ரவி சகரியாஸ் ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். நிகழ்ச்சி 2

ரவி சகரியாஸ் ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். நிகழ்ச்சி 2

 

இன்றைக்கு ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியில் Dr. ரவி சகரியாஸ் இறை நம்பிக்கையற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

அவர் இந்தியாவில் வளர்ந்தவர் அவருடைய முன்னோர்கள் பாரம்பரிய இந்துமத உயர்குல ப்ரோகிதர்கள். ஆனால் ஒருநாள் அவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேள்விப்பட்டு கிறிஸ்தவராக மாறினார். அவர் உலகிலேயே அதிக ஞானம் கொண்ட கிறிஸ்தவ விசுவாச தர்க்காப்பாளராக இருந்து வருகிறார், 70ற்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார் அங்கு அவர் பிரசித்திபெற்ற பல்கலைகழகங்களில் உரையாற்றுகிறார், குறிப்பாக ஹார்வர்ட், பிரின்ஸ்டன்,தர்மௌத், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம். அவர் தென் ஆப்ரிக்காவில் சமாதான உடன்படிக்கையின் அங்கத்தினர்களை சந்தித்திருக்கிறார், லெனின் மிலிடரி அக்கடமியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் மாஸ்கோவில் புவிசார் மூலோபாயத்தின் மையத்தையும் சந்தித்திருக்கிறார்.

மூன்று முறை நியூயார்க்கில் ஆக்கிய நாடுகளின் வருடாந்தர ஜெபத்தில் காலைஉணவின்போது பேசும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். அதோடு அரசாங்கத்தின் தேசிய அளவிலான ஜெபங்களில் காலைஉணவின் போது உரையாற்றியிருக்கிறார் ஒட்டாவா, கேனடா லண்டன் இங்கிலாந்து, அதோடு வாஷிங்டன்னில் CIA விழும் உரையாற்றியிருக்கிறார். ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியின் இந்த விசேஷித்த  பகுதியில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

 

 

————————

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   நிகழ்சிக்கு உங்களை வரவேற்கிறோம். நான் ஜான் அன்கேர்பேர்க், இன்றைக்கு என்னோடு இணைந்திருப்பதற்கு நன்றி. என்னுடைய விருந்தினர், நீங்கள் கேள்விப்பட்டபடி, சிறந்த, தத்துவ மேதை, இறையியலாளர், கிறிஸ்தவ தற்க்காப்பாளரான Dr. ரவி சகரியாஸ். அவர் பல மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார், பல்கலை கழக மாணவர்களிடம், உலகமெங்கும் சென்றிருக்கிறார், 70 நாடுகளுக்கு போனவர், எனக்கு தெரிந்தவர்களில் இவர் ஒருவர்தான். இன்றைக்கு அவருக்கு தபால் மூலம் ஐரோப்பாவில் இருந்து வந்த கேள்விகளில் கடுமையானவற்றை அவரிடம் கேட்க இருக்கிறோம், ஒகே. இதை பார்த்து கொண்டிருக்கிற ஐரோப்பிய மக்களுக்கு சொல்லுகிறேன், ரவி கேம்ப்ரிட்ஜ் வகுப்புகளில் கலந்துகொண்டு அங்குள்ள காரியங்களை கவனித்திருக்கிறார், அதனால் உங்களுடைய துடிப்புகளை அவர் அறிந்திருக்கிறார், ஆனால் உங்களை சந்தித்து உங்களிடம் உரையாடியிருக்கிறார். சரி, ரவி, இன்றைக்கு முதல் கேள்வியாக நான் முன்வைக்க விரும்பிய கேள்வியை எழுதிய மாணவர் கடக்கிறார், “அதாவது, பிற்கால நவீனத்துவத்தை பற்றி அநேகர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதற்கு என்ன அர்த்தம்?”

Dr.ரவி சகரியாஸ்:     அதாவது, மேற்கத்திய பகுதிகளில், ஜான், எல்லா தத்துவங்களுக்கும் தாயாக விளங்குவதை பார்ப்பீர்கள் என்றால், அதுதான் ஐரோப்பிய கண்டம். அதாவது, ரெனி டெஸ்கார்ட்டஸ் காலத்தில் இருந்த பகுத்தறிவுவாதம் போன்ற வற்றை கவனிக்க வேண்டும். பகுத்தறிவு ஞானத்தின் அறிவொளி மிகவும் வெற்றிகரமாக இருந்தது அதற்கு பிறகு அனுபவவாத நிலை தோன்றியது. அனுபவ கோட்பாடு  என்பதிலிருந்து நாம் இருத்தலியல் என்ற நிலைக்கு வந்தோம் இருக்கிற நிலை என்பதிலிருந்து நவீன நாகரிகத்திற்கு மாறினோம். இது கவர்ச்சிகரமானதாக தோன்றியது. ஏன்னா இப்ப பகுத்தறிவுவாதத்தை பார்க்கும்போது, அறிவு மட்டுமே முதன்மையாயிருந்தது. அப்பறம் அனுபவம் என்ற நிலை வந்தது, அதாவது, அனுபவ ரீதியான விதங்கள் மற்றும்  தர்க்க ரீதியான எண்ணங்கள் போன்ற காரியங்கள் நடைமுறையில் இருந்தது.

ஆனால் யதார்த்த நிலை என்ற இருத்தலியல் 60களுக்கு பிறகு தோன்றியது, ஜீன் பால் சார்ட்ரே ஆல்பர்ட் கேம்ஸ், காலத்தில் வந்தது. இவர்கள் சிறந்த எழுத்தாளர்கள், அடிப்படையில் அவர் என்ன செய்தார்கள் என்று பார்க்கும்போது அவர்கள் கேட்டார்கள், “ஹே, ஒரு நிமிஷம், இதெல்லாம் அறிவு சார்ந்த விஷயங்கள், இதெல்லாம் ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்தவை எல்லாமே நல்லாதா இருக்கு. ஆனா நா ஒரு மனுஷன் எனக்கு விருப்பங்கள் உணர்வுகள் உணர்ச்சிகள் இருக்குதே. இந்த சூத்திரங்கள் எல்லாம் இதுக்குள்ள எப்படி பொருந்தும்?நா உணருகிறேன், என்னால் முடியும், எனலு வேண்டும்.” இந்த இருத்தலியல் என்பதை உங்களுடைய சாய்ஸ் என்னன்றத விரக்கிதியான சூழ்நிலைகளின் மத்தியில் தெளிவா புரிந்துகொண்டு உங்களுடைய வாழ்விற்கு ஒரு அர்த்தத்தை கண்டு பிடிப்பதுதான்.

