ரவி சகரியாஸ் ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். நிகழ்ச்சி 1

ரவி சகரியாஸ் ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். நிகழ்ச்சி 1

 

இன்றைக்கு ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியில் Dr. ரவி சகரியாஸ் இறை நம்பிக்கையற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

அவர் இந்தியாவில் வளர்ந்தவர் அவருடைய முன்னோர்கள் பாரம்பரிய இந்துமத உயர்குல ப்ரோகிதர்கள். ஆனால் ஒருநாள் அவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேள்விப்பட்டு கிறிஸ்தவராக மாறினார். அவர் உலகிலேயே அதிக ஞானம் கொண்ட கிறிஸ்தவ விசுவாச தர்க்காப்பாளராக இருந்து வருகிறார், 70ற்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார் அங்கு அவர் பிரசித்திபெற்ற பல்கலைகழகங்களில் உரையாற்றுகிறார், குறிப்பாக ஹார்வர்ட், பிரின்ஸ்டன்,தர்மௌத், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம். அவர் தென் ஆப்ரிக்காவில் சமாதான உடன்படிக்கையின் அங்கத்தினர்களை சந்தித்திருக்கிறார், லெனின் மிலிடரி அக்கடமியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் மாஸ்கோவில் புவிசார் மூலோபாயத்தின் மையத்தையும் சந்தித்திருக்கிறார்.

மூன்று முறை நியூயார்க்கில் ஆக்கிய நாடுகளின் வருடாந்தர ஜெபத்தில் காலைஉணவின்போது பேசும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். அதோடு அரசாங்கத்தின் தேசிய அளவிலான ஜெபங்களில் காலைஉணவின் போது உரையாற்றியிருக்கிறார் ஒட்டாவா, கேனடா லண்டன் இங்கிலாந்து, அதோடு வாஷிங்டன்னில் CIA விழும் உரையாற்றியிருக்கிறார். ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியின் இந்த விசேஷித்த  பகுதியில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

 

 

——————

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நிகழ்சிக்கு உங்களை வரவேற்கிறோம், நான் ஜான் அன்கேர்பெர்க். இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு நன்றி. நீங்கள் கேட்டது போல இன்றைக்கு சிறப்பான விருந்தினர் நம்முடன் இருக்கிறார், Dr. ரை சகரியாஸ். எனக்கு தெரிந்து அதிகப்படியான தேசங்களின்  பல்கலை கழக மாணவர்களிடம் பேசியவர்களில் இவரைப்போல யாரும் இல்லை. கடந்த வாரத்திலிருந்து நாம் கிழக்கு பகுதியில் மாணவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை பார்க்க ஆரம்பித்திருந்தோம். இன்றைக்கு மத்திய கிழக்கு பகுதி மாணவர்களின் கேள்விகளை பார்க்க இருக்கிறோம். அடுத்தவாரம் ஐரோப்பாவிலுள்ள மாணவர்களின் கேள்விகளை பார்க்க இருக்கிறோம், இறுதியாக அமெரிகாவின் கேள்விகள். ஆனா தேவனை பற்றி முக்கியமான கேள்விகள் இருக்குது, ரவி, அப்படி கேட்டிருக்காங்க. அதோட மத்திய கிழக்கு தேசங்களில் பல பல்கலை கழகத்தில் உரையாற்றும் சந்தர்ப்பங்களும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கும் வேளையில், அந்த மாணவர்கள் உங்களிடம் கேட்ட கேள்விகளை நினைவு கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இருக்கட்டும், இந்த கேள்விகளை கேட்க்கும்போது, நினைவிருக்கட்டும், நேயர்களே, அவர்களுடைய கலாசாரத்தை மனதில் வைத்து அவர்களுடைய கண்ணோட்டப்படி பார்க்க முயலுகிறோம். தொடர்ந்து பார்க்கிற காரியங்களை புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

ஆனா முதல் கேள்வியாக மத்திய கிழக்கு பகுதி மாணவர் கேட்டிருக்கிறார், “நா கிறிஸ்தவன் அல்ல. இஸ்லாமியனும் அல்ல, என்னுடைய கேள்வியை பொறுத்துகொள்ளவும்.  நா கிறிஸ்தவனும் இல்ல. இஸ்லாமியனும் இல்ல, அதானால என் கேள்விய பொறுத்துக்கோங்க. நீங்க சொன்ன அந்த பத்து கற்பனைகளும் மனிதர்கள் பிரகாசமான வாழ்க்கையை பெற ஆவிக்குரிய வழிகாட்டியா இருக்குது. ஆனா நீங்க செய்கிற ஒவ்வொரு காரியமும் பிரமானத்தோட தொடர்புடையதா இருக்கிற மோசேயின் பிரமாணத்தோடு ஒப்பிடும்போது, யூதருடைய கற்பனைகளையும் இஸ்லாமியருடைய கற்பனைகளையும் போதுமான அளவிற்கு ஈடு செய்ய  இயேசு முன்வைத்த கற்பனைகள் போதவில்லையே. இப்படியிருக்கும் போது தேவையான அளவு எப்படி கிறிஸ்தவ மார்க்கத்திலயே இல்லாத போது எப்படி உலக பிரச்சனையை அவர்களால் சரிபடுத்த முடியும்  உங்கள் அருகில் இருப்பவரை நேசித்து தேவனிடத்தில் அன்புகூர்ந்தால் மட்டும் இதை செய்திட முடியுமா.”  இதை பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

Dr.ரவி சகரியாஸ்:   இது கவனத்தை ஈர்த்தது, இந்த கேள்வி எனக்கு நல்லா நினைவிருக்கு, ஜான். அது, உண்மையில், மத்திய கிழக்கு பகுதிகளில் நிறைய நேரத்தை கழித்திருக்கிறேன் அங்க சந்தோஷமா இருந்தது. சீரியா, யோர்தான், லீபனோன், மட்டுமில்ல, எகிப்து போன்ற அனைத்து தேசங்களும், ஜாகார்டாள்ள திறந்த வெளி கூட்டம், இந்தோனேசியா, இல்ல மலேசியாவின் இஸ்லாமிய பல்கலைகழகம், போன்று பல இடங்கள். நா அங்க இருந்த போது மனபூர்வமா என ஏத்துக்கிட்டாங்க, நாங்க உணர்வுபூர்வமான தலைப்பை பகிர்ந்துகொண்டத்தை பொருட்படுத்தவில்லை. அதனால என்னை அழைத்து ஏற்றுக்கொண்டு உபசரித்த இஸ்லாமிய உலகத்தாருக்கு நான் எப்போதும் நன்றி சொல்லிடுவேன். ஆனா உலக கண்ணோட்டம் முற்றிலும் வித்தியாசமானதும் அதுல கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.

