிப்க்கான ஊசி இருப்பதை பார்த்தேன். என்னோட அப்பா அம்மா என் பக்கத்தில் இருந்தாங்க. இது எப்படி இருந்துச்சு தெரியுமா உனக்கு  உறுப்படியா வாழவும் தெரியல இப்ப உறுப்படியா சாகவும் தெரியல என்பது போல இருந்தது.  இதுவரைக்கு நா கேட்டுக்கொண்டிருந்த கேள்விகள் இன்னும் அதிகப்படியான அழுத்தத்தோடு எழும்பினது போல அந்த கட்டத்தில் தோன்றியது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆனா உங்க அறைக்குள் வந்த ஒரு மனிதன் அவர் என்ன செய்தார்?

Dr.ரவி சகரியாஸ்:   சரி, இதுதான் என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம். அதிலிருந்துதான் தெய்வீக சந்திப்புகள் என்பதை நம்ப துவங்கினேன். யாரும் வரும்படியா நா எதிர்ப்பார்த்திராத நேரம், உண்மையில், இப்ப கூட அவர எப்படி அந்த இடத்துல வர அனுமதிச்சாங்கன்னு எனக்கு இன்னும் புரியல, ஒருவேளை அவர் தனை ஊழியன் என்று சொன்னதால இருக்கலாம். அவர் ஒரு சிறிய சிவப்பு நிற புதிய ஏற்ப்பாட்டை கொண்டுவந்து எனக்கு வாசித்து காட்டும்படி கேட்டுக்கொண்டார், என்னால கேட்க்க முடியாதுன்னு அம்மா சொன்னாங்க, அவ ரொம்ப முடியாம இருக்கான்னாங்க. அதனால அவரே யோவான் 14ம் அதிகாரத்தை எடுத்தார்.  அது இயேசு தோமாவிடம் பேசுகிற பகுதியாயிருந்தது, இந்தியாவிற்கு சுவிசேஷத்தை கொண்டு வந்த முதல் மனிதர் அவர்தானே. அவர் நம்பூதிரிக்கு அதை வாசிக்கிறார், அதாவது, என்னுடைய முற்பிதாக்கள் அப்படிதான் அழைக்கப்பட்டார்கள்.

இந்த யோவானின் பதினான்காம் அதிகாரம், இங்கு இயேசு சொல்கிறார், “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்,” அந்த வசனத்தை நான் பிடித்துகொண்டு சொன்னேன், “இயேசுவே, இதுவரைக்கும் இல்லாத ஒரு வாழ்க்கையை எனக்கு கொடுப்பீரானால், அதை உம்மிடம் இருந்தே பெற விரும்புகிறேன்.” அதுதான் என் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நா, நா அதுவரை அர்த்தமுள்ள ஜெபத்தை செய்தது கிடையாது. நான் இயேசு கிறிஸ்துவை வரவேற்றேன், வாழ்வின் துவக்கம் அவர், யாரும் கொடுக்க முடியாத வாழ்க்கையை கொடுக்கும்படி கேட்டேன். அப்ப 17 வயசு. அந்த வேதத்தை என் அம்மாவின் கரத்தில் கொடுத்தார், என்னால பிடிக்க முடியல ஏன்னா, முன்னால, சொன்ன மாதிரி நீர்போக்கு உண்டாயிருந்தது. அதனால என்னோட அம்மா, அவங்களோட கனத்த குரல்ல, எனக்கு வாசிக்க ஆரம்பித்தாங்க, அந்த ஜெபத்தை ஏறெடுத்தேன். அதுதான் இன்றைக்கு வரைக்கும் சந்தோஷத்தோடு நிரந்தர புதுமைகளை பார்த்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையின் துவக்கமாக இருந்தது. ஆனா உங்க இருதயத்தில் தேவனுடைய வரைபடத்தை கொண்டிருந்தால், அவரோடு சேர்ந்து கரம்பிடித்து நடந்திடுவீர்கள்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  எனது விருந்தினரான ரவி சகரியாஸ், சிறந்த கிறிஸ்தவ தர்க்காப்பாளர் எனக்கு தெரிந்தவர்களில் உலகம் முழுவதிலும் இவரைப்போல பல்கலைகழக வளாகங்களில் உரையாற்றியவர்கள் யாருமே இல்லை. நீங்க ஹார்வர்ட் வந்து கடினமான தலைப்பில் 3 விரிவுரைகள் அளிக்கும்படி அழைக்கப்பட்டிருன்தீர்கள் இல்லையா: மனிதன் கடவுளின்றி வாழ முடியுமா? அந்த விரிவுரை தொகுப்பின் மூலமாய் ஒரு புத்தகமும் வெளியானது. இப்ப எங்களை அந்த கேள்வியின் பதிலுக்குள் நடத்தி செல்லுங்கள், “ மனிதன் கடவுளின்றி வாழ முடியுமா”?