இதை எப்படி செயல்படுத்துவது என்பதில் அவர்கள் துல்லியமாக இருந்தார்கள். அவர்கள் சூத்திரங்கள் என்ற உலகிலிருந்து கதைகளாக எடுத்துரைக்கும் இலக்கியம் என்ற உலகிற்கு மாறினார்கள். அதனால சார்ட்ரே அப்பறம் கேமஸ் போன்றவர்கள் நிறைய புத்தகங்களை எழுதினார்கள், அதாவது, நோ எக்சிட், நவுசியா போன்றவைகள், தி வால், போன்ற பிரசித்திபெற்ற புத்தகங்கள். அதில் சில புத்தகங்கள் சுருக்க உரைகளாக காணப்பட்டது. ஆனா அதில கதைகளாக சொல்லியிருந்தார்கள், பல்கலைகழக மாணவர்கள் இதை உணவு போல எடுத்துகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் தங்களை அந்த கதைகளை அடையாளப்படுத்தி கொண்டார்கள்.

அப்படியாகத்தான் பகுத்தறிவுவாதத்திளிருந்து அனுபவ ரீதிகும் அதிலிருந்து யதார்த்த நிலைக்கும், இறுதியாக நவீன நாகரீகத்திற்கும் மாறினோம். இந்த நவீன நாகரிகமானது மற்ற எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டு ஒரு முடிவிற்கு வந்தது அவர்கள் கருத்துபடி, இதில், தன்னை மையப்படுத்துகிற காரியங்கள்,எனக்கு இதில் வரைமுறைகள் இருக்கிறது என்றனர். மேலும் இந்த நவீன நாகரிகத்தில், அதை விளக்கி சொல்லவேண்டுமானால், 3 விதங்களில் அவற்றை சொல்ல முடியும்: சத்தியம் கிடையாது, அர்த்தம் கிடையாது, நிச்சயம் கிடையாது. சத்தியம் இல்லை, அர்த்தம் இல்லை, நிச்சயம் இல்லை. ஜாக் டெரிடா, இவர், ஒரு பிரன்ச்மனிதர், இந்த சித்தாந்தந்தத்தை எடுத்துசொல்லும் சிறந்த மேதையாக திகழ்ந்தார். அவர் அமெரிக்கா முழுவதிலும் இந்த காரியங்களை போதித்து வந்தார். இதனுடைய விளைவாகத்தான் இந்த நவீனமான கட்டமைப்பு உண்டானது. இப்ப அந்த கதைகள் முற்றிலும் கலைந்து விட்டது. விவாதங்கள் மறக்கப்பட்டது. அந்த கதைகள் இப்போது தூக்கி எறியப்படுகிறது.

அதோடு இதை வியாக்கியானம் செய்யும் அதிகாரம் ஆக்கியோனிடமிருந்து வாசகர்களுக்கு மாறிவிட்டது. வாசகர்கள் இதை திருத்தி எழுதலாம், வாசகர் இதை வேறுவிதமாக வியாக்கியானிக்கலாம், வாசகர் இதை மறுபடியும் சொல்ல முடியும். திடீரென்று ஆயிரக்கணக்கான மக்கள் யதார்த்தத்தை மறுமொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.

இப்ப, நா என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால்: இந்த எல்லா விஷயங்களிலும் சத்தியம் வெள்ளியை போல மின்னுகிறதாம். அதாவது, காரணத்திற்கு ஒரு இடம், அறிவின் அனுபவத்திற்கு ஒரு இடம், சித்தத்தின்படி செயல்படித்த ஒரு இடம். இப்ப இதுதான் கேள்வி, ஹே, இதெல்லாத்தையும் பார்க்கும் போது எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரம் என்னவாக இருக்கிறது? இதெல்லாவற்றையும் வைத்து எதை அவர்கள் சுட்டிகாட்டுகிறார்கள் என்று பார்த்தால் அவர்களுடைய விரல்கள் யதார்த்தத்தை தான் காட்டுகிறது.

சுவிசேஷங்களில் என்னை பிரம்மிக்க வைத்த ஒரு காரியம், அதில் காரணங்களுக்கு இடமிருக்கிறது, அறிவின் அனுபவத்தை பெரும் ஆய்வுக்கு இடமுண்டு, தனிநபருக்கு அங்கு இடமிருக்கிறது மேலும் தேவன் உங்களுக்கு எப்படி தனியாக ஒரு இடமளித்து உங்களுடைய தனித்துவத்தை திரும்பவும் உங்களுக்கு கொடுத்து அவருடைய நித்திய சாயலின்படி உருவாக்குகிறார் என்று இருக்கிறது. ஆனால் பின்வரும் நவீன காரியங்கள் என்று சொல்லும்போது, அது அதிகாரத்தின் அமைப்பிற்கும் சத்தியத்திற்கும் மிகுந்த சேதத்தை உண்டாக்குகிரதாயிருக்கிறது. சத்தியம் இல்லை, அர்த்தம் இல்லை, நிச்சயம் இல்லை. இந்த நவீன நாகரிகமானதும் செயல்பாடுகளின் கண்ணோட்டமாக உலகத்தில் ஆளுகை செய்துகொண்டிருக்கிறது.

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது: நீங்க ஒரு விமானத்தில் இருக்கீங்க அந்த விமானம் ஆபத்ஹ்டில் இருக்கிறது, நவீன நாகரிகத்தை ஏற்கும் ஒரு விமான ஓட்டுனர் இப்படி சொல்கிறார், “இந்த கருவி இதைதான் காட்டுகிறது என்று எனக்கு தெரியும், 10,000. ஆனா உண்மை என்று எதுவுமில்லை இதற்கு அர்த்தம் இல்லை இது நிச்சயம் இல்லை என்பதை நான் நம்புகிறேன் என்கிறார். அதனால் என்னுடைய இஷ்டப்படி போவேன் என்றால் என்ன செய்வீர்கள்.” நீங்க சத்தியத்தை நம்புகிற நபராக இருந்தால் இந்த காரியத்தை செய்ய துனிய மாட்டீர்கள். சத்தியம் உண்மை என்ற ஒன்று இருக்கிறது. அர்த்தமுள்ள காரியங்கள் இருக்கிறது. நம்முடைய தெரிந்தெடுப்புகளில் கூட ஒரு நிச்சயம் உண்டாயிருக்கும் என்பது மறுக்க முடியாதது.

அதனால் இந்த  நவீனத்துவம்  என்ற விஷயம் தன்னைத்தான் கடவுளாக நினைக்க தடையில்லாதபடி தப்பித்துகொள்வதாகும் ஆரம்பத்திலிருந்தே ஆதியாகமத்திளிருந்தே இந்த பிற்கால நாவீனமான நிலை இருந்துவருகிறது: தேவன் உண்மையாகவே சொன்னாரா? தேவன் சொல்லியிருக்கிறாரா? சத்தியம் இல்லை, அர்த்தம் இல்லை, நிச்சயம் இல்லை, என்ற நிலை ஆதியாகமத்திலிருந்தே  இருக்கிறது. பிற்கால நவீனத்துவம். அது எதற்கும் முந்தினது கிடையாது. அது உண்மையில் விழுந்துபோன மனிதனுடைய நிலையாக இருக்கிறது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   சரி, பச்சை பசேல் என்ற பட்டணத்தில் சிவப்பு விளக்குகள் தான் இந்த பிற்கால நவீனத்துவம் என நினைக்கிறேன். அப்படியிருந்தால் அங்கு, கேடும் ஆபத்துகளும் அதிகரிக்கும், இதை தவிர வேறு எதுவுமே இருக்காது. இந்த காரியத்தை தொடர்ந்து நாம இதோடு தொடர்புடைய வேறொரு கேள்வியை பார்த்திடலாம். ஐரோப்பாவில் இருந்து இன்னொரு மாணவர் கேட்டிருக்கிறார்: “நீதி நெறிகளை கொண்ட சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்ற நிலை இருப்பதால் இந்த நீதி நெறிகளை அளித்தவவரை பின்பற்ற வேண்டியது எத்தனை அவசியமானதாக கருதப்படுகிறது?