உண்மையில், இந்த கேள்வியின் அனுமானம் தவறாக இருக்கிறது. இஸ்லாமியத்திற்குள்ளே பலவிதமான வியாக்கியானங்கள் இருக்கிறது. ஏன், அதனுடைய நிறுவனர் கூட, அவர்களின் தீர்க்கதரிசி, நிராகரித்த உண்மைகளை பற்றி சொல்லியிருகிறார், அவர் பிராமானங்களை நிராகரித்திருக்கிறார். அதனால சரியான உண்மை அங்கும் சொல்லப்படவில்லை. அல்லது இஸ்லாமியத்தின் சில பகுதிகளை எடுத்து பாருங்கள், அதாவது, சுபிஸ் எடுத்து பாரங்கள், இல்லனா அகமதியாஸ், இல்லனா ஏழு நபர் அல்லது பன்னிரண்டு நபர்கள்.” ஆனா உலகில் பெருவிதத்தில் பேசப்படும் சுன்னிஸ் மற்றும் ஷையாசை பார்த்தால் – அவர்களுடைய அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் பெரும் வித்தியாசத்தை பார்க்க முடியும். அதிகமாக அதிகாரப்பூர்வமான சட்டங்கள் இருப்பது, ஷியா தரப்பினரிடம் காணப்படுகிறதா? இல்ல, சடங்காச்சாரம் சுன்னி மக்களிடம் அதிகமாயிருக்கிறது. அதனால அவர்களுக்குள்ளேயே பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கிறது அதெல்லாம் கேள்வியில் சொலப்படவில்லை.

நான் பேசிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் புரிந்து கொள்ள கடினமாக தோன்றிடலாம், குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் இருப்பவர்கள், பிரமாணத்தை பற்றிய உங்களுடைய உலக கண்ணோட்டத்திற்கும் யூத – கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தின் கருத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை புரிந்துகொள்வது கடினம். அதாவது, இந்த பிரமாணங்கள் கொடுக்கப்பட்ட போது, இயேசு சொல்கிறார், இது ஒரு பள்ளி ஆசிரியரை போல, ஒரு ஆசானைப்போல, கண்ணாடியை போல இருந்தது. ஆனால் உங்க முகத்தை நீங்கள் கழுவ நினைத்தால், நீங்க கண்ணாடிய தேடி போக மாட்டீங்க. உங்க முகம் அழுக்கா இருக்கிறததா  கண்ணாடி உங்களுக்கு சொல்லும். கழுவறதுக்கு நீங்க குழாயை தேடி போகணும் இல்லன்னா, தண்ணீய தேடிபோய் கழுகனும். பிரமாணங்கள் உங்களுக்கு அறிவையும் தகவல்களையும் தருகிறது. அதுஒருபோதும் உங்கள் இருதயத்தை மாற்றிடாது.

இன்னும் சில விஷயங்களையும் நினைவில் கொள்ளுங்கள். மோசே 613 பிரமாணங்களை தந்தார். அது என்ன செய்தது? அது இன்னும் அதிக கேட்டைத்தான் உண்டாக்கியது. தாவீது அதை 15ஆகா குறைத்தார், தெரியுமா, அதை ஏசாயா எட்டாக குறைத்தார் என்று நினைக்கிறேன், மீகா  அதை 3 ஆக குறைத்திட்டார் – நீதியை செய்து, இரக்கத்தை விரும்பி தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நடவுங்கள். இயேசு அதை ஒன்றாக குறைக்கவில்லை, அதை இரண்டாக குறைத்துவிட்டார்: “உன் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக, உன்னைப்போல பிறனையும் நேசி.” மேலும் அவர், “இந்த இரண்டில்தான் நியாயப்பிரமாணங்களும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியுள்ளது என்றார்.” எதனால அப்படியானது? பத்து கட்டளைகளை பற்றிய மேற்கோள்களில் இதற்க்கான விடை கொடுக்கப்பட்டிருக்கிறது. இத நீங்க கவனமா கேட்கவேண்டும் என விரும்புகிறேன். தேவன் வெறுமனே [பத்து கட்டளைகளை முன்வைக்க வில்லை. அவர் சொல்லுகிறார், “உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.”

யூத கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தின்படி, நீதிக்கு முன்னானது மீட்பு உண்டாகும் என்று கருதப்படுகிறது. நா சொன்னது காதுல விழுந்துதா: எப்போதுமே நீதியை அடைவதற்கு முன்பு மீட்பு உண்டாக வேண்டும், அதை தொடர்ந்து ஆராதனை இருக்கும், மீட்பு, நீதியாகுதல், ஆராதனை. நீங்க மீட்கப்படாத நிலையில் நீதியை அடைய முடியாது, நீங்க முதல்ல மீட்கப்பட்டு நீதியாக்கப்படாம ஆராதிக்க முடியாது. “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான் கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருப்பவன்தானே.” இவை இரண்டிற்கும் இருக்கிற வித்தியாசத்தின் திறவுகோல் இதுதான். நீதியாகுதல் மட்டுமே எனக்கு தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் உரிமையை அளிப்பதில்லை. ஆனால் அவர் அளித்திடும் மன்னிப்பு என் இருதயத்தை மாற்றி எனக்குள் விருப்பத்தை ஏற்ப்படுத்தி கட்டளைகளை நேசிக்க செய்கிறது.

எனவே கட்டளைகள் அனைத்தும் சீர்த்திருத்துதலுக்கு வலி செய்வதாயிருகிறது. இருதயத்தின் நிலைமாற்றம் மட்டுமே கற்பனைகளை நேசித்து அவற்றை கைகொண்டு நடந்து தேவனுக்கு நன்றியுள்ள இருதயத்தோடு ஆராதிப்பவராக மாற்றிடும். நியாயப்பிரமாணம் என்பதை பற்றிய மாற்று கருத்துகளுக்குள் அதிகப்படியான வித்தியாசங்கள் இருப்பதை இங்கு நம்மால் பார்க்க முடியும்.