Dr.ரவி சகரியாஸ்:   ஆமா, அது எனக்கு மறக்க முடியாத ஒரு காலம், ஜான். 90களின் ஆரம்பத்தில் உண்டான வெரிடாஸ் மன்றத்தால் நடத்தப்பட்டது. இப்ப உலகம் முழுவதும் பலவிதமான பல்கலை கழகங்களில் நடத்துகிறார். அங்க எனக்கு கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு, “மனிதன் கடவுளின்றி வாழ முடியுமா?” வில் டுரன்ட் அவர்களின் கூற்றிலிருந்து உண்டான கேள்வி. அவர் சொல்கிறார், “ நம்முடைய காலத்தில் பிரபலமாக இருக்கும் கேள்விகள் வடக்குக்கும் தெற்குக்கும் கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள வித்தியாசமோ, கம்யூனிஸ்ட் மற்றும் அதிகாரத்துவத்திற்கும் இடையானதோ அல்ல, இந்த நாட்களில் பெரிதும் கேட்கப்படுகிற ஒரு கேள்வி உண்டு, தேவ துணையின்றி மனிதன் வாழ முடியுமா?” இதனுடைய கடைசி வரியை எடுத்து நான் என் தலைப்பாக வைத்துக்கொண்டேன். 2 விரிவுரைகளை அங்கு முன்வைத்தேன், பலதரப்பட்ட குழுவினர் உதவினார்கள், சித்தாந்த சங்கங்கள், கிறிஸ்தவ குழுக்கள், இன்னும் பலர். நடந்த இடம் ஹார்வர்ட் சட்டப் பள்ளி.அதில் நடந்த 2 விஷயங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. அது ஹார்வர்ட் யாலே கால் பந்து விளையாட்டின் வார இறுதியில் நடந்தது…

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  கால் பந்து விளையாட்டு

Dr.ரவி சகரியாஸ்:   ஆமா, அங்க அவங்களுடைய அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்ற பதட்டத்தில் இருந்த ஒரு சூழ்நிலை. இரண்டாவது, 2 வாரங்களுக்கு பிறகு அன்றைக்கு தான் நா நிற்க துவங்கினேன். நான் டேவிட் லிவிங்ஸ்டன் பற்றிய சில ஆராயசிகளுக்காக ஸ்காட்லாந்தில் இருந்தபோது, முதுகில் அடிபட்டது, என்னுடைய டிஸ்க் விலகிவிட்டது, என்னுடைய சரீரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. கிளாஸ்கோவில் 5 நாட்கள் [படுத்த படுக்கையாக இருந்து திரும்பி வந்தேன். என்னுடைய குழுவினரில் ஒருவர் என்னை அழைத்து வர வந்தார். நா பாஸ்டனுக்கு போகிற நாள் வரைக்கும் படுக்கையிலேயே தான் ஓய்ந்திருக்க வேண்டியிருந்தது. இது இரண்டுமே மறக்கமுடியாத நினைவுகள். அது எப்படி நடக்கும் என்பதே தெரியாமல் இருந்த நாட்கள்.