Dr.ரவி சகரியாஸ்:     இது அருமையான கேள்வி. இதை நான் பல நாட்கள் யோசித்து வந்திருக்கிறேன், ஜான், உண்மைதான். நா கேட்டேன், நா எங்க போய்,… அதாவது நீதிநெறி சட்டங்களுக்கு கட்டளைகளை கொடுத்தவருக்கு உள்ள தொடர்பை எப்படி கண்டுபிக்க முடியும்? இதெல்லாமே தீமை என்ற ஒன்று உண்டானதினால் வந்த பிரச்சனைகள். தீமை என்ற பிரச்சனை எழும்போது, நன்மையான ஒன்று இருப்பதை உணர்கிறோம். நன்மையான காரியம் ஒன்று இருப்பதை யோசிக்கும்போது, நீதியான கட்டளைகளை னியானைவுகூருகிறோம், நீதியான சட்டங்கள் இருக்கிறது என்கிறோம், அப்படியானால் நீதியான சட்டங்களை கொடுத்தவர் இருகிறார் என்கிறோம். ஆனா கேள்வி இதுதான் எதற்காக.

அதற்கான விடை இங்கே இருக்கிறது: தீமையை குறித்த பிரச்சனையின் கேள்வியை ஒருவர் எழுப்பும்போது அது பொதுவாக, ஒரு நபராலோ அல்லது ஒரு நபரை பற்றியதாகவோ இருந்திடும், தீமையினால் உண்டான பிரச்சனைகள், அதை மாற்றியமைக்கும்போது, ஒரு மனிதனுடைய உள்ளார்ந்த தரத்தை குறிப்பதாக இருக்கிறது. ஒரு தனிமனிதனுடைய உள்ளார்ந்த தரம் என்று எதுவும் இல்லையென்றால் இந்த கேள்வி ஒரு நாசத்தை ஏற்படுத்துவதா இருக்கும். இந்த கேள்வி தரமானதாக இருக்க ஒரு மனிதனுடைய நிலை அவசியமாக இருக்கிறது. சிருஷ்டிக்கபட்ட மனிதன் தன்னுடைய தனித்துவமான மதிப்பை உடையவனாக இருந்தால் மட்டுமே அவனுக்கு நீதி வழங்க முடியும், அதை தேவனே செய்கிறார். அதனால்தான் நீதிநெறிகளை அளித்த அவரிடம் திரும்புகிறோம். மனிதனுடைய தனித்துவம் ஒரு பொருட்டாக கருதப்படாவிட்டால் இந்த கேள்விக்கு இங்கு இடமில்லை.

இது கடுமையான ஒரு சூழ்நிலை, ஆனால் இது ரொம்ப முக்கியமானது. இதை பற்றி எப்பெல்லாம் நா நாத்திகர்கள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுகிறேனோ, அப்போது ஒரு நிசப்த்தம் உண்டாகும். அவங்க சொல்வாங்க, “ சரி, அப்படியே இருந்தாலும்…” அவங்க வேற காரியங்களை சொல்ல பேச்சை திசைதிருப்ப முயற்சிப்பாங்க. உங்களுடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் தீமையினால் உண்டாகும் பிரச்சனைகளின் கேள்விகளை எதிர்கொள்ள உள்ளார்ந்த தரமுடையதாக இருக்கிறது. இந்த உள்ளார்ந்த தரம் என்பது நாம் தேவனுடைய சிருஷ்டிப்புகளாக இருந்தால் மட்டுமே உண்டாயிருக்கும், காலம் நேரம் சந்தர்ப்பம் என்ற காரியங்களின் கூட்டாக இது அமைத்திட வாய்ப்பில்லை.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   ரவி, இன்னொரு மாணவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ பற்றி சொல்கிறார், இந்த பிரசித்திபெற்ற நாத்திகரை உலகமெங்கிலும் இருக்கிற மக்கள் அறிந்திருப்பார்கள். டாக்கின்ஸ் சொல்றாரு அவருடைய சித்தாந்த வரையறைக்குள் நிரப்பப்படவேண்டிய நான்கு இடைவெளிகள் இருக்கிறதான். அவை என்ன? எப்படி ஜீவனில்லாத பொருட்களில் இருந்து எப்படி ஜீவன் வந்தது, நீதிநிலையின் இடைவெளி, மனசாட்சி என்ற இடைவெளி, பாலியல் என்ற இடைவெளி. இதை பற்றி நீங்க சொல்லும்படியாக மாணவர் விரும்புகிறார்.

Dr.ரவி சகரியாஸ்:     சரி. நா எப்பவும் சொல்வேன், இது ரொம்ப பெரிய இடைவெளிகள், தெரியுமா! (சிரிப்பு) விழுங்க கடினமான மாத்திரைகள்! அதாவது, இந்த இடைவெளிகள் அனைத்தும் நம்முடைய ஆத்திக வரையரைகுள்ளாக இருந்திருந்தால் வெளியிலிருக்கிறவர்கள் நம்மை பார்த்து சிரிப்பார்கள்.