உண்மையில், இன்னொன்றும் இருக்கிறது. மலை பிரசங்கத்தில் இயேசு இன்னும் ஒருபடி மேல போய் பிரமாணங்களை எடுத்துரைக்கிறார். அவர் சொல்றாரு, “என்று சொல்லப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களே… ஆயினும் நான் உங்களுக்கு சொளுகிறேன்,” உரைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருகிரீர்கள், நான் உங்களுக்கு சொல்லுகிறேன்…” சரி, விபச்சாரம் செய்வது தவறு என்று சொல்வதோடு விடவில்லை. ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்ப்பதை. இயேசு தேவனுடைய, கற்பனைகளை மீறுவதற்கு ஒப்பாகும் என்கிறார். எனவே கிறிஸ்தவர்களின் செய்திகளினால் இந்த உலகமே மாற்றமடைய கூடும். மாற்றத்தை அடைவதற்கு இதுதான் ஒரே வழி- என்னுடைய உங்களுடைய மனம் மாறினால் இபப்டியாகும். இதை செய்வதற்கு தேவன் வல்லமை உள்ளவராயிருக்கிறார்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா, உண்மையான பதில். சரி, நேயர்களே, இப்போது கொஞ்சம் துரிதமாக கடந்து செல்ல விரும்புகிறோம். இன்னும் ஏராளமாக இருக்கிறது. ஆனால் நீங்க ரவி சகரியாசின் இணையதளத்தில் கூகிலில், மற்றும் யூ டியூபில், பார்த்தால் அங்கு பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுப்பிய கேள்விகளை பற்றி பார்க்க முடியும், இப்ப நாங்க உங்களுக்கு எடுத்து சொல்வதிலும் அதிகப்படியாக இருக்கிறது. ஆனா உலகமெங்கிலும் நடக்கும் சம்பவங்களை நீங்கள் ஜீரணித்துகொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எடுத்து சொல்லுகிறோம். இப்ப புனித புத்தகங்களை பற்றிய கேள்விகள் இருக்கிறது, ஆல்ரைட்? ரவி, உங்களால எப்படி இத நம்ப முடியுது மத்தேயு மாற்கு லூக்கா மற்றும் யோவான் சுவிசேஷங்கள், உண்மையில் சாத்தியமானதா, ஏன்னா இதெல்லாம் இயேசு ஜீவனோடிருந்த காலத்திற்கு பிறகு எழுதப்பட்டதானே? அப்படின்னா இயேசு இந்த வார்த்தைகளை அங்கீகரித்தார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

Dr.ரவி சகரியாஸ்:   சரி, முதலாவதாக, உத்வேகத்தை உண்டாக்கும் உபதேசங்கள், ஜான், உண்மையில் இது, இஸ்லாமிய உலகத்தின் கண்ணோட்டத்தை விட முற்றிலும் மாறுபட்ட உபதேசமாக இருக்கிறது. நீங்க ஒரு சாதாரண நிலையிலான இஸ்லாமியரிடம் பேசினால், நா பண்ணியிருக்கேன், அவங்கள பொறுத்தவரை பதில்கள் எல்லாம் ஒரே புத்தகத்தில் இருக்கு, ஒரே ஆக்கியோந்தான், ஒரே வெளிப்பாடுதான், தீர்க்கதரிசி முகமதுக்கு கிடைத்த நிலையிலான புத்தகமாகிய குரான். சுவாரஸ்யமானது, உலக கண்ணோட்டத்தில் இந்த புத்தகத்தை விமர்சனைக்கு உட்படுத்துவது ரொம்பவும் கஷ்டமான விஷயம். சிறந்த எழுத்தாளர் யாருனா ஈரானை சேர்ந்த அலி டாஷ்டி அவர் ஒரு பத்திரிக்கையாளர். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் “இருபத்தி மூன்று ஆண்டுகள்”, தீர்க்கதரிசி முகமதின் வாழ்க்கை சரித்திரம். டாஷ்டி சிறப்பான எழுத்தாளர். அவர் எழுத்து மொழியை நன்கு கற்று தெரிந்தவர்.

இஸ்லாமிய பண்டிதர்களுக்கு  அலி டாஷ்டி யாரென்று தெரியும். குரான் சிறந்த புனிதநூல் என்ற கூற்றை அவர் ஆராய துவங்கியபோதுதான் பெரிய பிரச்சனைகள் தலைதூக்கியது. என்ன நடந்தது? அவர் காணாமல் போய்விட்டார், மறைந்துவிட்டார். அவர் சொன்னாறு, அதாவது, குரானை பூரணமான நூல் என்று நிரூபிக்க வேண்டுமானால் சில இலக்கண குறிப்புகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றார். ஒரு சாதாரண இஸ்லாமியர் அறிந்திருக்க வேண்டிய காரியங்கள் எது, இது ரொம்பவும் இக்கட்டான காரியம், நாங்க ஒரு மேஜையை சுற்றி அமர்ந்து உள்ளன்போடு இதை பற்றி பகிர்ந்துகொண்டோம். எந்த கேட்ட எண்ணமும் இல்லை, நான் இந்தியாவில் வளர்ந்தேன், என்னுடைய நம்பர்களில் பெரும்பாலானோர் இந்துக்களாக இஸ்லாமியர்களாக இருந்தார்கள். என்னோட கிரிக்கெட் கேப்டன், சுல்தான் அஹ்மத், ஒரு அருமையான இஸ்லாமிய மனிதர் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தோம். அந்த சமயத்தில் எந்த நம்பிக்கையும் உறுதியும் எனக்கு கிடையாது.

ஆனா அவங்க புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னன்னு கேட்டா பூரணமானது என்று சொல்லப்படும் புத்தகம், யதார்த்தத்தோடு போருந்தமாக இல்லாமல் இருக்கிறது. இதை பண்டிதர் டோபி லெஸ்டர் சுமார் 1999ல் என்று நினைக்கிறன்  அட்லாண்டிக் மாத பத்திரிகையில், ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். உண்மையில், அதிகாரப்பூர்வமான இலக்கிய தொகுப்பு நிறுவப்பட்டபோது, ஒச்மானின் மூன்றாவது கேளிபேட் நாட்களில், ஒரே வழியை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி மாற்றுகருத்துடைய அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.