இதுதான் இந்த கேள்விதான் எனக்காக வைக்கப்பட்டிருந்த கேள்வி. இதை பதிலளிக்க இரண்டு விதங்கள் இருக்கிறது. சூத்திரங்கள் மூலம், ஆமா, தேவன் இல்லை என்கிற எண்ணத்தோடு ஒருவேளை ஜனங்களால் வாழ முடியும். நாத்திகர், இறை மறுப்பாளர்கள், இவர்கள், பல சமயங்களில் இதை நம்புகிறார்கள். நடைமுறைபடி இது சாத்தியமல்ல, எந்த விஷயத்திலாவது நீதியான முடிவு எடுக்க வேண்டுமென்றால் இந்த கருத்து முரண்பாடாக இருக்கும். இந்த பிரச்சனை ஜீன் பால் சர்த்ரேக்கும் இருந்தது. இதே பிரட்சனையைதான் ஆன்டனி ப்ளுவும் சந்தித்தார், இது நமக்கு தெரியும். வாழ்க்கையை பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு இப்படிப்பட்ட சீரற்ற நிலையிலான காரியங்கள் உலக கண்ணோட்டத்தில் நிறுத்த முடியாது. இதை எந்த விதத்திலும் செய்து பார்க்க முடியாது. ஆமா இப்படி இருந்தா ஜனங்களுக்கு பிடிக்கலாம்… ஆனா யதார்த்தமான நிலையை தவிர்த்திட முடியாதே. ஆனா ஒருவேளை நீங்க உங்களுடைய வாழ்க்கையில் தேடுகிற பதிலை பெற்று இசைந்து வாழ விரும்பினால், கடவுள் இல்லாமல் வாழ்வது சாத்தியமற்ற காரியமாகும். இதுதான் டுரண்டின் சவாலாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அவர் இல்லை என்ற எண்ணத்தோடு நாம் வாழப்போகிறோமா? அப்படி இருந்தால் எப்படிப்பட்ட குழப்பங்கள் நிறைந்த உலகை நாம் சந்திக்கப்போகிறோம்? நீட்ச்கீ சொன்னது போல , “தேவன் மரித்துவிட்டார்” என்ற கருத்து அதிகளவில் பரம்புவதால் 20ம் நூற்றாண்டு வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான நூற்றாண்டாக இருக்கும். 19 நூற்றாண்டுகளை ஒன்றாக இணைத்தாலும் இந்த கொடூரம் இருக்காது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆ ம்ம். ஆமா, நீட்ச்கீயின் எழுத்துகள் ஹிட்லரை ஈர்த்திருப்பது சுவாரஸ்யமான காரியம். ஹிட்லர் அதை ஸ்டாலினுக்கும் முசோலினிக்கும் கொடுத்திருக்கிறார். அந்த 3 தேசங்களிலும் என்ன நடந்தது என்பதை உங்களால் சொல்ல முடியும்.

 

Dr.ரவி சகரியாஸ்:   ஆமா. இது, அதாவது, பால் ஜான்சன் புத்தகனகளை வாசித்து பார்த்தால், அதில் அவர் “ நவீன காலம்” என்று ஒரு கதை சொல்கிறார். அதில் அவர் 1900களில் இருந்த இந்த 3 வாய்வீச்சாலர்களை பற்றி சொல்கிறார், ஹிட்லர், ஸ்டாலின் முசோலினி. இதிலுள்ள முரண்பட்டு என்னன்னா, ஸ்டாலின் ஒருமுறை ஊழியத்திற்கு போக புறப்படுகிறார், அதாவது, அவர் தேவனுடைய விசுவாசத்திலிருந்து விழுந்துவிட்டார். ஹிட்லர், உண்மையில், அவர் சிறந்த இனத்தை கட்டியெழுப்ப விரும்பியவர், சிறந்த மனிதனாக, சக்திவாய்ந்தவராக இருக்கும்படி தன்னை வளர்த்துக்கொள்ள முற்பட்டார். அப்ப கடவுளின்றி வாழ முடியும் என்ற கருத்து பிரபலமானது. நீட்ச்கீ, அவர் சொல்கிறார், ஒரு போதகருடைய மகன், அவருடைய 2 தாத்தாவும் ஊழியத்தில்தான் இருந்தார்கள்,