டாக்கின்ஸ குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா. சில நாட்களுக்கு முன்பு அவர் BBC ல கயில்ஸ் பிரேசரோட தோன்றினார், st. பால் கதீட்ரளோட முன்னாள் முதல்வர் அவர். டாக்கின்ஸ் தன்னுடைய வழக்கப்படி கிறிஸ்தவர்களை ஏளனமாக தூற்றிக்கொண்டிருந்தார் அது, அவருக்கு பிடிக்கும். அப்பா ஒரு காரியத்தை சொன்னார், என்ன சொன்னாருன்னா, அதாவது, “ நிறைய கிறிஸ்தவர்களுக்கு சுவிசேஷங்களின் பெயரை கூட சொல்ல தெரியாது என்றார்.” கயில்ஸ் பிரேசர் அவரை பார்த்து அவரிடம் கேட்டார், “ ரிச்சர்ட், ஆ, உங்க பைபிள்தான இனங்களின் துவக்கமாக இருக்கிறது, அப்படிதானே?” அதற்கு டாக்கின்ஸ் சொன்னார், “ஆமா, சரிதான். அப்படியும் சொல்லலாம் என்றார்.” அதற்கு அவர், “ஆல்ரைட். அந்த புத்தகத்தின் முழு தலைப்பையும் எனக்கு சொல்ல முடியுமா என்றார்.” அப்ப டாக்கின்ஸ் அப்படியே அமைத்தியாக இருந்தார். அவர் சொன்னார், “ஆமா, அது பெரிய தலைப்புன்னு எனக்கு தெரியும்.” கயில்ஸ் பிரேசர் சொன்னார், “சொல்லுங்க, ரிச்சர்ட். முழு தலைப்பையும் எனக்கு சொல்ல முடியுமா?” அவர் இப்படியாக சொல்ல ஆரம்பித்தார், அதை நா அப்படியே சொல்கிறேன். இதற்காக ஜனங்கள் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டும், ஆனா அவர் இப்படித்தான் அதை சொன்னார். “அப்போது அவர், “இனங்களின் துவக்கம், ம்ம்ம்…. இனங்களின் துவக்கம், ம்ம்ம், ஓ, தெய்வமே , என்னுடைய வாழ்க்கையில அந்த தலைப்பின் மீதி எனக்கு நியாபகமே வந்ததில்லை,” என்று சொன்னார்.
சரி, அதாவது, அது பெரிய தலைப்புதான்! இதை சொல்லும்போது எனக்கு ஒரு விஷயம் நியாபகம் வந்தது, அதாவது, தேவன் மீது நம்பிக்கை இல்லாதபடி தன்னை நடத்தின அந்த புத்தகத்தின் பெயரை நினைவு படுத்த அந்த நாத்திகர் தேவனை நோக்கி பார்த்தார் என்பது தேவனுடைய சர்வத்துவத்தை எடுத்துரைக்கும் நிறுபனமாக இருக்கிறது. அடுத்தநாள் செய்திதாள்களில் நேர்க்காணலை பற்றிய தலைப்பு செய்தியே இதுதான், “அவர் தலைப்பை முழுமையாக சொல்லமுடியாததினால்  இந்த நாள் நாத்திகர்களுக்கு ஏமாற்றமானதாக இருந்தது.”

ஆனா, ஒரு விஷயம், அவர் கேலி செய்கிறவர். உண்மையில், வாஷிங்கடனில் ஒருவர் அவரிடம் தேவனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களோடு எப்படி இடிபடுவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், “கேள்வி செய்யுங்கள் என்றிருக்கிறார்.” இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்றை சொல்லுகிறேன், கிறிஸ்தவர்கலாக நாங்கள் தேவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மட்டும் அவர் அவதூறாக சொல்லவில்லை, கடவுளை நம்புகிற எல்லா நம்பிக்கையையும் கேலி செய்தார். இதை குறித்து வைத்துகொள்ளுங்கள். அவர் மதங்களுக்கு விரோதமானவர், தேவ மனிதர்களுக்கு எதிரானவர். உண்மையை சொன்னால் அவர் யதார்த்தமான நிஜம் இதுதான் என்று முன்பாக வந்து எடுத்து சொல்லி பேசுவதற்கு தைரியமில்லாத கோழை.

ஆனா இந்த இடைவெளிகளை பார்க்கும்போது: துவக்கம், உதாரணமாக, ஜீவனின் துவக்கம். ஜீவனற்ற நிலையிலிருந்து ஜீவன் உண்டானது எப்படி? உணர்ச்சியற்ற நிலையிலிருந்து உணர்வுகள் எப்படி உண்டானது? நீதியான ஆரம்பம் அல்லது நீதிநெரியற்ற ஆரம்பம் ஒரு நீதியான காரணத்தை அளித்தது எப்படி? பாலியலை குறித்து என்ன சொல்ல முடியும்? ஆனா இதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிற காரியம். இந்த இடைவெளி பெருசுதான். இந்த இடைவெளிகளை உண்டாக்கிய நபர் விசுவாசிகளுக்கு எதிராக குற்றம் சுமத்துவதிலிருந்து மாறி, இப்போது கிறிஸ்தவரல்லாத நபர்களை தாக்கி கொண்டிருக்கிறார். எப்படி இந்த ஓட்டைகளை அடைப்பது? இந்த இடைவெளிகள் அனைத்தும் சர்வவல்லமை யுள்ள தேவனால் மட்டுமே அடைக்க முடியும்.

அதனால் தான் பாரடே மற்றும் நியூட்டன் போன்ற சிறந்த அறிவியல் விஞ்ஞானிகள் உண்மையான விசுவாசிகளாக இருந்தார்கள். ஆத்திகம் மற்றும் ஊடுருவும் வடிவமைப்பிற்கு அப்பால் இந்த ஆண்ட சராசரத்தை பற்றி அறிந்து கொள்ள வேறெந்த வழியும் இல்லை என்பதை நம்பினார்கள். சாலோமொனே சொல்லியிருக்கிறாரே, உங்கள் வாலிப பிராயத்தில் உங்கள் சிருஷ்டிகர் பக்கமாக திரும்புங்கள், இல்லாவிட்டால் எதுவுமே அர்த்தம் இல்லாதது போலதான் இருக்கும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   ரவி, ஐரோப்பாவில் இருந்து மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளில் இது சுவாரஸ்யமாக இருக்கிறது. அதாவது ஒருமுறை தலாய் லாமா மற்றும் மறைந்த போபாண்டர் இருவரின் உரையாடளின் போது, போப் சொல்லியிருக்கிறார் விசுவாசம் என்பது வெறும் நம்பிக்கை கிடையாது, ஆனால் அதுவே வாழ்க்கை முறையாகும். இந்த மாணவர் கேட்டிருக்கிறார், “ஆனா G. K. செஸ்டர்டன் தானே எழுதியிருக்கிறார் கிறிஸ்தவராக இருக்கும் நபர் மனுவுருவாக வந்தவரையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கிற நபர்தான் முற்றிலும் கிறிஸ்துவை அறியாதவரை போல நடக்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவை விசுவாசியாத நபரோ முற்றிலும் ஒரு கிறிஸ்தவனை போல நடந்துகொள்கிறார்கள்,” இதை பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

Dr.ரவி சகரியாஸ்:     இதுவும் நல்ல கேள்வி என நினைக்கிறேன், அதை இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால், ஜான், உண்மையில் இது நினைத்து பார்ப்பதற்கு ரொம்பவும் கடினமான கேள்விதான். ஆனா இதற்கான பதில் இப்படிதான் ஆரம்பிக்கும்: இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவனுக்கு, அவனுடைய விசுவாசத்திற்கும் அவனுடைய சீரற்ற செயல்பாடுகளுக்கு இடையில் ஒரு துண்டிப்பை உண்டாக்க முடியாது. இயேசு இதைதான் மீண்டும் மீண்டும் நினைப்பூட்டுகிறார். அவர் சொல்லியிருக்கிறார், “  மனுஷர் உங்கள் நற்கிரியைகளை கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைபடுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்ககடவது.”