இதை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சுவிசேஷங்களின் எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த எல்லா மாறுபாடான காரியங்களை, பார்க்கும்போது, துவக்கத்தை நாம் நெருங்க நெருங்க அதிலுள்ள வித்தியாசங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதை கவனிக்க முடியும். அதை பார்க்கும் போது, அதாவது, நாற்பது எழுத்தாளர்கள், 66 புத்தகங்கள் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக, எழுதப்பட்ட அனைத்தும் ஒன்றையே குறிப்பிடுகிறது இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வாழ்க்கை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், இது எனக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. ஏன்னா எப்படி 1500 வருடங்கள் பலதரப்பட்ட மனிதர்கள் இந்த ஒரே காரியத்தை முன்னுரைத்திருக்க முடியும்?

இந்த போதனையின் மையப்பகுதி பிலிப்பியர் 2ல் இருக்கிறது, “அவர், தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் கோலத்தை தன்மீது சுமந்துகொண்டு… மனுஷர் சாயலானார், மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார், சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார். இயேசுவின் நாமத்தில் முழங்கால்கள் யாவும் முடங்கும்… இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று நாவுகள் யாவும் அறிக்கை செய்யும், அதினால் பிதாவாகிய தேவன் மகிமையடைவார்.” இதுதான் ஆரம்ப நாட்களின் கீர்த்தனை, இதுதான் சுவிசேஷத்தின் அஸ்திபாரத்தை ஒன்றாக இழுத்துகொண்டது. இது ஒரு அருமையான சம்பவம். ஆக்கியோங்களின் எழுத்துகளையும், இயேசு கூறியவைகளையும், பரிசுத்த ஆவியானவர் அவர்களின் நினைவிற்கு கொண்டுவருவார்.

குரானில் சொல்லப்பட்டிருக்கிறது காபிரியேல் தூதன்தான் வெளிப்பாடிகளை கொடுக்கிறார். மனுதனுக்கு அப்பாற்பட்டவன் கருவியாக பயன்படுத்தப்படுகிறான். வேதாகமத்தின் படி பார்க்கும்போது பரிசுத்த ஆவியானவர்தான் அவர்களுக்கு போதிக்கப்பட்ட காரியங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறவராயிருக்கிறார். இதைதான் சுவிசேஷத்தின் செய்தியாக சொல்லப்பட்டு வருகிறது. இப்ப நீங்க முற்காலத்திலிருந்த பல நூற்றுகணக்கான ஆவணகளை பதிப்புகளை பார்க்க முடியும். முற்கால எழுத்துகளில் எதுவும் வசனங்களின் பதிவுகளை போல பத்திரப்படுத்தப்பட வில்லை, அதனால  இயேசு யார் என்பதும்  எதற்காக பூமிக்கு வந்தார் என்பதும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ரவி, இன்னும் ஒருசில வித்தியாசங்கள் இருக்கத்தானே செய்யுது. அதை சொல்லுங்க.

Dr.ரவி சகரியாஸ்:   சரி,உண்மையா சொல்லன்னுன்னா எனக்கு தெரிந்தவரை முகமதே கிறிஸ்தவர்களை புத்தகத்தின் மக்கள் என்று குறிப்பிடுகிறார். அதனால வெளிப்பாடுகளும் இலக்கிய ஆதாரங்களும் இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொண்டார். இருந்தாலும், அந்த அதிகாரம் முந்தி தேனால் கொடுக்கப்பட்டது என்பதை புரிந்துகொண்டிருந்தால், பிறகு எப்படி மறந்துபோகும், இவர்ககு ஒரு கேள்வியை வைத்திருக்கிறேன். அப்படியானால் அவர்களுடைய போதனைகள் மறந்துபோகவே இல்லை என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? இங்க கோட்ப்பாடுகளின்  சாத்திய கூருகள் அதிகமாக இருக்கு. ஆனா இவை தேவனால் அருளப்பட்டது என்பதை புரிந்துகொண்டதுதான் திறவுகோல். இவை காணாமல் போயிற்று என்பதை நாம நன்புவதில்லை. சிலவேளைகளில் பிழைகள் என்று சொல்லப்படும் காரியங்கள் அனைத்தும் குரனில்தான் அதிகமாக இருக்கிறது.

இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்த கார்டினல்களின் சரித்திர கண்ணோட்டம் இது. யூத சரித்திர வல்லுனர்கள் இதை பற்றி சொல்லுகிறார்கள், உலக வரலாற்று வல்லுனர்கள் இதை பற்றி சொல்றாங்க, கிரேக்க வரலாற்றாசிரியர் தாலஸ், ரோம வரலாற்றாசிரியர் டாகிடஸ். இவங்க எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்தை பற்றி சொல்லியிருக்காங்க. அப்படியிருந்தும் குரான் சொல்கிறது அவர் உண்மையில் மரிக்கவில்லை, மரித்தவர் போல இருந்தார்… அதனால இதுக்கப்பறம் அவங்களுடைய அந்த கோட்பாடுகளை வைத்துகொண்டு உண்மையில் யார் சிலுவையில் இருந்தது என்பதை கண்டறியும் ஆராய்ச்சிக்கே போயிடுவாங்க போலிருக்கு. வரலாற்று சம்பவங்கள் அனைத்தும் பழைய ஏற்ப்பாட்டிலும் புதிய ஏற்ப்பாட்டிலும் மிகவும் தெள்ளத்தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. குரானில் உண்டாயிருக்கும் வித்தியாசம் வரலாற்றோடு ஒத்துபோகாத ஒன்றாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைதான் சுவிசேஷத்தின் மையப்பொருளாக இருக்கிறது. தேவன் தம்முடைய குமாரன் மூலமாக உங்களுக்கும் எனக்கும் மன்னிப்பின் பரிபூரண நிச்சயத்தை கொடுத்திருக்கிறார். அதுதான் சுவிசேஷத்தின் அழகிய நற்செய்தி.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ரவி, நாம இப்ப கடந்த நாட்களில் உங்களிடம் மத்திய கிழக்கு பகுதி மாணவர்களிடம் வந்த கேள்விகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அதில இங்க ஒரு கேள்வி இருக்கு. ஒரு மாணவர் கேட்டிருக்கிறார், “என்ன தொந்தரவு செய்கிற விஷயம் என்னன்னா, ரவி, எல்லா கிறிஸ்தவ சபைகளில் போதிக்கப்படும் கிறிஸ்தவசமய மரபுகள், நாம எல்லாருமே பாவிகளாக பிறந்திருக்கிறோம் என்ற விஷயம். ஆனா இயேசு பாவத்தின் மூலாதாரத்தை பற்றி ஒன்றுமே சொல்லலையே, திருத்துவத்த பற்றி சொல்லல, அவரே தேவன் தானே. 2 காரியங்களை முக்கியப்டுத்தினார், “உன் தேவனாகிய கர்த்தரை நேசி பிறனையும் நேசி.” இந்த ஓராறு விஷயத்தைதான் பிரதானமா சொல்லீட்டு இருந்தாரு. இதற்கு என்ன சொல்வீங்க?