அவர் சொல்கிறார் 19ம் நூற்றாண்டில் தேவன் மரித்துவிட்டார் என்று சொல்வோமானால் ஒருவிதமான மதியீனம் எங்கும் சூழ்ந்துவிடும் என்றார். அவருடைய வாழ்நாளின் கடைசி 13 ஆண்டுகள் மன நோயினால் அவதிபட்டார், சிலவேளைகளில் பல வாரங்களுக்கு மவுனமாக இருப்பாராம். அவர் சொல்லிய ஒரு உதாரணம் இருக்கிறது. அவர் சொல்கிறார், தன்னுடைய கையில் விளக்கை ஏந்திக்கொண்டு பட்டணத்திற்குள் போன மூடனின் கதை தெரியுமா, “நான் தேவனை தேடுகிறேன், தேவனை தேடுகிறேன் என்றான்.” அவர் பரவசத்தோடு நகைத்துகொண்டிருந்தான், அவனை சுற்றிலும் நின்றுகொண்டிருந்த ஜனங்கள், அவர் புத்தி பேதலித்தவன் என்று நினைத்தார்கள். அப்போது அவன் சொன்னான், அவன் கேட்டான், “ தேவன் எங்கே போனார்? அவரை தவரவிட்டோமா, அவர் நீண்ட பிரயாணம் போய்விட்டாரோ?” இதுதான் கேள்வி.

ஆனா நிட்சீகீ இடம் எனக்கு பிடித்த விஷயம் என்னன்னா அவர் தன்னுடைய கூற்றின் முடிவை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். நவீனகால தத்துவமேதைகள் முடிவு எப்படிபட்டது என்பதை நடைமுறையில் எடுத்து சொல்வதில். நிட்சீகீ உண்மையாய் எடுத்து சொல்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், அவர் ஒரு பரிணாம மாற்றத்தை சொல்கிறார், “ தொடுவானம் முழுவதையும் அகற்றிட நமக்கு உரிமை கொடுத்தவர் யார்?… திரும்பும் திசைகள் வேறு ஏதாவது மீதமுள்ளதா?… காலையில் விளக்கை கொளுத்துவது அவசியமா?இதுவரை மனிதர்கள் சாதிக்க முடியாத பெரிய காரியங்களை எப்படி சாதித்து முடிக்க முடியும்?” எந்த காரியமும் மீதமில்லை, குறிப்பிட்ட சொல்ல எதுவுமே கிடையாது. தேவன் மரித்துவிட்டார் என்பதற்கு நிஜங்கள் மரித்துவிட்டது, விளக்கங்கள் எல்லாம் மரித்துவிட்டது  என்று அர்த்தம் என்பதை புரித்துகொண்டார்

அவருடைய கேள்வி இதுதான்: “எந்த மாதிரியான சடங்காச்சாரங்களை செய்து நம்முடைய ஏக்கத்தின் நிலையை தணித்து திருப்பிதை கொண்டுவரமுடியும்?”அவர் என்ன சொல்ல வருகிறார்? ஒருவிதமான ஆன்மீக ஆற்றல் தேவையாக இருக்கிறது, ஒருவிதமான ஆன்மீக நிலை, யதார்த்தமான இயற்கையான நிலை. இப்ப இவை அனைத்தையும் நாம் எப்படி கண்டரியப்போகிறோம்?

என்னை பொறுத்தவரை, ஜான், உண்மையில், நம்முடைய நாட்களில் இது மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது. தேவன் இப்போது இல்லை என்று சொல்வோமானால், எல்லாவற்றிற்குமான அர்த்தத்தை எங்கிருந்து நாம் தெரிந்துகொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்ன? நிட்சீகீ சரியான இலக்கை பார்த்திருக்கிறார். அதனால் தான் அவர் சொல்கிறார், “ இரண்டு காரியங்கள் சம்பவிக்கும்: 19ம் நூற்றாண்டில் கடவுளை கொன்றுவிட்டதால் (தத்துவ ரீதியில்) 20ம் நூற்றாண்டு வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான நூற்றாண்டாக இருக்கும் அதோடு உலகில் மதியீனம் தலைவிரித்தாடும்.”