எப்படியிருந்தாலும், கிரியைகள் நடப்பிப்பது உங்களை இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசியாக மாற்றிடாது. “உங்கள் இருதயத்தில் விசுவாசித்து இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று நாவினால் அறிக்கை செய்பவனே உண்மையில் இரட்சிக்கப்படுகிறவனாக இருக்கிறான் என்பதை மறுக்க முடியாது. ஆனா அதற்கு ஏற்றபடி உங்கள் கிரியைகள் இருக்க வேண்டும். சிலர் நினைக்கிறார்கள் நல்ல காரியங்களை நல்ல கிரியைகளை செய்தால் போதும் அவர்கள் நிச்சயம் மோட்சம் போவார்கள் என்று, இது உண்மையில் இயேசு கற்றுக்கொடுத்திருக்கிற காரியங்களை நிராகரிகிறார்கள்.

யாக்கோபு புத்தகம் முழுவதும் கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்பதை எடுத்துரைக்கிறது. அவர் என்ன சொல்லுகிறார் என்று கேட்டால், உங்களுக்கு விசுவாசம் இருக்கு என்று சொல்லியும், அதன்படி நீங்கள் வாழாவிட்டால், உங்களுக்கு விசுவாசமே இல்லை என்கிறார் – இது நமது நினைவில் இருக்க வேண்டிய விஷயம். ஒரு கிறிஸ்தவனுக்கு விசுவாசமும் செய்கையும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும். பவுல் தீமோத்தேயுவிடம் சொல்கிறார் உன்னுடைய போதனையையும் வாழ்க்கையையும் காத்துக்கொள். இரண்டும் பாதுகாக்கப்படவேண்டும். ஒருபோது சித்தாந்தங்களை தவறுகளின் மூலமாக நியாயந்தீர்க்க மாட்டீர்கள்.

அதனால நா என்ன நினைக்கிறேன்னு கேட்டீங்கன்னா, “ தேவன் இணைத்ததை மனிதன் ஒருகாலும் பிரிக்காதிருக்க கடவன்.” என்னுடைய மனைவிய நேசிக்கிறேன் என்று அவளுக்கு வாக்கு குடுத்துட்டே இருக்கே, அழகான வாழ்த்து அட்டைகளை கொடுத்து எல்லாம் செய்கிறேன், ஆனா அந்த அன்பை வெளிப்படுத்தாம இருந்தேனா, உண்மையில் அவளுக்குள் ஒரு கேள்வி எழும்பும்  இவருடைய  அன்பு செலுத்துகிறேன் என்பதற்கு இவர் மொழியில் என்ன அர்த்தம். ஏன்னா என் வார்த்தைகளும் செய்கையும் ஒத்திருக்க வேண்டியது அவசியம். வார்த்தைகள் உண்மை நிலையை எடுத்துரைக்கும் கருவியாகும், அவை நம் மனதில் இருப்பதை இருதயத்திற்கு தொடர்பு படுத்து உதவுகிறதாக இருக்கிறது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:    நீங்க புத்திசம் மற்றும்  கிறிஸ்தவத்தை ஒப்பிட்டு சொல்லும்படியாக விரும்புகிறேன். போப்பும் தலாய் லாமாவும் இங்கே சில எண்ணங்களை ஒப்பிட்டு கூறியது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏன்னா மோதலில் இருக்கும் 2 விதமான உலக கண்ணோட்டம் இதில் அடங்கியிருக்கிறது. இந்த நா ஏ புத்த மதத்தை முன்வைக்கிறேன் என்று கேட்டால் நம்முடைய இணையதளத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுதான், இது ஐரோப்பாவில் மட்டும் இருக்க ஒன்றல்ல. ஜனங்கள் இதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். ஹோலிவுட் திரைப்பட நட்ச்சத்திரங்களில் சில புத்த மதத்தில் சேர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் கேட்க்கிறேன், இதை பற்றிய உலக கண்ணோட்டத்தை இப்போது ஒப்புமைபடுத்தி பேசலாமே.

Dr.ரவி சகரியாஸ்:     நீங்க சொல்றது சரிதான். பிரயாணத்தின்போது, ஒருவரோடு தனித்து பேசும்போதும் இணையதளத்தில் பார்க்கும்போது, இதை பற்றிய ஆர்வம் தெரிகிறது, அதாவது, யூத மதத்தை பற்றிய கேள்வி, புத்த மதத்தை பற்றி என்ன? புத்த சமயத்தில் மிகவும் ஆபத்தான ஒரு வஞ்சகமான விஷயம் இருப்பதை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். தேவன் இல்லாமல் நீங்கள் நல்லவர்களாக வாழ முடியும் என்பதை நீங்கள் நம்பும்படி செய்திடுவார்கள். ஏன்னா புத்த சமயத்தில் தெய்வம் கிடையாது, புத்த சமத்தில் தேவனை பற்றிய போதனைகள் கிடையாது.

ஒருமுறை தாய்லாந்தில் புகழ் பெற்ற ஒரு துறவியிடம் பேசும்படியான சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்தான் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட பெண் துறவி, phD மெக்மாஸ்டர் பல்கலைகழகம் கனடா, அவங்க தாய்லாந்திற்கு திரும்பி வந்திருந்தார்கள், பதியேர்க்க ஸ்ரீலங்கா போயிருந்தாங்க. அவர்களை தொடர்பு கொள்ளவும் அவர்களோடு பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சுவாரஸ்யமான உரையாடல் எங்களுக்கு உண்டாயிருந்தது. ஒரு கட்டத்தில் அவர்களிடம் நான் கேட்டேன், “ உங்க விசுவாசத்தின் மிக சிறந்த வெளிப்பாடாக யாரை கருதுகிறீர்கள் என்றேன்? அதற்கு அவர்கள், “தலாய் லாமா என்றார்கள்,” மேலும் நான், “உங்கள் நம்பிக்கையின்  குறிக்கோள் விருப்பங்களை துறந்து இருப்பது தானே, என்றேன்? உங்களுக்கு எந்த ஆசையும் இல்லாமல் இருக்க நினைக்கிறீர்கள் என்றேன்.” அதற்கு அவர்கள், “சரிதான் என்றார்கள்.” நான் கேட்டேன், “அப்ப தலாய் லாமா எதற்காக திபத்தியர்களின் விடுதலையை விரும்புகிறார் என்று சொல்ல முடியுமா என்றேன்.உங்கள் நம்பிக்கையின் சிறந்த உதாரணமாக இருப்பவர் நீங்கள் சென்றுகொண்டிருக்கிற நம்பிக்கையின் பாதையை மீறி நடப்பது போல தோன்றுகிறதே, இதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன்?” அவங்க அமைதியா இருந்தாங்க. அவங்க கேட்டாங்க, “அப்படி செய்வதை அவர் விரும்புகிறார் என்று நான் சொல்லலாமா?” அந்த நேரத்துல அவங்க ரொம்ப வேதனை பட்டிருப்பாங்கன்னு நீங்க சொல்லலாம், அதனால நானும் அமைதியாயிட்டேன்.