Dr.ரவி சகரியாஸ்:   இது, ஒரு நல்ல கேள்விதான். இந்த காரியங்கள் எப்படி கேளிசித்திரங்களை போல தோன்றப்படுகிறது என்பது தெளிவாக பார்க்க முடியுது, ஜான். நீங்க பார்க்கிற பிரசங்க மேடையிலிருந்து மசூதிகளில் அல்லது மற்ற இடங்களில்  எதை போதிக்கிறார்களோ அதைதான்  நீங்கள் திரும்பவும் சொல்பவராக இருப்பீர்கள், அல்லது படிப்பதை பின்பற்றுவீர்கள். இது சத்தியத்தை புறக்கணிக்கும் கண்ணோட்டமாக தான் இருக்கிறது. இதில் உண்மைய என்னன்னா, எழுதப்பட்டவைகளை பார்க்கும்போது, உதாரணமாக, ரோமர் புத்தத்தில் பார்க்கும்போது, அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார், இவர் கற்பனைகளை பின்பற்றினால் நமக்கு நீதியாக எண்ணப்படும் என்பதை பின்பற்றிக்கொண்டிருந்த நபராவார், அவர் சொல்றாரு. “நியாயப்பிரமாணங்களை பற்றிக்கொண்டு பூரணராகும்படி முயன்றுகொண்டிருந்தேன்.”அவர் சொல்றாரு. ஆனா அவரேதான் இதையும் சொல்லியிருக்கிறார், “எல்லாரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையை இழந்தவர்களாயிருக்கிறோம்.”

பாவத்தை ஜனங்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். இதை ஒரு செய்கை என்று நினைக்கிறார்கள். அது பெரு செய்கை அல்ல. அந்த செயலை செய்வதற்கு முன்பு தோன்றுகிற எண்ணம்தான். அதில் விழுந்துவிடுகிறோம். அந்த வார்த்தை. அதின் கிரேக்க வார்த்தை, குறியை தவறிவிட்டோம் என்ற அர்த்தம் கொண்டிருக்கிறது. எல்லா இஸ்லாமியர்களும் இதை தெரிந்துகொள்ள வேண்டும். நமக்கென்று தேவன் குறித்திருந்த எல்லை குறியை நாம் மீறிவிட்டோம். இப்ப இயேசு விபச்சாரம் செய்து கையும் கலவுமாக பிடிக்கப்பட்டு  கொண்டுவரப்பட ஸ்திரீயின் சம்பவத்தை பாருங்கள். அவர் அங்கு சொல்லுகிறார், “உங்களில் பாவம் இல்லாதவன் எவனோ, அவன் முதலில் கற்களை எரியட்டுமே?”

அவர் பாவத்தின் யதார்த்தத்தை பற்றி சொல்லுகிறார். ஒரு மனுஷன் கூரையை பிரித்து அங்கு இறக்கப்பட்ட போது ஜனங்கள் எல்லாரும் ஒரு அற்ப்புதம் நடக்குமா என்று பார்த்துகொண்டிருந்தார்கள், அவனுடைய சரீரம் சுகம் பெறுமா. இயேசு, முதலாவது என்ன சொன்னார் தெரியுமா, “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.” அதற்கு அப்பறம் அவனிடம் சொன்னார், “எழுந்து உன் படுக்கையை எடுத்து கொண்டு போ.” பிறகு ஜனங்களை பார்த்து கேட்க்கிறார், “இங்கு எது எளிதாக இருக்கும் உன் படுக்கையை எடுத்துகொண்டு நட என்று சொல்வதோ அல்லது உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ எது எளிது?’ பூமியிலே மனுஷகுமாரனுக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கே இப்படி ஆயிற்று என்று சொல்லுகிறார்.” இதுதான் முக்கியமான தேவையாயிருக்கிறது.

இந்தியாவில் ஒரு மனிதன் என்னிடம் ஒருமுறை, “எனக்கு ஒரு  குரு அவசியமா?” என்று சமீபத்தில் ஒரு போது இடத்தில் கேட்டார். நா சொன்ன, “ஒரு குருவை நீங்கள் சந்திப்பதற்கு முன்பு உங்களுக்கு இரட்சிப்புதான் அவசியம், அந்த குருவுக்கே இரட்சிப்புதான் அவசியமான ஒன்று என்றேன்.” எனவே மனுக்குலத்திற்கு இரட்சிப்பின் அவசியம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

அதனால தான் இயேசு சொல்கிறார், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக உன்னை போல் பிறனையும் நேசி.”இதைதான் அவர் சொல்ல வேண்டியிருந்தது, சரி, இப்ப நா உங்களுக்கு சொல்றேன், இதைதான் அவர் சொல்ல வேண்டும் என்று இருந்தால் இதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று. இப்போதிலிருந்து இந்த 2 காரியங்களை மத்திய கிழக்கு பகுதிகள் செயல்படுத்தினால் அதுதான் சிறந்த இடமாக கருதப்படும்.

உண்மைய சொல்லன்னுன்னா, வேதம் சொல்கிறது நாம தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கோம். அதற்கு என்ன அர்த்தம்? பொதுவாகவே சுயமாக தீர்மானிக்கும் தன்மையோடு உருவாக்கப்பட்டிருக்கிறோம், நம்முடைய இருதயமானது இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் வல்லமையினால் மாற்றப்படாவிட்டால், நாம் நம்முடைய வல்லமையில் கட்டுப்பாட்டில் ஆதிக்கத்தில் வாழ்கிறவர்களாக இருந்திடுவோம்.