உலகில் இந்த நாட்களில் நாம் எந்த மாதிரியான அறிக்கைகளின் அடிப்படையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமா? 20ம் நூற்றாண்டில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும், ஆஸ்விட்ச் மற்றும் எல்லா காரியங்கள். அதாவது, ஜனங்கள் இந்தமாதிரியான விஷயங்களை கேட்க விரும்புவதில்லை. அவங்க, ஆ, இதெல்லாம், ஏதோ முடிவிற்கு தள்ளீட்டு போகுது என்கின்றனர். இல்ல, இல்ல, இல்ல, G.K. செஸ்டர்டன் இப்படியாக சொல்லுகிறார், “ கடவுளை நம்பாதவர்கள் என்ற சொல்லப்படுபவர்கள் எதையுமே நம்பாமல் இருப்பவர்கள்  எனப்படுபவர்கள் அல்ல. அதிலும், கேடானா வகையில், அவர்கள் மற்ற எல்லாவற்றிலும் நம்பிக்கை வைத்திடுவார்கள்.”

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா. நம்முடைய கலாச்சார வாழ்வில் அல்லது தனி நபருடைய வாழ்விலிருந்து தேவனுடைய பிரசனத்தை நாம் நிராகரித்தால் ௪ முக்கிய பிரச்சனைகளை சிந்திப்போம் என்று சொல்லியிருந்தீர்கள். அதில் முதலாவதாக நீங்க சொன்ன காரியம்… இந்த கேள்விகளுக்கு இந்த பிரச்சனைகளுக்கு யாரும் இதுவரை யதார்த்தமான விதத்தில் சரியாக பதில் அளிக்க முன்வரவில்லை என்றீர்கள். முதாவது கேள்வி: தேவன் இல்லை என்று சொல்வோமானால், நீதியான காரியங்கள் என்று சொல்வதற்கு எந்த முன்னுதாரணங்களும் நமக்கு இருக்காது. இதை விளக்கிடுங்கள்.

Dr.ரவி சகரியாஸ்:   சரி, அதாவது, நா…நா பிறப்பால கிழக்கத்தியன் இப்ப நா இங்க இருப்பதலா மேற்க்கத்தியன். இந்த 2 கலாசாரத்தையும் எனக்குள்ள கொண்டிருக்கிறேன்… இவை இரண்டினுடைய பலத்தையும் பலவீனத்தையும் பார்க்கிறேன். மேற்க்கத்திய நாடுகள்ல தேவன் இருக்கிறார் என்பதை வியப்பை உண்டாக்குகிறது, கிழக்கத்திய நாடுகள்ல எந்த கடவுள் மீது நம்பிக்கை வைப்பதென்ற நிலை உள்ளது. அதாவது, இந்த மாதிரியான பதற்றங்கள் இருக்கிறது. ஆனா உண்மை என்னன்னா, நம்முடைய வாழ்க்கை தரத்தை ஒரு நீதியா நிலையை சார்ந்து அமைத்திட அவசியம் இருக்கிறது. அமெரிககாவில் சட்டத்தின் வேர்கள் என்பதை பற்றி பார்க்கிறோம். ஆல்ரைட், இங்க சட்டம் என்ற வேர் இருக்கிறது, அதில் அரசியல் என்ற தண்டு இருக்கிறது, கலாசாரம் என்ற கிளைகள் இருக்கிறது, அது படர்ந்திருக்கிறது. இந்த வேர்களை இணைத்து பிடிப்பது என்னது? நீதி என்னும் மண் இந்த வேர்களை இருகப்பிடிக்கிரதாயிருகும். உதாரணமாக அமெரிக்கா இப்படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான.. வடிவங்களை கொண்டதாக உள்ளது. சரி, இதுதான் நீதியானது என்பதை நாம் எதிலிருந்து அறிந்துகொண்டோம்?

பிரசித்திபெற்ற நாத்திகர்களும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பிரபலமான நபர்கள்தான்  இந்த மாதிரியான முடிவுகளை முன்வைப்பவர்களாக இருக்கிறார்கள். சாம் ஹாரிஸ் போன்றவர்கள்  தேவனை தவிர்த்து நீதியின் ஆதாரத்தை காண்பிக்க முடியும் என்கிற எண்ணத்தோடு இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் தணிந்து போகிறார்கள், அர்த்தமே இல்லாத சில சூத்திரங்களை முன்வைக்கிறார்கள். மேக்கி, ஆஸ்திரேலிய மனிதர், சொல்கிறார், “ இறையியல் கோட்ப்பாடு என்று ஒன்று இல்லாவிட்டால் நல்லது தீமையானது என்று வகை பிரித்து கூறிட இயலாது.” அவரே இதை ஒப்புக்கொள்கிறார்.