ஆனா நா, “என்னிடம் இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது, மேடம் என்றேன்.” அவங்ககிட்ட கேட்டேன், “அது என்னனா. உங்களுடைய நம்பிக்கை படி ஒவ்வொரு பிறப்பும் மறுபிறப்பு என்று சொல்லுகிறீர்கள் சரியா.” அதற்கு பதில், “ஆமாம்.” நா கேட்டேன், “ஆனா இப்பத்திலிருந்து பின்னோக்கி பார்க்கும்போது, ஓகே, இந்த நிமிஷத்திலிருந்து உங்களுடைய கடந்த காலத்திற்கு போகும்போது, பிறப்பு எனபது எண்ணிக்கைக்குள் அடங்கியிருக்கிறது. அது சரிதானே என்றேன்?” அதற்கு அவர்கள், “சரியென்று சொல்வேன் என்றார்கள். மேலும் நான், “ஒவ்வொரு பிறப்பும் மறுபிறப்பு என்று நீங்கள் நம்புகிறீர்கள், இந்த பிறப்பில் அனுபவிக்கும் காரியங்கள் முந்தைய பிறப்பின் தண்டனை என்று நினைக்கிறீர்கள், இவ்வளவு ஜென்மங்கள் இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள், அப்படின்னா முதல் ஜென்மம் என்று கட்டாயம் இருந்திருக்கும். அது சரியா என்றேன்.” அவங்க கொஞ்ச நிதானமா சொன்னாங்க, “ஆமா, சரின்னுதா சொல்லுவேன்.” மேலும் கேட்டேன், “அப்ப அந்த முதல் ஜென்மத்தில் எந்த பாவக்கடனை செளுத்ஹ்டுகிரீர்கள் என்றேன்?” அந்த கேள்வியாள அதிர்ந்து போனதை நேரடியா பார்க்க முடிந்தது. அவங்க சொன்னாங்க. “இந்த மாதிரியான கேள்வி கேட்பதை நாங்கள் தெரிந்தெடுப்பதில்லை என்றார்கள்.”
உண்மையில், அவர்கள் புத்தரை போல தனது குடும்பத்தை விட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் தனது பிள்ளைகளையும் தனதுகணவரையும் விட்டு விட்டு அவர்களை நிராகரித்துவிட்டு வந்துவிட்டார்கள். உங்க பிள்ளைகளை பார்க்க வாஞ்சையாக இருக்குதான்னு அவங்ககிட்ட கேட்டேம், அவங்களுடைய கண்களில் கண்ணீர் தளும்புவதையும் உதடுகள் சொல்ல துடிப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. அவங்க சொன்னாங்க, “நா தான் ஒவ்வொருநாளும் அவங்கள ஸ்கூலுக்கு கூட்டீட்டு போரே, ஸ்கூல்ல இருந்து அவங்கள கூட்டீட்டு வந்து விடுகிறேன்.” ஒரு புத்த துறவியா அவங்க ஒரு கார் வச்சிருக்காங்க, பெண் புத்த துறவியாக ஒரு ஆணை ஓட்டுனராக வைத்துகொள்ள முடியாது, அதனால அவங்களே தனியா போய் பிள்ளைங்கள பிக் அப் பண்ணிக்கிறாங்க. அந்த நிலையில் ஒரு விரிசல் இருப்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள்.

என்னுடைய இந்து நண்பர்களில் கிறிஸ்துவை பற்றி அறிந்துகொள்ள வந்தவர் ஒருமுறை என்னிடம் கூறினார், அவர் சொன்னாரு, “அதாவது, ரவி, நா காலையில எழுந்ததும் நாம பேசினதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அப்ப நா யோசித்து பார்த்தேன், என்னோட வங்கி மேலாளர் கூட நா எவ்வளவு கடன் பட்டிருக்கேன் எவ்வளவு இன்னும் கட்ட வேண்டியிருக்குன்னு சொல்லி காட்டுகிறார்.” மேலும் அவர், “என்னுடைய கருமங்களின் பட்டியலில் நா எவ்வளவு செய்திருக்கேன் இன்னும் எவ்வளவு செய்து முடிக்க வேண்டியிருக்குன்னு எனக்கு எந்த ஐடியாவுமே இல்ல.” இதெல்லாம், “இதயமே இல்லாத அமைப்புகள் என்றார்.” பிறகு அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார்.

அதனால, இந்த சமய கண்ணோட்டங்களின் பின்னணியில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், நல்ல வாழ்க்கையை வாழ விரும்பும்படியாக உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் யார் என்பதை பற்றி எனக்கு அது தெரியப்படுத்துகிறது. காயப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. வேதனை அனுபவிக்க நீங்கள் விரும்புவதில்லை. ஆனால் ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.  நற்க்கிரியை உங்களுக்குள் இருந்து தோன்ற வாய்ப்பில்லை. இந்த உலகத்தில் இருக்கிற பெரிய பிரச்சனைகள் உங்களுக்கு வெளியில் இல்லை, உங்களுக்குள் தான் இருக்கிறது. மேலும் மாற்றமடைந்த மனித இருதயம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருக்கும் அவரது பிரசன்னம் சரியான காரியங்களை செய்யும்படியான வாஞ்சையை உங்களுக்குள் உண்டாக்கிடும் அது உங்களுக்கு நிச்சயத்தை அளித்திடும், “நீங்கள் மரித்த பிறகு உங்களுக்கு கிடைக்கும் என்ற நிச்சயம்,” அதற்கு பிறகு உங்கள் சிருஷ்டிகரை நீங்கள் சந்திப்பீர்கள்.

இந்த உலகில் மதங்களின்  நீதிநெரி அமைப்புகளை கொண்டிருக்கும் நாடுகளை பார்க்குபோது, இன்றைக்கு அவர்கள்தான் மிகவும் நீதிநெரியான வாழ்க்கையை தவற விட்டிருப்பதை பார்ப்பீர்கள். ஏன்னா இந்த நீதிநெறிகள் மட்டுமே கட்டாயமானதாக தொன்றிடாது. நீங்க இப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உங்களுக்கு எடுத்து சொல்வதாக மட்டுமே இருக்கிறது. தேவன் உங்களுக்கு பலன் அளித்திடுவார் மேலும் சரியானதை செய்வதற்கு கிறிஸ்தவ விசுவாசம் நடத்தி சென்றிடும்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   இப்ப வேறு சிலவற்றை பார்க்க விரும்புகிறேன். நீங்க ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் அவர்களுடைய காலை உணவின் ஜெபத்தில் பேசும்படிய அழைக்கப்பட்டிருக்கிறீர்கள், அதுதான் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் துவக்க நிலை. அவர்களோட பகிர்ந்துகொள்வதை பற்றி சொல்லுங்கள், இறுதியாக நீங்க அவர்களோடு ஒரு உவமையை பகிர்ந்துகொண்டீர்கள் அதை பற்றி நம்முடைய நேயர்களுக்கு சொல்லும்படியாக விரும்புகிறேன்.