இன்றைக்கு மத்திய கிழக்கு நம்பர்களிடம் ஒன்று கேட்க்கிறேன்: ஒரு நபர் கையில் பட்டயத்தொடு நடந்துகொண்டிருப்பதை பார்க்கிறீர்கள், அரசியல் அமைப்பில் வித்தியாசம் வரவேண்டும் என்று ஜனங்களின் தலைகளை துண்டித்துகொண்டிருக்கிறான், ஒரு வேளை அந்த நபருடைய இருதயம் தேவனுடைய அன்பினால் தொடப்பட்டு உன்னை போல பிறனையும் நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் அவனுக்குள் வித்தியாசம் ஏற்படுமா? அது ஒரு வித்தியாசத்தை உண்டாக்குமா இல்லையா? அன்பு நிறைந்த தேவன் பக்கமாக என்னுடைய இருதயம் திருப்பப்படும்போது அது மகாபெரிய வித்தியாசத்தை உண்டாக்கிடும். ஏற்கனவே, நீங்க முந்தின நிகழ்ச்சியில் சொன்ன மாதிரி, நாம செய்கிற விஷயங்களை தேவன் மாற்றுவதில்லை, எதற்காக செய்கிறோம் என்ற எண்ணத்தை மாற்றுகிறார். மனிதர்களுடைய நிலையை பற்றி இயேசு என்ன போதித்திருக்கிறார் என்பதை அவர் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது, இதுவரை அமெரிக்க பதிப்புகளில் முதல் முறையாக வந்த வரி, அமெரிக்காவின் பத்திப்புகளில், வந்தது: “ஆதாமின் வீழ்ச்சியினால் எல்லாரும் பாவம் செய்தோம்.” மனிதனுடைய விழுந்துபோன நிலை. மேல்கம் முக்கேரிட்ஜ் சொல்கிறார்  மனிதனின் துன்மார்க்கம் ஒரு சமயத்தில் அனுபவத்தால் பரிசோதிக்க படும்படியாக இருந்தது என்பது உண்மை அதே சமயத்தில் அறிவுப்பூர்வமாக எதிர்ப்புகளை கொண்டதாயும் இருந்தது. உண்மையில் அவங்க பாவத்தை மறுக்கும் செயல் பாவத்திற்கான ஆதாரமாக இருக்கிறது, ஏன்னா பாவம் பெருமையின் முழு வடிவமாக இருக்கிறது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  ஆமா. நீங்க ஹம்மாஸ் அமைப்பின் நான்கு தலைவர்களில் ஒருவரை தனியாக சந்தித்திருக்கிறீர்கள் அதை பற்றி நேயர்களோடு பகிர்ந்துகொள்ளும்படி விரும்புகிறேன், நீங்க என்ன சொன்னீங்க, தேவன் என்ன சொல்லும்படி ஏவினார், அதனுடைய விளைவு எப்படி இருந்தது.

Dr.ரவி சகரியாஸ்:   அருமையாக இருந்தது. இருந்தாலும் அதுக்கு மன்னால ஒரு 30 நொடிகள எடுத்துக்கிறேன், ஏன்னா அங்க போறதுக்கு கொஞ்சம் முன்னால வேறொருவரை சந்தித்தேன், அதாவது, அது தமஸ்குவில் ஷேய்க் ஹுசைன சந்தித்த பிறகு நடந்ததா முன்னாடி நடந்ததான்னு எனக்கு சரியா நினைவில்ல. அவரிடம் பேசியத்தை சொல்ல எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். ஷேய்க் ஹுசைன், சீரியாவின் சியாட் அமைப்பின் முன்னணி தலைவர். நாங்க பேசிக்கிட்டிருந்தோம், எங்களுடைய உரையாடலின் இறுதியில் அவர் என்னை பார்த்து என்னிடம் பொதுவாக ஒரு வரியை அழுத்தமாக சொன்னார், “ப்ரோபசர், அவர் சொன்னார், ஒருவேளை இஸ்லாமியர்களாகிய நாங்கள் இயேசு சிலுவையில் மரித்தாரா என்ற கேள்வி எழுப்புவதை நிறுத்திக்கொண்டு எதற்காக மரித்தார் என்று கேட்க வேண்டிய நேரம் இது என்றார்.” நா அவரிடம், “ஷேய்க் ஹுசைன், உங்களுடைய வரிகளை பயன்படுத்த அனுமதி கிடைக்குமா சார்? என்றேன் அதற்கு அவர் நிறுத்தி, “சரி, உபயோகித்துகொள்ளுங்கள் என்றார்.”

ஆனா ஹம்மாஸ் அமைப்பின் நான்கு தலைவர்களில் ஒருவரோடு நடந்த உரையாடலில், ஷேக்குகளில் ஒருவர், அது எப்பன்னா நாங்க, அதாவது கேண்டர்பரி ஆர்ச் பேராயர்கள் மற்றும் சிலரும், ரமல்லா போயிருந்தோம். யூத மற்றும் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்தோம், அவங்களுக்குள்ள ஒரு சுமூகமான உறவு ஏற்ப்பட்டு இருவரும் பேசி காரியங்களை செயல்படுத்தும் வழியை ஏற்ப்படுத்தி கொடுக்க முயற்சித்தோம். இது கடைசி நாளில் நடந்தது. நாங்க சுமார் ஆறு ஏழு பேர் ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம், புகை சூழ்ந்த அறை, நிறைய பேர் அங்க இருந்தாங்க. ஷேக் ரொம்பவும் உடல் பலம் கொண்ட நபராக இருந்தார். அவர் சிறையில் இருந்த நாட்களை பற்றி எங்களிடம் கூறினார், அவர் இழந்த குடும்ப நபர்களை பற்றியும் சொன்னார்.