காய் நெல்சன், கன்னடிய நாத்திகர் கூறுகிறார், எந்த விதமான உண்மைகளை ஒன்று சேர எடுத்துரைத்தாலும் ஒரு முழுமையான தீர்மானத்திற்குள் வந்து நிர்ப்பது இயலாது.” மேலும் அவர் சொல்லுகிறார், “இந்த உண்மை என்னை பெரிதும் பாதிக்கிறது.”பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறுகிறார் அவர் மஞ்சளுக்கும் பச்சைக்கும் வித்தியாசத்தை அறிவது போல நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்கிறாராம். அதை   கொபல்ஸ்டனிடம் கூறியிருந்தார்,அதற்கு கொபல்ஸ்டன் சொல்கிறார், “ஆனா, மஞ்சளையும் பச்சையையும் கண்களாக பார்த்துதான வித்தியாசத்தை தெரிஞ்சுக்கிற? மேலும் அவர் , “அப்படின்னா எப்படி நன்மை தீமைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்வாய் என்றார்.” அதற்கு இவர், “அது, உணர்வுகளின் அடிப்படியில் என்றா.” என்னுடைய நேயர்களிடம் நான் அடிக்கடி சொல்கிறேன், “சில கலாசாரத்தில் அயலாகத்தார்களை நேசிக்கிறார்கள், சில கலாசாரத்தில் அவர்களை சாப்பிடுகிறார்கள். பெர்ட்ரண்ட் ரஸ்ஸலுக்கு அடித்தளம் கிடைத்ததா?

சரி இப்ப, நிட்சீகீயே சொல்கிறார் பொதுவாக வார்த்தைகளுக்கு போதிய அர்த்தங்கள் இல்லையாம். அவை அனைத்தும் ஒரு அறியில் தன்னைத்தானே பிரதிபளிக்கும் கண்ணாடிகளுக்கு சமமாக இருக்கிறது. அவர் சொல்கிறார், “ சத்தியத்தின் பலிபீடத்திற்கு முன்பு முழங்கால் படியிடுவது எனக்கு பக்தியை உண்டாக்குகிறது.”அவர் எதை பற்றி பேசுகிறார்? எது உண்மை என்கிறதான நீதியை நடப்பிப்பதை சொல்கிறார்.

என்னை பொறுத்தவரை, ஜான், உங்க வாழ்க்கையிலும் இப்படிதான்னு நினைக்கிறேன், ஒரு குடும்பத்தை கட்டுகிறேன், நான் ஒரு தகப்பன், நான் ஒரு கணவன், இப்ப ஒரு தாத்தாவும் கூட. நம்முடைய நாட்களை எங்கிருந்து துவங்குகிறது என்பதை நான் பார்க்க ஆரம்பித்தேன். மதசித்தாந்தம், அதாவது முற்றிலும் மதவாத சிந்தனைகளை கொண்டிருக்கும் நிலை. அது எப்படி இருக்குன்னா காற்று படலத்துல நம்முடைய கால்களை பதித்தது போல இருக்கும். நீதியான காரியத்தை தேடும் நிலை, ஒரு குறிப்பிட்ட இலக்கு இல்லாமல் அதை கண்டடைவது, முற்றிலும் அசாத்தியமான காரியமாக இருக்கும் எனபது உண்மை.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா. அடுத்த வாரம் இதை பற்றி இன்னும் ஆழமாக பார்க்க இருக்கிறோம், ஏன்னா இதெல்லாம் ரொம்பவும் முக்கியமான விஷயங்கள். ஆனா, நமக்கு மீதமிருக்கிற இந்த 2 நிமிடங்களில், உங்களுடைய வாழ்க்கையில் நடந்ததாக நீங்க சொல்லீட்டு இருந்த காரியத்தை பார்த்திடலாம். ஜனங்கள் வாழ்விற்கான அர்த்தத்தை தேடுகிறார்கள். விடைகளை தேடி அலைகிறார்கள். அதை உலகத்தில் தேடியும் கண்டறிய முடியவில்லை. மதங்களில் அதன் விடையை பெற முடியவில்லை. அதை ஒரு நபரிடம் காண்கிறோம். அதை பற்றி சொல்லுங்க எப்படி இந்த நபரான, இயேசு கிறிஸ்து, நாம் இன்னும் தெளிவாக பார்க்கப்போகிற அந்த நான்கு பிரச்சனைகளுக்கான பதிகளை எப்படி கொடுக்கிறார்.