Dr.ரவி சகரியாஸ்:     தேவனுடைய கிருபையினால் மூன்றாவது முறையாக அவர்கள் என்னை பேசும்படியாக கூப்பிட்டிருந்தாங்க ஜான், நா போய் அங்கங்க மத்தியில் பேசினேன். அது ஒரு பெரிய சிலாக்கியம், தெரியுமா. அது நரம்புகளை சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுமார் 15- 18 நிமிடங்கள் இருக்கும், எல்லாவிதமான நம்பிக்கைகளை பற்றிய கவனத்தோடு பேச வந்டியது அவசியம்.

நிஜங்களின் ஆய்வு என்பதை பற்றி அவர்களோடு பகிர்ந்துகொண்டேன். அந்த காரியங்களின் இறுதிவரை – உண்மையில், அவர்கள் கவனித்துகொண்டு இருப்பார்கள். இன்னொன்னும் சொல்ல முடியும், எல்லாம் முடிந்த பிறகு அவங்க எல்லாரும் ஒவ்வொருத்தராக, அதாவது அந்த பிரிதிநிதிகள் ஒவ்வொருவரும் வந்த தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை சொல்வாங்க – அவங்கள்ள ஒருத்தர், யார் கேட்டாங்கன்னு நா பேரை சொல்ல மாட்டேன், அவருடைய அலுவலகத்திற்கு வந்து அவருடைய ஊழியர்களுக்காக ஜெபிக்க முடியுமா என்று கேட்டார். நாத்திக நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் வந்து என்னிடம் சொன்னார், “நா எதற்காக இங்க இருக்கேன்னு அடிக்கடி கேட்டிருக்கிறேன்.” அவருடைய உரையாடலை என்ன வார்த்தைகளை சொல்லி முடித்தார் என்று எப்போதும் நான் சொல்வதுண்டு.

அத உரையாடலை ஒரு உவமையோடு முடித்தேன். ஐசுவாரியவான் ஒருவனுக்கு இருந்த குமாரனுடைய உவமை, அந்த மகன் இளகிய மனம் உடையவனாயிருந்தான், அடிக்கடி நகரத்தை வளம் வருவான் வரும்போது வீதிகளில் இருக்கும் பிச்சை காரர்களிடம் பேசுவான். பிச்சைகார்கள் எல்லாரும் அவனை நேசிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு அவன் சில பணங்களை கொடுத்து போக்கும் வரவுமாயிருந்தான். ஒருநாள் அவன் வருவதை நிறுத்திவிட்டான். அந்த மகன் ஒரு பெரிய மாளிகைக்கு சென்று அங்கே வெளியில் இருக்கும் ஒரு காவல் காரனை பார்த்தார், அவரிடம் கேட்டார், “இங்கே நா ஒரு வாலிபனையும் பார்க்க வில்லையே என்றான், அதற்கு அவன், “இல்ல, என்றவாறு கடந்து சென்றார்.” அவன் கேட்கிறான், :உனக்கு தெரியுமா” ஒரு பிச்சைகாரன் சொல்கிரான், “அவர் தனது தகப்பனுடைய ஓவிய விருப்பத்தை பற்றி சொல்லியிருக்கிறார், அவர் தகப்பனுக்கு ஓவியம் என்றால் பிடிக்குமாமே. அதனால் ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்றான்.” அப்பறம் அவன் போய் இந்த மகனுடைய உருவத்தை பெரிய படமாக வரைந்து அதை கொண்டுவந்து, இந்த காவலாலனிடம் கொடுத்து அவனிடம் சொன்னான், இதை அந்த தகப்படினம் கொடு, அவருடைய மகனை எனக்கு பிடிக்கும் என்று சொல். அவன் நல்ல மனிதன் என்றான்.”

காலங்கள் கடந்தது, தகப்பனார் இறந்துவிட்டார் என்ற செய்தியை அவன் கேள்விப்பட்டான், அவருடைய ஓவியங்கள் அடங்கிய கூடம் ஏலத்தில் வருவதை கேள்விபட்டான். அங்க போக முடியுமா என்று யோசித்தான். நல்ல உடைகளை வாங்கி கொண்டான், கஷ்டப்பட்ட தயார் செய்துகொண்டான். அவனுடைய உருவத்தை பிரதிபலிக்கும் அந்த ஓவியம் அங்கே இருக்கிறதா என்று பார்க்க ஆசையாக இருந்தான். அவன் நினைத்தபடி, அது அங்குதான் இருந்தது, அதுதான் நடுவில் இருந்தது. அத பார்த்துகொண்டிருந்தான், அவனுக்குள் ஒரு அசைவு உண்டானது, தெரியுமா. தகப்பனும் அவர் மகனை அதிகமாக நேசித்தார் என்பதை அறிந்திருந்தான். ஏலம் துவங்கியது, ஏலத்தை நடத்துபவர் முதலில் அந்த ஓவியத்தின் அருகில் சென்று, “இந்த ஓவியத்தை தான் முதலில் ஏலம் விடவேண்டும் என்பது  தகப்பனின் விருப்பம்என்றார். யாருமே அதை விரும்பவில்லை. யாரும் அதின் மீது ஏலம் சொல்லவில்லை, அந்த பிச்சைகாரன் சொன்னான், “என்னிடம் இருப்பதை கொடுத்து நான் இதை வாங்கிகொள்கிறேன் என்றான்.” அவனே அதை வாங்கினான்.

இப்ப ஏலம் நடத்துபவர் அடுத்த ஓவியத்திற்கு போகலாம் என்று கூறி கடந்துபோனார்.” ஏலம் விடுபவர் கையில் இருந்த சிறிய சுத்தியலால் சுழற்றினார், எல்லாரும் கோஷமிட ஆரம்பித்தனர், “சரி, மற்ற ஓவியங்களை நாங்கள் பார்க்க வேண்டும் என்றனர்.” அதற்கு  ஏல அதிகாரி, “ஆ, ஆ. தனது மகனுடைய உருவ படத்தை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த ஓவிய கூடத்தில் இருக்கும் அனைத்தும் சேர வேண்டும் எனபது மரித்தவரின் விருப்பம் என்றார்.”
கிழக்கத்தியர்களின் அன்பை சொல்லும் உவமைகளில், அவர்களுடைய அன்பை சொலும் கதை மூலம், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் பிரதியுத்திரம் கண்கூடாக காணப்பட்டது. நான் சொன்னேன், அன்பான சகோதர சகோதரிகளே, குமாரனை பெற்றுக்கொண்டால் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் அனைத்தும் உங்களுக்கு உரியதாக மாறிவிடும். இப்படியாக சுவிசேஷத்தை சொல்ல ஆரம்பித்தேன்.