உரையாடலின் இறுதியில் நாங்க ஒவ்வொருவரும் ஒரு கேள்வியை கேட்க்கும்படியாக கேட்டுக்கொண்டார், எங்களில் மற்றவர்கள் முக்கிய விருந்தினர்கள் கிடையாது. அது ஒரு பிரைவேட் மீட்டிங் என்கிறதால கேள்விய என்னால சொல்ல முடியாது, ஆனா அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் அவருடைய பதில் எனக்கு திருப்தி அளிக்க வில்லை. நான் சொன்ன, “ஷேக், உங்க பதில் எனக்கு பிடிக்கல, சார்,”மேலும், “ஏன் என்கிற காரணத்தையும் சொல்றே,”ன்னு சொல்லி விளக்கமாக அவருக்கு சொன்னேன். அவரிடம், “உங்களிடம் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன், இங்கிருந்து ஒரு மலை ரொம்ப தூரத்துல இல்ல. 5,000 வருடங்களுக்கு முன்னால ஆபிரகாம் தான் தேவன் மீது வைத்திருந்த விசுவாசத்திற்கு அடையாளமா அந்த மலையில் தான் தனது குமாரன பலியாக கொடுக்க ஏறிப்போனார். அந்த சம்பவம் நினைவிருக்கான்னு கேட்டேன்,” அதற்கு அவர், இருக்குன்னாரு”. மேலும் நான், “எந்த மகன்னு இப்ப நம்ம வாதாட வேண்டாம், தனது மகன கூட்டீட்டு போனதை ஒத்துக்கொள்வோம் என்றேன்.” அதுக்கு ஷேய்க் சொன்னாரு, ஆல்ரைட்.” நா சொன்னே, “கத்தியை அவன் ஓங்கி கொண்டுவரும்போது, தேவன் நிறுத்துன்னு சொன்னார்! அதோடு, “அதற்கு பிறகு தேவன் என்ன சொன்னாருன்னு கேட்டேன்? அமைதியா இருந்தாரு. நா சொன்ன, “தேவன் சொன்னார், நான் அதை பார்த்துகொள்கிறேன்.” அவர் சொன்னார், “ஆமா சரிதா.” அதற்கு நா, “ஷெய்க், நீங்களும் நானும் உட்கார்ந்திருக்கிற இடத்துக்கு அருகில் தான் கல்வாரி என்னும் பர்வதம் இருக்கிறது. 2, 000 வருடங்களுக்கு முன்னால தேவன் தாம் உரைத்த வாக்கின்படி அவர் அந்த காரியத்தை பார்த்துக்கொண்டார். தன்னுடைய சொந்த குமாரனை அந்த மலையின் மீது கொண்டு சென்றார், அதோடு, ஷேய்க், இப்ப அந்த கத்தி தடுத்து நிறுத்தப்படல. தேவன் தமது மகனை பலியாக கொடுத்தார் என்றேன்.” நான் சொன்ன “தேவன் அளித்த குமாரனை நீங்களும் நானும் ஏற்றுக்கொள்ளாத வரை, பதவிக்காகவும் அதிகாரத்துக்காகவும் நிலத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் நம்முடைய மகன்களையும் மகள்களையும் உலகத்தின் யுத்தத்தில் இழக்க வேண்டியிருக்கும்.

அங்க அமைதல் உண்டாயிற்று. அப்பா ஆர்ச் பேராயர் சொன்னாரு, “சரி, இப்ப புறப்பட நேரமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.” நாங்க வெளிய வர எழுந்து புறப்பட்டோம். நா எழுந்து படிக்கட்டுகளில் இறங்க போனபோது ஆர்ச் பேராயர் என்னை அணைத்துக்கொண்டு, “ரவி,” என்று அழைத்து . அவர் சொன்னார், “ரவி, இது தேவனுடைய தொடுதல்.” நான் சொன்னே, “நிச்சயமா நன்புகிறேன்,” ஆனா நா சிறப்பு விருந்தினர் கிடையாது, ஆர்ச் பேராயர்தான் விருந்தினர்.

நாங்க எங்க காருக்குள்ள ஏற போகும்போது எனக்கு பின்னால காலடி சத்தத்த என்னால் கேட்க்க முடிந்தது. அந்த ஷேய்க் என்னுடைய அருகில் வந்துகொண்டிருந்தார். என்னை அப்படியே அணைத்துகொண்டார். தெரியுமா, ஏ பின்னால இரண்டு இரும்பு கம்பிகள் இருக்கிறது. நா சொல்லிக்கிட்டேன், ஓ ஓ , இது நோருங்கப்போற நேரம்னு, நினைக்கிறேன். ஆனா அவர் என்னை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா, “நீ நல்ல மனுஷன், Mr சகரியாஸ். யூ ஆர் அ குட் மேன்.” அவருடைய கண்களில் கண்ணீர் தழும்ப என்னிடம் சொன்னார், “உன்ன மறுபடியும் சந்திப்பேனென்று நம்புகிறேன்,” என்னுடைய கன்னத்தில் இரண்டு பக்கமும் என்னை முத்தமிட்டார்.

அதாவது, இதில் சுவாரஸ்யமானது என்னன்னா ஜான், கோலாலம்பூர்ல இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இந்த சம்பவத்தை நான் சொன்னேன், மலேசியாவில். அங்கு வயதான ஒருவர். இஸ்லாமிய பாடபிரிவின் முதன்மையாளராக இருப்பவர் ஒரு பெண், இப்ப அவங்க பெற சொல்ல விரும்பல. என்னுடைய உரையாடலை முடித்துக்கொண்டு அவருடைய அலுவலகத்திற்கு சென்று அங்கு கிறிஸ்தவ விசுவாசத்தின் தற்காப்பு சிறப்புத்தன்மைகளை எடுத்துரைத்த போது, அவங்க எங்கிட்ட சொன்ன விஷயம் இதுதான் – என்னோடு என்னுடைய 2 உடன் ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர் – “ஒருவேளை மரபுகளுக்கு தடையில்லைன்னா, உங்க இரண்டு கன்னத்துலயும் நிச்சயமா முத்தம் கொடுத்திருப்பேன். இங்க வந்து எங்களுக்கு இதையெல்லாம் சொன்னதற்கு மிகவும் நன்றின்னு சொன்னாங்க.”