Dr.ரவி சகரியாஸ்:   அதாவது, நா ஐந வில் பேசியபோது, சத்தியங்களை தேடி என்கிற தலைப்பில் பேசக் கேட்டுக்கொண்டேன். இதில் நான்கு தேடல்களை பற்றி பேசினேன். தீமை என்பதற்கான தேடல் உள்ளது, அதை எப்படி விளக்குவது, நியாயத்திற்கான தேடல் உள்ளது, அன்பை எப்படி விளக்குவது. நேர்மையான முறையில் நாம் எப்படி மன்னிக்க முடியும். தீமை, நியாயம், அன்பு மற்றும் மன்னிப்பு. அவங்க எல்லாரும் ஆவலா கேட்டுட்டு இருந்தாங்க. நா சொன்ன, “இப்ப, உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்: சரித்திரத்தில் எப்போதாவது ஒரே  சமயத்தில் இந்த நான்கும் ஒன்று சேர்ந்து சம்பவித்திருக்கிறதா? இவை அனைத்தும் கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து என்பவரால் சம்பவித்தது, அவருக்குள் பரிபூரண நீதி வெளிப்பட்டது. அவர் மூலமாக தேவனுடைய அன்பு வெளிப்பட்டது. பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டு முழுமையான நீதியை பெற்றுத்தந்து எனக்கான மன்னிப்பை அளித்தார்.” வேறு எங்கேயும் இந்த நான்கு காரியங்களும் ஒன்றாக நடந்து மன்னிப்பையும் கிருபையும் அளிக்கப்படவில்லை. அதை இயேசு கிறிஸ்துவில் பார்த்தேன்.  என்னை கேட்டுக்கொண்டிருக்கிற நேயர்களுக்கும் அதையே தான் நான் சொல்லுகிறேன். அவரை நோக்கி பார்த்தால், அவரோடு பேசினால், அவரிடத்தில் கேட்டுக்கொண்டால், அவர் தமது அன்பையும் மன்னிப்பையும் அவரது மீட்பையும் அளித்திடுவார்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆம் நேயர்களே இது அருமையான காரியம். இந்த காரியங்களை பற்றி நீங்கள் யோசித்துகொண்டிருகிறீர்களா, இதை பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்பினால், எங்களுடைய வலைதளத்தில் உங்களுக்கு உதவியாக ஒரு பகுதி இருக்கிறது ரவி ஒரு சமயத்தில் ஜெபித்தது போன்ற ஒரு ஜெபம் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுக்க உதவியாயிருக்கும். நீங்கள் இந்த காரியத்தை செய்யும் முன்னதாக அறிந்துகொள்ள வேண்டிய காரியங்கள் இருக்கிறது, எனவே இப்போது நீங்கள் என்னோடு இணைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். வரப்போகிற வாரங்களில் மனிதனுடைய கடவுளுக்கான தேடலை பற்றி பார்க்க இருக்கிறோம் அதோடு நாம், பதிகள் இருந்தும் அதை அறிந்துகொள்ள முடியாமல் இருக்கும் மக்களை பற்றியும் பார்க்க இருக்கிறோம். இந்த குழப்பத்திலிருந்து நம்மை வெளியே வர சூரவளியிருந்து வெளியேறிட ரவி நமக்கு உதவிடுவார். அடுத்த வாரம் மனிதன் தேவன் இல்லாமல் வாழ முடியுமா என்பதற்கான பிரத்தியேக விளக்கங்களை அளித்திடுவார். எனவே தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

 

எங்களுடைய மற்ற டிவி நிகழ்சிகளை பார்க்க எங்களுடைய ஜான் அன்கேர்பெர்க் ஷோ ஆப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்திடுங்கள்.

“இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கான ஜெபம்” JA show.org

 

 

இயேசு திரைப்படம்

கிறிஸ்தவராவது எப்படி

நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்? கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது. கிளிக் செய்யவும்.

ஆடியோ பைபிள்

சீர்திருத்த பாடநெறி