எல்லாரும் வரிசையா நின்னாங்க, ஜான். இதை சொல்லிக்கொண்டிருகையில் ஸ்தானாபதிகளில் ஒருவர் நாத்திக தேசத்திலிருந்து வந்தவர் என்னிடம் சொன்னார், “Mr. சகரியாஸ், இங்க வர்ரதுல எனக்கு விருப்பமில்லை. ஏ இங்க வந்தேன்னு எனக்கு தெரியல. எப்பவுமே யோசிப்பேன் எதற்கு வரணுன்னு. இன்றைக்கு பதில் கிடைத்தது. தான் தேவனை கண்டுகொள்ளும்படியாக இங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறேன் என்றார்.” ஒரு கதையோடு சொல்லி முடிப்பதற்கு இது சிறந்த கதையாகும். இதை கேட்டுக்கொண்டிருக்கிற நீங்கள், இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொள்ளும்போது, நீங்கள் குமாரனை பெறுகிறீர்கள், அதோடு பரலோக பிதாவின் சகல ஆஸ்திகளையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் அவரை நம்பிடலாம்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   முதல் முறையாக இயேசு கிறிஸ்துவை கேள்விப்படுகிறவர்களுக்கு ஒருவிதமான உநேர்வு ஏற்ப்பட்டிருக்கலாம், ஆல்ரைட். ஒருவேளை ஒருவிதமான மாறுதல் உண்டாயிருக்கலாம், அல்லது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம்…, ஏன்னா இதை பற்றி கேட்பது இதுதான் முதல் முறை. சுவிசேஷம் என்றால் என்ன, இயேசு கிறிஸ்து கொண்டுவந்த நற்செய்தி என்ன? எப்படி ஜனங்கள் இயேசு கிறிஸ்துவோடு ஒரு உறவை ஏற்ப்படுத்திக்கொண்டு அந்த வல்லமையை தங்கள் வாழ்வில் அனுபவிக்க முடியும்?

Dr.ரவி சகரியாஸ்:     அதுதான் ஒரு திருப்புமுனை. மனிதர்கள் மீதிருந்து உங்கள் கண்களை விளக்கிடுங்கள். மாயமாக இருப்பவர்களிடமிருந்து உங்கள் கண்களை விலகிடுங்கள், உங்களை சந்தேகத்திற்குள் நடத்தியிருக்கிறார்கள், தவறான போதனையை அளித்திருக்கிறார்கள். இயேசு கூறுகிறார், “என்னிடத்தில் வருகிற ஒருவரையும் நான் ஒருகாலும் புறம்பே தள்ளுவது கிடையாது.” அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் அவர், சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவையே பிரசங்கிக்கிறார்.” நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்க எங்க இருந்தாலும் சரி, உங்கள் தலைகளை தாழ்த்தி அவரை உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தை உங்களிடம், “அப்பா, உங்க மடியில உட்கார்ந்துக்கொள்ளவா என்கிறது, உங்க பக்கத்துலையே இருக்க விரும்புகிறேன். உங்களை அனைத்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்கிறது.” அப்படியே அந்த குழந்தைக்கு செய்வீர்கள் அல்லவா. அப்படியானால் உங்கள் பரலோக பிதா எவ்வளவு அதிகமாய் செய்வார்? சொல்லுங்க, “உம்மை ஏற்றுகொள்கிறேன், உம்மை நம்புகிறேன், என் இரட்சகராக இரும்.” இதுதான் ஜெபம்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   நேயர்களுக்காக ஜெபித்திடுங்கள், இந்த ஜெபத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் வரும்படி ஜெபித்திட விரும்பிடுவார்கள், இப்போது அவர்களுக்கு மாதிரி ஜெபத்தை கற்றுகொடுக்கிறீர்களா.

Dr.ரவி சகரியாஸ்:     அதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை கேட்டுக்கொண்டிருக்கிற நீங்கள், நீங்க எங்க இருந்தாலும் சரி, இப்ப, சுற்றி இருப்பதை பார்க்காதீர்கள். உங்கள் தலைகளை தாழ்த்தி நான் சொலுகிற ஜெபத்தை ஒவ்வொரு வரியாக எனக்கு பின்னால் சொல்லுங்கள். எளிமையான ஜெபம், ஆனால் மிகவும் வல்லமையுள்ளதாகும்: அன்பின் ஆண்டவராகிய இயேசுவே, நீர் உம்மை இந்த உலகத்தின் இரட்சகராக ஒப்புக்கொடுத்தீர். உம்மை எனக்காக நீர்  பலியாக ஒப்புகொடுத்தீர். உம்மை ஏற்றுகொள்கிறேன். உம்மை நம்புகிறேன். என்னை உமக்கு நான் அர்ப்பணிக்கின்றேன். உம்மை பின்பற்ற விரும்புகிறேன். உம்முடைய வேதத்தை வாசிக்கவும் உம்மிடம் கிட்டி சேரவும் எனக்கு உதவிடும். கர்த்தராகிய இயேசுவே, உம்மை என் இரட்சகராக ஏற்ற்கொல்கிறேன், உம்மோடு எனக்கு இருக்கும் உறவின் மத்தியில் வருகிற எல்லா நம்பிக்கைகளையும் விட்டு நான் விலகுகிறேன். உமது பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:   நேயர்களே, இப்போதே இந்த ஜெபத்தை செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். இன்னமும் எப்படி உங்கள் வாழ்வில் கர்த்தராகிய இயேசுவை அழைப்பது என்ற காரியத்தை பற்றிய கேள்விகளோடு இருப்பீர்கள் என்றால், எங்கள் இணையதளத்தில் நீங்கள் வாசித்து தெரிந்துகொல்லும்படியான இடம் இருக்கிறது. நீங்கள் ஏறெடுக்க வேண்டிய ஜெபமும் இருக்கிறது. அதை பற்றி நீங்கள் கருத்தை சிந்தித்து பார்க்க விரும்புகிறேன். அது உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான கேள்விகளை ஒன்றாகும். அடுத்த வாரம் நாம் தொடர்ந்து ரவி சகரியாசுடன் பேச இருக்கிறோம். அப்போது நான் ஐக்கிய நாடுகளில் இருக்கும் மாணவர்கள் அனுப்பியகடினமான கேள்விகள் சிலவற்றை பார்க்க இருக்கிறோம். அவர் ஹார்வார்டில் உரையாற்றியிருக்கிறார், பிரின்ஸ்டன், அப்பறம் தர்மௌத், மற்றும் நம்முடைய தேசத்தில் இருக்கும் பல பள்ளிகளில் உரையாற்றியிருக்கிறார். அவர்கள் கேட்ட சில கடினமான கேள்விகள் என்ன? அடுத்த வாரும் தவறாமல் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.

 

 

எங்களுடைய மற்ற டிவி நிகழ்சிகளை பார்க்க எங்களுடைய ஜான் அன்கேர்பெர்க் ஷோ ஆப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்திடுங்கள்.

“இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கான ஜெபம்” JA show.org

 

இயேசு திரைப்படம்

கிறிஸ்தவராவது எப்படி

நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்? கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது. கிளிக் செய்யவும்.

ஆடியோ பைபிள்