இதை கேட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், இந்த உலகம் அதிக கேடுள்ளதாக மாறிக்கொண்டிருக்கிறது. கொள்ளை, கொலை, வெறுப்பு, அழிவு எல்லாம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதாவது, நீங்களும் நானும் இயேசு எதற்காக வந்தார் என்பதை தெரிந்துகொள்ளாமல், நம்முடைய இருதயத்தின் கேள்விகளுக்கு பதிலை பெற்று மாற்றம் அடையும் நிலை சாத்தியமாகாது. நாம் அதுவரை சொத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் பதிவிக்காகவும் ஒருவரை ஒருவர கொலை செய்பவர்களாயிருப்போம். அதினால் லாபம் என்ன? அடுத்த தலைமுறையினரும் அதையே பின்பற்றிடுவார்கள். இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார் என்பதை நிதானித்து  அறிந்து ஒப்புரவாக வேண்டும். அவர் தம்முடைய பெரிதான கிருபையினால் உங்களுக்கு நித்திய ஜீவனையும் மனம் புதிதாகுதலையும் அருளியிருக்கிறார். எளிதான ஜெபத்தின் மூலம் அவரில் நம்பிக்கை வைத்திட முடியும், நா நிச்சயமாக சொல்லுகிறேன், அந்த ஜெபத்தை கருத்தோடு செய்தால், ஜெபத்தின் முடிவில் நீங்க புதிய மனிதன் புதிய மனுஷி என்ற நிச்சயம் உங்களுக்கு கண்டிப்பாக ஏற்ப்படும், ஏன்னா அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கும் தேவன்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நிகழ்ச்சியை முடிப்பதற்கு முன் நீங்கள் எப்படி இயேசுவோடு ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டீர்கள் என்பதை பற்றி சில வார்த்தைகளை சொல்லி, நீங்கள் இவர்களை ஜெபத்தில் நடத்தும்படியாக விரும்புகிறேன், நேயர்களில் சிலர் ஆவலோடு இருக்கலாம், நீங்க தேவனிடத்தில் ஏறெடுத்த அந்த ஜெபம், உங்கள் வாழ்வை மாற்றியது, அவர் உங்கள் வாழ்வில் வந்தார் – தத்ரூபமாக தோன்றினார், அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டது, இயேசுவை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். நேயர்களுக்கும் தேவனை அறிந்துகொள்ளும் அந்த அனுபவபூர்வமான வல்லமையின் வெளிப்பாடு பெற விரும்புகின்றனர். அவர்களால் இதை பெற முடியும் என்ற நம்பிக்கையில்லை. உங்களுடைய சொந்த அனுபத்தை பற்றி சொல்லுங்க.

Dr.ரவி சகரியாஸ்:   அதாவது, இதெல்லாம் சூத்திரங்கலாக எழுதப்பட்டவை அல்ல. அல்லது அறிவு பெருகும்படியானதும் அல்ல. உண்மையில், இயேசு உங்களுடைய வாழ்வில் வரும்போது, பெரிய பாலத்தை கடந்துபோகும்படி அவர் உங்களுக்கு உதவிடுவார் – தலையிலிருந்து இருதயத்திற்கு செலும் பாலம். அதை என்னுடைய 17வது வயதில் நான் அனுபவித்தேன். என்னால் ஜெபித்து இயேசு கிறிஸ்துவை என்னுடைய வாழ்வில் வரும்படியாக அழைத்து அவரை ஏற்றுக்கொண்டேன், அவரை என்னுடைய இரட்சகராக இருக்கும்படியான எலி ஜெபம் என்னக்குள் அவர் பெரிய மாற்றத்தை உண்டாக்க செய்தது. அவர் என்னுடைய வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை சில காலத்திற்கு பிறகு என் தகப்பனாருடைய வாழ்வையும் மாற்றினார். இதே அனுபவம் உங்கள் வாழ்விலும் ஏற்ப்படவேண்டும் என நீங்கள் விரும்பினால் உங்களுடைய தலைகளை தாழ்த்தி எனக்கு பின்பாக இந்த எளிமையான ஜெபத்தை சொல்லுங்கள். வாழ்க்கையில் ஒரே ஒருமுறை என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள், ஒவ்வொருவரியாக சொல்லுங்கள். உங்கள் நலனுக்காக செய்யுங்கள்:

பரலோக பிதாவே, என்னை நீர் நேசிப்பதற்காக நன்றி. உம்முடைய மன்னிப்பு எனக்கு அவசியமாயிருக்கிறது. உமது இரட்சிப்பு எனக்கு அவசியம். கர்த்தராகிய இயேசுவே, என் இருதயத்தில் வாரும், என்னை மாற்றும், உம்முடைய பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும். உம்மை பின்பற்ற எனக்கு உதவிடும். இந்த நேரத்தில் உம்மை நான் ஏற்றுக்கொள்கிறேன் என் வாழ்வை உமக்கு அர்ப்பணிக்கிறேன். உமக்கு நன்றி, பிதாவே. இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  தேங்யூ , ரவி, நல்லது. மேலும், நேயர்களே, இந்த ஜெபத்தை நீங்கள் கருத்தோடு ஏறெடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். வேதத்தில் உங்களுக்கான ஒரு வாக்குத்தத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. “அவருடைய நாமத்தை நோக்கி கூப்பிட்டு தொழுதுகொள்ளுகிற எவனும்,” தேவனை  நோக்கி நீங்க கூப்பிடும்போது என்ன நடக்கும் தெரியுமா? “இரட்சிக்கப்படுவான்” அவர் தம்முடைய கிரியைகளை உங்கள் வாழ்வில் செய்திட துவங்கிடுவார், அப்போது அனுபவபூர்வமாக நீங்கள் அவரை உங்கள் வாழ்வில் கண்டுகொள்வீர்கள்.

அடுத்த வாரம் நாம் ஐரோப்பாவில் இருந்து வந்திருக்கும் கடினமான கேள்விகளை பற்றி பார்க்க இருக்கிறோம், ஐரோப்பாவின் மாணவர்களின் கேள்விகள். அடுத்த வாரம் தவறாமல் பார்த்து ரவியினுடைய பதில்களை கவனிப்பீர்கள் என நம்புகிறேன்.

 

 

 எங்களுடைய மற்ற டிவி நிகழ்சிகளை பார்க்க எங்களுடைய ஜான் அன்கேர்பெர்க் ஷோ ஆப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்திடுங்கள்.

“இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கான ஜெபம்” JA show.org

 

இயேசு திரைப்படம்

கிறிஸ்தவராவது எப்படி

நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்? கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது. கிளிக் செய்யவும்.

ஆடியோ பைபிள்